என்ஆர் காங்.-பாஜக அரசின் கொடுமைகளுக்கு புதுச்சேரி மக்கள் பதிலடி தருவது உறுதி

மாறாக தனது கார்ப்பரேட் மதவாத நிகழ்ச்சி நிரலை பரிசோதித்துப் பார்க்க,ஒன்றிய பிரதேசமான புதுச்சேரியையும் அதன் மக்களையும் சோதனை எலிகளாக மாற்றி வருகிறது. இதை அரசியல் சாசன செயல் முகவரான துணைநிலை ஆளுநரின் உதவி யுடன் அரங்கேற்றுகிறது.

ரேசன் கடையை மூடியவர்கள்

பாஜகவின் முதல் மக்கள் விரோதச் செயல், மாநிலம் முழுவதும்  நியாயவிலைக் கடைகளை மூடி யதே! அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிப்பதற்குப் பதிலாக அதற்கு இணையான தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்கிற உறுதியை மக்களுக்கு அளித்து இதைச் செய்கிறது. புதுச்சேரி தவிர, பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் நியாய விலைக்கடைகள் மூடப்படவில்லை. இந்தக் கொடுமையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2அன்று ஒரு பேரணி யையும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. கட்சியின் அரசியல் தலமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் நேரு வீதியில் திரண்டு தலைமைச் செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மக்களின் ஆதரவோடு நடந்த மார்க்சிஸ்ட் கட்சிப் போராட்டத்தின் சக்தியை உணர்ந்த தலைமைச் செயலாளர், ஆவன செய்வதாக உறுதியளித்தார். புதுச்சேரி மக்களின் உணர்ச்சிப் பூர்வமான எதிர்ப்பை மேலிடத்திற்கு தெரிவிக்கவும் செய்தார். மாநில உணவு வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன் ஒரு  மாதத்திற்குள் மாநிலத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டு எல்லா அத்தியா வசியப் பொருட்களும் வழங்கப்படும் என்று அறி வித்தார். இதைத் தொடர்ந்து சிவப்பு அட்டைதாரர்க ளுக்கு ரூ.600உம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.300உம் உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டது.

கல்வித் துறையில் பாஜக தலையீடு

பாஜகவின் அடுத்த நகர்வு கல்வித்துறையில் வெளிப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்துமாறு  தன்னுடைய கூட்டணி கட்சியை கையைப் பிடித்து முறுக்கும் விதமாக  கட்டா யப்படுத்தியது.    கல்வித்துறையின் பங்கேற்பாளர்களான மாண வர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி நிறுவ னங்களை கலந்தாலோசிக்காமல் இந்தக் கொள்கை செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து அரசுப் பள்ளிகளி லும் ஆங்கிலவழி பயிற்றுவித்தலும் தமிழ் விருப்பப் பாடமாகவும் ஆக்கப்பட்டு  சிபிஎஸ்இ பாடத் திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கல்வி அமைச்சர் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கும் என்று உறுதி அளித் துள்ளார். அது தொடர்ந்து நீடிக்கும் என்று கூற இயலாது.

தனியாரிடம் போன  மதிய உணவுத் திட்டம்.

மாணவர்கள் 3,5,8 வகுப்புகளில் பொதுத் தேர்வுக ளையும் 9ஆம் வகுப்பிலிருந்து பருவ நிலைத் தேர்வுக ளையும் எதிர்கொள்ள வேண்டும். இதுபெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் இடைநிற்றலுக்கு இட்டுச் செல்லும். கல்வித் துறையால் சீராக செயல் படுத்தப்பட்டு வந்த மதிய உணவுத் திட்டம் இப்போது அக்சய பாத்ரா எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இது ஆர்எஸ்எஸ்சுடன் தொ டர்புள்ள ஓர் அமைப்பாகும். அக்சய பாத்ராவினால் வழங்கப்படும் உணவு மலிவான தரத்தில் உள்ளது. மேலும் வேண்டுமென்றே முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை தவிர்க்கப்படுகின்றன.

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதை யும் மதிய உணவுத் திட்டத்தை திடீரென தனியார் ஒப்பந்ததாரருக்கு கொடுத்ததையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளது. பல்வேறு கூட் டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,ஊர்வலங்களுக்குப் பிறகு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் கல்வித்துறை முழுவதுமாக முற்றுகை இடப்பட்டது. பாஜகவின் இந்த தாக்குதலுக்கு எதிரான போராட்டம் மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து இன்னும் தொடர்கிறது.

ஆலை மூடல்; ஊதியம் பறிப்பு

ஆங்கிலோ-பிரெஞ்சு ஜவுளி ஆலை, சுதேசி ஆலை  மற்றும் பாரதி மில் போன்ற பெரிய ஜவுளி ஆலைகள் பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளன. இந்த ஆலைகளுக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் திறந்து புதுச்சேரி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்ப தற்குப் பதிலாக என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசாங்கம் அவற்றை நிரந்தரமாக மூடுவதாக அறி வித்துள்ளது.

