சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் 422 பேர். இவர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் இருந்த காலம் 1340 வருடங்கள் 2 மாதங்கள் 20 நாட்கள். நாட்டு விடுதலையின் போது 20 வயதிற்கும் குறைந்தவர்களை விட்டு விட்டால் ஒவ்வொருவரும் சராசரியாக சிறையில் இருந்த காலம் 5 ஆண்டுகள். ஆங்கில ஆட்சியிலும், அதற்குப் பின்னர் காங்கிரசின் அடக்குமுறை காலத்திலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலம் 348 வருடங்கள், 10 மாதங்கள், 15 நாட்கள்.

மௌலானாவும் சுவாமியும்! 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் பூரணசுதந்திரம் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவர் மௌலானா ஹஸ்ரத் மொஹானி. வழிமொழிந்தவர் சுவாமி குமரானந்தா. இருவரும் கம்யூனிஸ்ட்டுகள். “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கம் மௌலானா ஹஸ்ரத் மொஹானியால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply