தியாக தீபம் எம்.எம்.கல்புர்கி

கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி 2015 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 30) காலை ஒன்பது மணியளவில் அவரது வீட்டில் RSS அமைப்பின் சனாதன் சன்ஸ்சா அமைப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்துத்துவத்தையும் லிங்காயத்து சாதிவெறியையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து நின்ற பார்ப்பன எதிர்ப்புச் சிந்தனையாளர் இவர். சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பேராசிரியர் கல்புர்கி. அவரது நூல்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டவை என விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். பேராசிரியரின் கருத்துகள் வலதுசாரி அமைப்புகளின் பகையைத் தேடித்தந்தன. அவர் படுகொலை செய்யபொஅடுவதற்கு சில மாதங்களுக்கு முன்புவரை அவருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர் கேட்டுக்கொண்டதால் அந்தப் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

2013 ஆம் ஆண்டு மகராஷ்டிராவில் பகுத்தறிவாளரான நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பேராசிரியர் கல்புர்கி கொல்லப்பட்டார். அதன் பின்னர் 2017 செப்டம்பரில் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார்.

மகராஷ்டிரா, கர்னாடகா எனப் படுகொலைகளை நிகழ்த்திய RSS சனாதனப் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிலும் செயல்படுகிறார்கள். அவர்கள்மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மைக் காலங்களில் நாம் இழந்திருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் உயிர்கள் விலை மதிப்பற்றவை. இந்துவெறி பாசிஸ்டுகளுக்கும் அவர்களது அடியாட்படையாக உள்ள சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்கப் போராடுவதுதான் நாம் இத்தகையோருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

Leave a Reply