புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் மக்கள் தலைவர் வ. சுப்பையாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்வதை காட்டிலும் முதன்மை பங்கு இருக்கிறது என்று சொல்வதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும். குறிப்பாக கோட்டக்குப்பம் முஸ்லிம்கள் வ.சுப்பையா அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். கோட்டக் குப்பத்தில் இருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வ.சுப்பையாவை அமர வைத்து 50 ஆயிரம் பேர் ஊர்வலமாக விடுதலைப் பெற்ற புதுச்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர். ‘ஜனசக்தி’ 1954 நவம்பர் புரட்சி மலரில் தோழர் ஐ.மா.பா. என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் ஐ.மாயாண்டி பாரதி புதுச்சேரி விடுதலைப் பெற்ற வெற்றி விழா பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில், புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் கோட்டக்குப்பம் முஸ்லிம்களின் பங்குக் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார். “புதுவையை அடுத்துள்ள இந்திய யூனியன் பிரதேசத்தில் கோட்டக்குப்பத்தில் சுப்பையாவின் போராட்டதளம் இருப்பதால், அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரள ஆரம்பித்து விட்டார்கள். முதல்நாளே சுப்பையாவைக் கோட்டக்குப்பம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று ‘மக்கள் தலைவர்’ வ.சுப்பையாவுக்கு மாலையிட்டுப் பாராட்டினார்கள் மீர்நவாப்ஸா, முக்கிய பங்குண்டு என்று கூறுவதைக் ஓ.எம்.ஹனிப், நாட்டாண்மை அப்துல் காட்டிலும், அவருக்கு முதன்மையான கபூர் முதலியவர்கள், “வெற்றி விழாவை கோட்டக்குப்பம் முதலில் கொண்டாடுகிறது” என்று பெருமைபடக் கூறினார்கள். முஸ்லிம் தாய்மார்களும் குழந்தைகளும் பெரியோர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பாராட்டிச் சென்றார்கள். நவம்பர் 1ம் நேதி அதிகாலை 4 மணியிலிருந்தே பிரஞ்சிந்தியல்லையில் ஜன சமுத்திரம் திரள ஆரம்பித்துவிட்டது. பல கிராமங்களிலிருந்து தாரை தப்படைகள், சிலம்ப விளையாட்டு, பொம்மையாட்டம், கோமாளி, குறவன் குறத்தி, கோலாட்டம், பூச்சக்கரக்குட்டை, பரிவட்டம் கோலாகலங்களுடன் 2000 தொண்டர்கள் கைகோர்த்துச் செல்ல கோட்டக்குப்பத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.” “ஹிந்து பத்திரிகை நிருபர் 1.11.1954 ஹிந்துவில், குறிப்பிடுவது போல,”பிரஞ்சுக்காரர்கள் ரொம்ப ரொம்ப பயப்படக்கூடிய ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர் சுப்பையாதான். இந்திய யூனியன் எல்லையை அடிக்கடிகடந்து வந்து, இந்தியப் பிரதேசத்தில் வாழும் முதலியார்பேட்டை மேயர் நந்தகோபால் போன்ற அகதிகளைக் கடத்திச் சென்ற பிரஞ்சிந்திய போலீஸார் அடுத்துள்ள
கோட்டக்குப்பத்தில், தொழிலாளர்களுடனும் மீன் பிடிப்பவர்களுடனும் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த கப்பையாவை நெருங்கக்கூட தையரியமற்றுப்போனார்கள். எல்லையிலிருந்து ஒரு கல்லெறி தூரத்தில் இருந்தும்கூட அவர்களுக்குத் தைரியமில்லை” என்று எழுதினார்.” மக்கள் தலைவர் சுப்பையாவை பாதுகாத்த பெருமைக் கோட்டக்குப்பம் முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் உண்டு. என்பது வெறும் வரலாற்று உண்மை மட்டுமல்ல. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக, தேசப் பற்றற்றவர்களாக சித்தரிக்கப்பட்டு, தொடர்ந்து முஸ்லிம்கள் தாங்கள் நேசப்பற்று உடையவர்கள்ண்பதை நிரூபிக்கப்படவேண்டிய காலக்கட்டத்தில், புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளனர் என்கிற உண்மை தோழர் எழுதிய கட்டுரை மூலம் வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > புதுச்சேரி விடுதலை போராட்டத்தில் கோட்டகுப்பம் மக்களின் பங்கு
புதுச்சேரி விடுதலை போராட்டத்தில் கோட்டகுப்பம் மக்களின் பங்கு
posted on