
2021 பிரச்சாரத்தில் ஒன்றியப் பிரதமர், உள்துறை அமைச்சர்,
நிதி அமைச்சர் ஆகியோர்
வாரி இறைத்த வாக்குறுதிகள் ஏராளம். ‘பெஸ்ட்’ (BEST) புதுச்சேரி எங்களது குறிக்கோள் என்றார் பிரதமர் மோடி.
B- வர்த்தகம், E-கல்வி, S-ஸ்பிரிச்சுவல் நகரம், T-சுற்றுலா மையம் என்பதே அந்த முழக்கம். “மக்களுக்கு வீடு தேடி வரும் நடமாடும் நியாய விலைக் கடைகள் அமையும், நிதி பற்றாக்குறையே இருக்காது” என்றார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். “இரட்டை எஞ்சின் சர்க்கார் மூலம் மாநில உரிமைகள் காக்கப்படும்” என்றார்
அமித்ஷா. அபரிமிதமான வளர்ச்சி என்று கூறி, மீண்டும் பதவி சுகத்தைத் தொடர இவர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள்!
சீரழிந்த தொழில் வளர்ச்சியும் ஆலைகளின் முடக்கமும்.
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார மையமான ஏ.எப்.டி உட்பட மூன்று பஞ்சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால் ஆட்சி யாளர்களின் ஆதரவுடன் அந்த ஆலைகளுக்குச் சொந்தமான கோடிக் கணக் கான ரூபாய் மதிப்புள்ள இடங்களை
“ரியல் எஸ்டேட்” மாஃபியாக்கள் குறி வைத்துள்ளனர்.கூட்டுறவு நூற்பாலைகள், சர்க்கரை ஆலைகளின் கதவுகள் பூட்டியே கிடக்கின்றன. அரசு சார் கூட்டுறவு நிறுவனங்கள் எந்த நோக் கத்திற்காக உருவாக்கப் பட்டதோ, அந்த நோக்கங்கள் சிதறடிக்கப் பட்டன. அங்கு பணியாற்றும் ஊழியர்
களுக்குப் பல மாதங்களாக ஊதியமே வழங்கப்பட வில்லை. அதிகாரத்திற்கு வந்த வாய்ச்சொல் வீரர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. புதிய வேலை வாய்ப்புகள், உழைப்பாளி மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்து வதற்கான எவ்வித நடவடிக்கையும் கிடையாது. இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் வாய்ப் பந்தல்களே.
லாபம் தரக்கூடிய மின்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க விடாமுயற்சிகள் நடந்து கொண்டே யிருக்கின்றன. புதுச்சேரியின் வளமான கடற்கரையை அதானிக்குக் கைமாற்றுவதற்கான திரை மறைவு வேலைகள் நடக்கின்றன. 54,000 ஹெக்டேராக இருந்த விவசாய நிலங்கள், சட்டவிரோதமான ரசாயன தொழிற் சாலைகள் உருவானதாலும், தனியார் கல்வி நிறுவனங்களின் ஆக்கிரமிப் பாலும், ரியல் எஸ்டேட்டு களாலும் 10,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டன. விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் துப்புரவுப் பணியாளர் களாக ஊதிய உத்தரவாதம் இல்லாமல் நிர்க்கதியாய் விடப் பட்டுள்ளனர்.
சாராய நகரமாக மாறும் அவலம்.
புதுச்சேரியின் நீராதாரத்தை, இயற்கை வளங்களைச் சீரழிக்கும் வகையில் புதிய புதிய சாராய ஆலைகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. “சாராய ஆலைகளைத் திறந்து பெண்
களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம்!” என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பது
புதுச்சேரியின் ஆகப்பெரிய அவலம். 2018-19 பட்ஜெட்டில் அரசு மொத்த வருவாயில் கலால் வரியின் பங்கு 25 சதவீதம். ஆனால் 2024-25 பட்ஜெட்டில் கலால் துறையின் மூலம் 75 சதவீத வரி வருவாய் எனக் காட்டப் பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி குறித்தோ அதற்கான திட்டமிடலோ கானல் நீராகவே இருக்கிறது.
காணாமல் போன கல்வி வாய்ப்புகள்.
ஆரம்பக் கல்வியில் சி.பி.எஸ்.ஐ (CBSE) பாடத்திட்டத்தை எவ்வித முன்னறிவிப்பும் பயிற்சியும் இன்றி அரசுப் பள்ளிகளில் திணித்ததன் மூலம், 2023-24 கல்வியாண்டில் 10,000 மாணவர்கள் இடை நிற்றலுக்கு ஆளாகினர். உள்கட்டமைப்பை உரு வாக்காமல் ஒன்றிய அரசின் வற்புறுத்தலுக் காகச் செய்த இந்தத் திணிப்பால், கிராமப்புற ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி விரட்டப் பட்டனர்.
புதுச்சேரி பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக மாக மாற்றப்பட்டது, ஆனால் அங்குத் துணைவேந்தர் இல்லை; நிர்வாகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. நிதி பற்றாக்குறை மற்றும் ஊழலால் அது வெறும் விளம்பரப் பலகையாய் ஆடிக்கொண் டிருக்கிறது. லாசுப்பேட்டை யில் இயங்கி வந்த புகழ்பெற்ற ‘புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறு வனம்’ ஐந்து ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. தமிழ் மொழியைக் கற்ற மாணவர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கிருந்த ஒரே நிறுவனம் இது. பிற மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி களுக்கும், பிரான்ஸ், சீன நாட்டு மாணவர் களுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்த நிறுவனம் இன்று அநாதையாகக் கிடக்கிறது.
