டாக்டர் நஜிபுல்லா

டாக்டர் நஜிபுல்லா (Najibullah)
(ஆகஸ்ட், 1947 – செப்டம்பர் 27, 1996)

கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். நஜிபுல்லா ஆப்கானிஸ் தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

1965 இல் நஜிபுல்லா கம்யூனிச ஆப்கானிஸ்தான் மக்கள் சனநாயகக் கட்சியில் இணைந்து 1977 இல் அதன் மத்திய குழுவில் உறுப்பினரானார் 1978 இல் ஆப்கானிஸ்தானில் இவரது கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனினும் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு காரணமாக இவர் ஐரோப்பாவுக்கு நாடுகடத்தப்பட்டார். 1979 இல் நாட்டை சோவியத் ஒன்றியம் முற்றுகையிட்டு கைப்பற்றியதை அடுத்து காபூல் திரும்பினார். 1980 இல் இரகசிய காவற்துறையின் தலைவரானார். 1981 இல் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினரானார்.

மே 4, 1986 இல் பப்ராக் கர்மால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகவே, நஜிபுல்லா பொதுச் செயலாளரானார். கர்மால் நாட்டின் ஜனாதிபதியாக மேலும் சில காலம் இருந்தாலும், அதிகாரம் முழுக்க நஜிபுல்லாவுக்கு கைமாறியது.

நவம்பர் 1986 இல் நாட்டின் அதிபரானார். அத்துடன் புதிய அரசமைப்புச் சட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். அதன்படி பல-கட்சி அரசியல், பேச்சுச் சுதந்திரம், போன்றவற்றை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவரது ஆட்சிக் காலத்தில் முஜாஹுதீன் படைகளுக் கெதிராக சோவியத் படைகள் பலத்த தாக்குதலை 1985-86 காலப்பகுதியில் நடத்தியிருந்தது. பனிப்போர் முடிவ டைந் ததை அடுத்து 1987 ஜூலை 20 இல் சோவியத் ஒன்றியம் தனது படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை அடுத்து, ஏப்ரல் 16, 1992 இல் அதிபர் பதவியில் இருந்து விலகி னார். அமெரிக்க ஆதரவு இஸ்லாமியத் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய விமானப் படைத்தளத்தையும் சாரிக்கார் நகரையும் கைப்பற்றியிருந்தனர். ஏப்ரல் 17 இல் காபூலில் உள்ள ஐநா அலுவலகத்தில் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தார்.

1992 முதல் நஜிபுல்லாவின் மனைவியும் மூன்று மகள்களும் நாடுகடந்த நிலையில் புது தில்லியில் வாழ்ந்து வந்தனர். தாலிபான் தீவிரவாதிகள் காபூலைக் கைப்பற்றியதை அடுத்து நஜிபுல்லாவும் அவரது சகோதரரும் செப்டம்பர் 27, 1996 இல் வெட்டவெளியில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

நஜிபுல்லாவின் காலத்தில்தான் ஆப்கனின் பெண்கள் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளில் இருந்து கொஞ்சமாவது விடுதலை பெற்றவர்களாகவும் கல்வி பெற்றவர் களாகவும் இருந்தனர். ஆப்கன் இஸ்லாமிய முஜாஹி தீன் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியதும், பெண்களிடமிருந்து கல்வி பறிக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் கட்டாயமாகப் புர்காவுக்குள் திணிக்கப்பட்டனர்.

ஆப்கன் மக்களுக்கான அதிநவீனங்களாகத் துப்பாக்கிகளும், கன்னிவெடிகளுமே கிடைத்தன. எங்கெங்கும் கன்னி வெடிகள் இன்னமும் வெடிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் நாடு.

எந்த அமெரிக்காவின் கைப்பாவையாகி, இஸ்லாமியத் தீவிர இயக்கத்தினர் நஜிபுல்லாவின் அரசைச் சிதைத்தன ரோ, அதே அமெரிக்கா, இரட்டைக் கோபுரத் தாக்குத லைக் காரணம் காட்டி, பின் லேடனைத் தேடுகிறேன் என்ற பெயரில், ஆப்கனின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து, ஆப்கனைச் சல்லடைக் கண்களாகத் துளைத்தெடுத்தது. தனது பொம்மை அரசை நிறுதி ஆப்கன் மக்களை நிரந்தரப் போர்ச் சூழலில் வைத்துள் ளது. அல்லாவை வணங்குவதைத் தவிர வேறு மார்க்கமன்றி அவதியுறுகின்றனர் ஆப்கனின் சாதாரண மக்கள்.

ஆப்கன் அல்பபெட் (Afghan Alphabet) என்ற மொக்பல்ஃப் இயக்கிய படம் பார்த்தால் தெரியும் ஆப்கன் பெண்களும், பையன்களும் கல்விக்காகப் படும் அவதி.

ராம்போ படம் பார்த்தால் தெரியும், அமெரிக்கா ஆப்கனைக் காப்பாற்றுகிறேன் என்று எத்தனை சாகசங்கள் செய்து அதனை ஏமாற்றியது என்று.

இஸ்லாமிய சமூக மக்களை நவீன வாழ்வியலை நோக்கி நகர்த்தியதில் டாக்டர் நஜிபுல்லாவுக்கு வரலாற்றின் பக்கங்களில் என்றும் இடமுண்டு. நாளை நவீன வாழ்வை நோக்கி என்றேனும் ஒருநாள் நகரும் ஆப்கனின் மக்கள் சமுதாயம் அப்போது டாக்டர் நஜிபுல்லாவைப் பெருமிதத்துடன் நினைவுகூரும்.

Leave a Reply