புதுச்சேரி அரசாங்கத்தின் கீழ்  பாசிக் (PASIC), அமுதசுரபி போன்ற பல கூட்டுறவு ஆலைகள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள்  இயங்காமலுள்ளன. கூட்டுறவுத் துறையி லுள்ள பாசிக், அமுதசுரபி, பாப்ஸ்கோ (POPSCO) பான்டெக்ஸ், பான்ஃபால்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளிகளும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக ஊதியம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளிகளின் துய ரங்களைப் போக்கும் விதமாக அவற்றை சரி செய்ய  எந்த பிரயோசனமான முயற்சிகளும் எடுக்கப்பட வில்லை.

மின்துறை தனியார்மயம்

என் ஆர் காங்கிரஸ் – பாஜக அரசாங்கத்தின் அடுத்த கார்ப்பரேட் – இந்துத்துவா நிகழ்ச்சி நிரல், மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவது. ரூ.20,000 கோடி மதிப்புள்ள துணைமின் நிலையங்கள், கட்ட டங்கள், நிலம் மற்றும் இணைப்புகள் போன்ற மின்துறை யின் சொத்துகள்  சொற்ப தொகைக்கு தனியாருக்கு கையளிக்கப்பட உள்ளன. இதனால் இனிமேல் மின்சாரம் வழங்குவது என்பது ஒரு சேவையல்ல; அது ஒரு வணிக நடவடிக்கையாக மாறப்போகிறது.  அதனால் மின் கட்டணங்கள் வானளாவ அதிகரித்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தும்.

ஏழை மற்றும் நலிந்த மக்கள், சிறுதொழில், கை வினைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படும் மின்சாரம், லாப வேட்டை கொண்ட முதலாளிகளால்  நிறுத்தப்படும். தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு உதவுவதற்காக என் ஆர் காங்கிரஸ்- பாஜக அரசாங்கம்  புதுச்சேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் திறன்மீட்டர்களை (ஸ்மார்ட் மீட்டர்கள்) நிறுவ ரூ.400 கோடி செலவிடுகிறது. இந்த தொகையை மாதா மாதம் மீட்டர் வாடகை யாக வசூலிக்க உள்ளது. இந்த திறன் மீட்டர்களை நிறு வியபின் மின்சாரக் கட்டணம் உச்ச நேரம், பகுதி உச்ச நேரம் மற்றும் சாதாரண நேர கட்டணங்கள் என  அளவு கடந்த விகிதங்களில் வசூலிக்கப்படும். இப்போ துள்ள பயன்பாட்டிற்குப் பின்னான கணக்கீட்டிற்குப் பதிலாக பயன்பாட்டிற்கு முன்பான பில்கள் மட்டுமே நடப்பில் இருக்கும். உரிய நேரத்தில் பில்கள் கட்டப்படவில்லையென்றால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படும். இந்த மீட்டர்களை பழுதுபார்ப்பது எதிர்காலத்தில் பய னாளர்களின் தலையில் விழும்.

ஒரு லட்சம் கையெழுத்துகள்.

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதன் கேடுகளை மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் மக்கள் திரள் இயக்கங்களும் மக்களிடையே பரவலாக பரப்புரை செய்தன. மின்சாரத்தை தனியார்மயமாக்குவதின் அபாயங்களை விளக்கும் இயக்கத்தை நடத்தி மக்களி டமிருந்தும் ஆளுமைகளிடமிருந்தும் 1 லட்சம் கையெ ழுத்து பெறப்பட்டது. இந்த போராட்டத்தின் முத் தாய்ப்பாக டிசம்பர் 13அன்று அனைத்துத்தரப்பு மக்க ளையும் உள்ளடக்கிய மாபெரும் பேரணி நடத்தப் பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்து கடிதங்களும் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் மாஹே, காரைக்கால், ஏனாம் மற்றும் புதுச்சேரி மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி கொட்டும் மழையில் 2024 ஜனவரி 8 அன்று நடத் தப்பட்டது. ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நியாய விலைக்கடைகளை திறக்கக் கோரியும் மின்சாரத் துறையை தனியார்மயமாக்கு வதை திரும்பப் பெறவும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தவும் உடனடியாக ஜவுளி  மற்றும் கரும்பு ஆலை களை திறக்கவும் மாஹேயில் விரைவாக மீன்பிடி துறைமுகத்தை கட்டி முடிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

நியாய விலைக்கடைகளை திறப்பது இனியும் தாம தமானால் இந்தப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு எட்டப்படும்வரை நீடித்த முற்றுகை நடத்தப்படும் என்று கட்சித் தலைமை எச்சரித்துள்ளது. பாஜக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசின் கார்ப்பரேட் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலான மக்கள் விரோத நடவடிக்கை ஒவ்வொன்றையும் புதுச்சேரி மக்கள் தீவிரமாக எதிர்ப்பார்கள். புதுச்சேரி மக்கள் சோதனை எலிகளாக துயரங்களை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை என் ஆர் காங்கிரஸ் – பாஜக அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Img 20220615 190707.jpg– கட்டுரையாளர் எஸ்.கோவிந்தராஜன்

Leave a Reply