ஸ்பிரிச்சுவல் சிட்டியா? ‘ஸ்பிரிட்’ சிட்டியா?
புதுச்சேரியை ‘ஆன்மீக நகரம்’ ஆக்குவோம் என்றவர்கள், அதை ‘ஸ்பிரிட்’ (மது) சிட்டியாகத்தான் மாற்றி இருக்கிறார்கள். புதுச்சேரி என்பது எக்காலத்திலும் உழைப்பாளி மக்களையும், படைப்பாளி களையும் அரவணைத்த நகரம். ஆனால் அவைகளைச்
சீரழிக்கும் மது, போதைக் கலாச்சாரத்தைத்தான் 5 ஆண்டுகளாக மோடி-அமித் ஷா தலைமை யிலான கூட்டம் செய்து கொண்டிருக் கிறது.
கடந்த காலங்களில் அழகிய கடற்கரை, பாரதியார்-பாரதிதாசன் நினைவிடங்கள், மலிவு விலை ஆங்கிலோ – பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சண்டே மார்க்கெட் போன்றவற்றால் சர்வதேச பயணிகள் வந்தனர். ஆனால் தற்போது வார இறுதி நாட்களில் மதுபானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
101 மதுக்கடைகள் இருந்த புதுச்சேரி தற்போது 600-க்கும் மேற்பட்ட கடைகளால் நிரம்பியுள்ளது. ‘ரெஸ்ட்ரோ பார்கள்’ திறந்து இளைஞர்களின் எதிர் காலத்தைச் சீரழிக்கும் இவர்களின் சுயநலத்தால், காரைக்கால் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 64 இளம் விதவைகள் உருவாகி இருக்கிறார்கள். இது தான் இவர்களது சாதனையா?
ஊழலின் உச்சமும் நிர்வாகச் சீர்கேடும்.
கோவில் மற்றும் தனிநபர் சொத்துக்களை அபகரித்தல், தரமற்ற மருந்து கொள்முதல், லஞ்ச ஊழல் எனப் பல துறைகளில் முறைகேடுகள் தலை விரித்தாடு கின்றன. குறிப்பாக, *பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை ஊழல் புதுச்சேரி வரலாற்றி லேயே மிகப்பெரியது.* உயர்மட்ட அதிகார வர்க்கத்தின் துணை இன்றி இது சாத்தியமில்லை. *மருந்துக் கட்டுப் பாட்டுத் துறை தொடர்ந்த வழக்கைத் திடீரெனத் திரும்பப் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது.* சி.பி.ஐ (CBI) இந்த வழக்கை மிகவும் தாமதமாகவே பதிவு செய்துள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை தீவிரப்படுத்தப் பட்டு, சம்பந்தப் பட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற் குள் கொண்டு வர வேண்டும்.
கடனில் சிக்கவைக்கப்பட்ட புதுச்சேரி.
இரட்டை எஞ்சின் ஆட்சி புதுச்சேரியில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு முதல் பட்ஜெட்டில் 11,000 கோடி நிதி கோரியது, ஆனால் ஒன்றிய அரசு அனுமதித்தது வெறும் 9,924 கோடி மட்டுமே. 2024 செப்டம்பரில் முதல்வர் கூடுதல் நிதி கோரியும், ஒன்றிய அரசு செவிசாய்க்க வில்லை. 16-ஆவது நிதிக் குழுவிலும் புதுச்சேரிக்கு இடம் வழங்கப்பட வில்லை. ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைச்
செயல்படுத்தும் ‘சோதனை எலியாக’ புதுச்சேரியை மாற்றியது தான் இவர்களது சாதனை.
புதுச்சேரி சட்டமன்றம் வர்த்தகச் சூதாடிகளின் கிளப்புகளாக மாறுவதைத் தடுத்து நிறுத்தி ஆக வேண்டும். இவர்களை மீண்டும் அனுமதித்தால் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக விற்று விடுவார்கள். இந்த அரசியல் வியாபாரிகளை அதிகாரத்தி லிருந்து அப்புறப்படுத்த வேண்டும். *புதுச்சேரியின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க மாற்றுத் திட்டத்தை நடை முறைப்படுத்த இடதுசாரி வேட்பாளர் களை தேர்ந்தெடுக்க வேண்டும்.*
அந்த வகையில்:
திருபுவனை தொகுதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மா. தட்ணாமூர்த்தி (அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம்)
லாஸ்பேட்டை தொகுதி:
தோழர் ஆர்.ராஜாங்கம்(அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம்)
*உழவர்கரை* தொகுதி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் *நாரா.கலை நாதன்* (கதிர் அரிவாள் சின்னம்)
மாஹே சட்டமன்றம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அசோக்குமார்
ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டு மாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களைக் கேட்டுக் கொள்கிறது.
S.ராமச்சந்திரன்
மாநிலச் செயலாளர்
CPI(M) – புதுவை.










