இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008

பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் ,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.

ஐயா

பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவில் வீடுகட்ட மானியமும் – பாதுகாப்பும் வழங்கக் கோருதல் தொடர்பாக

புதுச்சேரி மாநிலத்தில் பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினரான இருளர்ஃ வேட்டைக்காரன் சமூகத்தைச் சேர்ந்த 55 குடும்பங்களுக்கு மாநில முதல்வர் அவர்களால் கடந்த ஆண்டு 2007 ல் அக்டோபரில் இலவச மனை வழங்கப்பட்டது.

21.06.2008 ல் வருவாய் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இருளர் இன மக்களுக்கு 0.00.64 என்ற அளவில் அளவை செய்து வழங்க முற்பட்டனர். இந்நிலையில் புராணசிங்குபாளையத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் சிலர் அளவை செய்வதை தடுத்துள்ளனர். அதிகாரிகள் தங்களின் பணியைச்செய்யவிடாமல் விரட்டியுள்ளனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களில் மேலும் ஒடுக்கப்பட்டுள்ள காட்டு மேட்டுப்பகுதியில் குடியிருந்து வரும் இருளர் இனமக்களுக்கு அரசு மனைவழங்கியும் வீடுகட்டிக்கொள்வதை தடுப்பது தீண்டாமையின் கோர வடிவமாகும். மேலும் அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுப்பதும் மிகக்கடுமையான குற்றமாகும். மேற்படி சம்பவங்கள் நடைபெறுகிற போது திருபுவனை காவல் துறையினர் வேடிக்கை பார்த்துள்ளதும் வேதனையளிப்பதாக உள்ளது.

ஆகவே, பழங்குடியின மக்களுக்கு நியாயம் கிடைக்க, அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டிக்கொள்ளவும், வீடுகட்ட மானியம் வழங்கவும், தாங்கள் உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்மந்தப்பட்ட ஆதிக்க சாதியினர் மீது சட்டத்தின் கீழ் உரிய பொறுத்தமான நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்.

நன்றி

இங்ஙனம்

(வெ.பெருமாள்)
செயலாளர்

Leave a Reply