நீடூழி வாழ்க நெல்சன் மண்டேலா! சிபிஎம் புகழஞ்சலி

மனிதகுலத்தின் விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வும் பணியும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்றும், உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த அந்த மாமனிதர் நீடூழி வாழ்க என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் மாபெரும் தலைவரும், பிரிட்டிஷ் ஆட்சியின் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் வென்ற ஒப்பற்ற தலைவருமான நெல்சன் மண்டேலா மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

உலகிலேயே வெள்ளை இன ஆதிக்கம் என்ற அதி தீவிர இனவெறி சித்தாந்தத்தில் ஊறிப்போன, மிகவும் கொடூரமான, அப்பட்டமான பாசிச ஆட்சிகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறிப் பிரிவினையையும் ஒடுக்குமுறையையும் கொண்ட கட்ட மைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தஆட்சிக்கு எதிராக நீண்ட நெடிய, வீரம்செறிந்த, ரத்தம் தோய்ந்த ஓர் உன்னத மான விடுதலைப்போராட்டத்தை நடத்தி யவர் நெல்சன் மண்டேலா.

எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த தென்னாப் பிரிக்க மக்களின் உணர்வுகளில் பொதிந் துள்ள சின்னம் மட்டுமல்ல; அவர்-சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித மாண்புகளுக்காக உலகெங்கிலும் போராடிக் கொண்டிருக்கிற அனைத்து மக்களின்சின்னமாக உள்ளங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.1918ம் ஆண்டு பிறந்த நெல்சன் மண்டேலா, 1942ல் தனது 25 வயதில்ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந் தார்; அக்கட்சியின் இளைஞர் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றினார்.

தென்னாப்பிரிக்காவில் விடுதலை இயக்கத்திற்கும், நிறவெறிக்கு எதிரான போராட்டத் திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங் கிய ‘சுதந்திரச் சாசனத்தை’ உருவாக்கியதில் மிக முக்கியப் பங்கு வகித்தார். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் மூலமாக வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தின் பாதையில், பல்வேறு பொறுப்புகள் அவ ருக்கு அளிக்கப்பட்டன; அத்தனை பொறுப்பு களையும் மிகுந்த கடமை உணர்வோடு நிறைவேற்றினார்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைமறைவு ராணுவப்பிரிவாக இருந்த உம்கோந்த்தோ வி சிஸ்வே என்ற ராணுவத்தின் தளபதியாக செயல்பட்டார். தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி யின் பற்றுமிக்க உறுப்பினராகவும் செயல் பட்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிலும் பணியாற்றினார். தனது உறுதிமிக்கப் போராட்டத்தின் காரணமாக நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் தனிமைச்சிறையில் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டார்;

தென்னாப்பிரிக்காவின் கடல் பகுதியில் உள்ள ராபென் தீவில் அமைந்துள்ள கடுமையான காவல் கட்ட மைப்பு கொண்ட பாலெஸ்மூர் சிறையில் அடைக்கப்பட்டார்; அங்கு அவருக்கு சாதாரண அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட் டன; மருத்துவ சிகிச்சையும் மறுக்கப்பட்டது; சிறையிலிருந்த காலம் முழுவதிலும் கடுமையாக உடல் உழைப்புச் செலுத்த நிர்ப்பந் திக்கப்பட்டார்.

ஆனாலும், எதேச்சதிகார நிறவெறி ஆட்சிக்கு அவர் ஒருபோதும் தலை வணங்கவில்லை; இந்தக் கொடுமைகள் எவையும் அவரது உள்ள உறுதியை, விடுதலை உணர்ச்சியை உடைத்தெறிய முடியவில்லை. உலகம் முழுவதும் அலைஅலையாக மக்கள் போராட்டங்கள் எழுந்ததன் விளைவாக தென்னாப்பிரிக்க நிறவெறி அரசும் அதன் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளும் வேறு வழியின்றி மண்டேலா வை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்றார் மண்டேலா; அதைத் தொடர்ந்து சுதந்திர தென்னாப்பிரிக்காவின் முதல் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, அந்நாட்டின் முதலாவது கருப் பின ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதி காரத்திற்கு வருகிற பல்வேறு தலைவர்களைப் போல் அல்லாமல், தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு முறை மட்டுமே பதவியில் இருந்த பின்னர் தானாகவே முன்வந்து ஓய்வை அறிவித்தார்.

எனினும், அதற்குப் பின்னர் தனது இறுதி மூச்சு வரை ஆப் பிரிக்க மக்களின் வாழ் நிலைமையை உயர்த்துவதற்காக இடைவிடாமல் இயங்கிக்கொண்டே இருந்தார்.சிறையிலிருந்து விடுதலை அடைந்த பிறகு மண்டேலா, இந்தியாவிற்கு பய ணம் மேற்கொண்டார்; நீதியற்ற இந்த உலககட்டமைப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு சக போராளியாக மண்டேலாவை பார்த்தஇந்திய மக்கள் அவருக்கு மிகப்பிரம் மாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்திய மக்கள் தன் மீது கொண்டிருக்கும் அன்பையும் வாஞ்சையையும் பார்த்து பிரமித்துப்போனார் மண்டேலா. குறிப் பாக கல்கத்தாவில் அப்போதைய இடது முன்னணி அரசின் முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு தலைமையில் மேற்குவங்க மக்கள் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு மிகப்பிரம்மாண்டமாக அளித்த மாபெரும் வரவேற்பு மண்டேலாவை நெகிழச் செய்தது. மண்டேலாவைக் காண்பதற்காக ஒட்டுமொத்த கல்கத்தா மாநகரமும் எழுச்சி யோடு எழுந்து நின்றது.மண்டேலாவின் மறைவால், தங்களதுவாழ்நாள் முழுவதும் தாங்கள் நேசித்த மக்களின் வாழ்நி லைமையை உயர்த்து வதற்காகப் போராடிய தனது தலைசிறந்த தவப்புதல்வர்களில் ஒருவரை இந்த உலகம் இழந்துவிட்டது.

அவர், கடுமையான ஒடுக்கு தலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளது மக்களின் உண்மையான முன்னோடியாகத் திகழ்ந் தார். அவரது மறைவால், இவ்வுலகில் சுதந்திரத்திற்காகவும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிற அனைத்து மக்களும் தங்களது மதிப்பு மிக்க நண்பரை, தோளோடு தோள் நின்ற தோழரை இழந்திருக்கிறார்.

அவரது மறைவு மனித குலத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அதேநேரத்தில், அவரது வாழ்வும், பணியும் விடுதலைக்கான மனித குலத்தின் பயணத்தில் என்றென்றும் வழிகாட்டும்.அத்தகைய மகத்தான தலைவரின் மறைவால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த துக்கம் கொள்கிறது; மண்டேலாவின் குடும்பத்தினருக்கும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்க தொழிற்சங்க இயக் கம் மற்றும் தென்னாப்பிரிக்க மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரி வித்துக்கொள்கிறது.

அநீதி, ஒடுக்குமுறை மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து இந்த உலகை விடுவிப்பதற்கான போராட்டத்தை மேலும் மேலும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதே நெல்சன் மண்டேலாவுக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.நெல்சன் மண்டேலா புகழ் நீடூழி வாழ்க!

ஆங்கிலத்தில வாசிக்க 

 

Leave a Reply