ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார் ஆகிய இருவரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்க ளாக உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் புதுச்சேரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக கிரயம் செய்து கொண்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 22 அன்று, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரின் குடும்பத்தார் பேரில் செய்யப்பட்ட கிரயத்தை ரத்து செய்து கோவில் நிலத்தை மீண்டும்கோவிலுக்குத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இவர்கள் மீது வருமான வரித்துறை விசாரணை நடத்தவும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புக்குழு சார்பில் இப்பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு கண்டன இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்சனையின் அனைத்து அம்சங்களும் ஊடகங்களில் இதுவரை வெளியாகவில்லை.
64 ஆயிரம் சதுர அடி கபளீகரம்
புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, சாரம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் பொதுச் சொத்து, காலி மனை சுமார் 64 ஆயிரம் சதுர அடியை கொண்டது. இதன் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல். இந்த சொத்து இரண்டு கட்டங்களாக மோசடியாக கபளீகரம் செய்யப்பட்டு தனியார்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட மோசடியில் 32 ஆயிரம் சதுர அடி பறிபோயிருக்கிறது. மீதமுள்ள 32 ஆயிரம் சதுரடி நிலத்தை இரண்டாம் கட்ட மோசடியில் மேற்படி தந்தை, மகன் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டு பலர் பறித்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புக்குழு இந்த நில மோசடியைக் கண்டித்தும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு, கோவில் நிலத்தை மோசடியாக கிரயம் செய்து கொண்ட அனைவர் மீதும், அரசும் காவல்துறையும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலத்தைக் கோவிலுக்குத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி இயக்கம் நடத்தி வருகிறது. இப்பிரச்சனை எழுந்தபோது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் இது மோசடிக் கிரயம் என யாராவது நிரூபித்தால், 2 கோடி பரிசு தருகிறேன் என்றும், அரசியலைவிட்டே விலகுகிறேன் என்றும் தனது யூ டியூப் சேனலில் அறிவித்தார். யாரும் நிரூ பிக்காததால் 3 கோடியாக பரிசுத் தொகையை அதி கரிக்கிறேன் என சவடால் அடித்தார். அடுத்த கட்டமாக, கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தன்று, தான் காமராஜரைப் போல நேர்மையானவன் என்று கூறிக் கொண்டார்.
உயிலை மோசடியாக மாற்றியவர்கள்
புதுச்சேரி நகரத்தின் மையமான இடத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு 1935-ஆம் ஆண்டில் முத்துசாமி என்பவர் 64 ஆயிரம் சதுரடி நிலத்தை உயிலாக எழுதிவைத்தார். கோவில் நிலம் என்று அனை வராலும் அறியப்பட்ட அந்த நிலத்தைத்தான் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டு பலரும் தங்கள் பெயரில் மோசடி கிரயம் செய்து அபகரித்துள்ளனர். கோவி லுக்கு நிலத்தை எழுதி வைத்தவர் இறந்த பிறகு, அவர் எழுதிய உயிலை அவரே ரத்து செய்ததாக வும், வேறு ஒரு நபர் அனுபவிக்கலாம் என மாற்று உயிலை எழுதியதாகவும் மோசடி ஆவணம் தயா ரித்து பாஜக எம்.எல்.ஏக்கள் இந்த நிலத்திருட்டை செய்துள்ளனர். இறப்பு சான்றிதழும் மோசடியானது என்று தகவல் வருகிறது.
1995- பதிவில் 2008- செல் எண்
இறந்த நபர் பிற்காலத்தில் இறந்ததாக இறப்புச் சான்றிதழ் வேறு பெறப்பட்டிருக்கிறது. புதிய மோசடி உயில் 1995 ஆம் ஆண்டு ஹலீல் பாஷா என்ற நோட்டரி முன்னிலையில் பதிவு செய்யப்படுகிறது. உயில் எழுதிக் கொடுத்தவரின் இடது கை பெரு விரல் ரேகை ஆவணத்தில் பதிவு செய்யப்படுகிறது. 1995 தேதியிட்ட இந்த ஆவணத்தை தயார் செய்த நோட்டரியின் சீலில் பத்து எண்கள் கொண்ட செல்போன் எண் ஒன்று குறிப் பிடப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செல்போனே வராத காலத்தில் பதியப்பட்ட இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட அந்த எண் 2008 ஆம் ஆண்டில் இருந்துதான் செயல்படத் தொடங்கி இருக்கிறது. இந்த உயிலில் சாட்சி கையெழுத்திட்ட வர்கள் யார் என்றே தெரியவில்லை.பாஜக கூட்டணி ஆட்சியின் பின்புலத்தில்…
பாஜக கூட்டணி ஆட்சியின் பின்புலத்தில்…
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை, மகன் இருவரும், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டு பலரும் 32 ஆயிரம் சதுர அடி நிலத்தை மனைகளாகப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். கோவில் நிர்வாகம் தனது சொத்தை பாதுகாப்பதற்காக போட்ட வேலிகள், சுற்றுச்சுவர்கள் அனைத்தையும் இருவரும் அகற்றி இருக்கிறார்கள். 2021 செப்டம்பர் 22அன்று ‘அவசரகால நடவடிக்கையாக’ படுவேகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளால் முடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்றே மாதகாலத்தில் அவர்களது உறவினர்கள் பெயரில் பட்டா மாற்றப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்யக்கோரிய விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்க எம்.எல்.ஏக்கள் ஜான் குமார், ரிச்சர்ட்ஸ் ஜான் குமாரின் விண் ணப்பங்கள் மட்டும் மின்னல்வேகத்தில் நகர்ந்தி ருக்கின்றன.
17 பேர் கைது
இந்த மோசடி கிரயத்திற்கு எதிராக கோவில் நிர்வாகத்தினரால் வழக்கு தொடரப்பட்டு, உடந்தை யாக இருந்த மாவட்ட பதிவாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டு 17 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் மீதும் காவல்துறை யினரும், மாநில அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி காவல்துறை யினர் வழக்கு விசாரணை செய்து வருகிறார்கள். மோசடி நடந்துள்ளது என்பதற்கான பூர்வாங்க விபரங்கள் இருக்கின்றன என்ற புலனாய்வு விசாரணை அறிக்கையின் அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இரண்டு மாநிலங்க ளிலும் உள்ள பாஜக, மாநில அரசுகள் அறநிலை யத்துறை கோவில் நிர்வாகங்களில் இருந்து வெளி யேற வேண்டும் எனத் தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகிறது. கோவில்கள் அரசினுடைய பராமரிப்பில் இருக்கின்றபோதே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவில் நிலத்தை அபகரிக்கிறார்கள். அரசின் அற நிலையத்துறை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேறிவிட்டால், பல நூறு கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகளின் கதி என்ன ஆகும் என்பதற்கு இந்த புதுச்சேரி விவகாரம் ஓர் எடுத்துக்காட்டு. புதுச்சேரி மாநிலத்தில் மோசடி கிரயம் செய்து நிலத்தை அபகரிப்பது என்பது புதிதல்ல. தொடர்ந்து பல ஆண்டு காலமாக இத்தகைய மோசடிகள் நடந்து வருகின்றன. மாநில அரசு மோசடி கிரயம் செய்து நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
அக்டோபர் 6 – பேரணி
கோவில் நிலத்தை அபகரித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நீதிமன்ற உத்தரவின் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் அக்டோபர் 6- அன்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.