தூக்குமேடைக் குறிப்பு அன்றும் இன்றும் – நூல் பிறந்த கதை

நாஜி ஹிட்லரின் ஜெர்மன் படையெடுப்பாளர்களால் செக் மக்கள் சித்திரவதைக்குள்ளானபோது அதையும் செக் அரசாங்கத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரமும் இரகசிய வேலைகளும் செய்தபோது பத்திரிக்கையாசிரியர் ஜூலிஸ் பூசிக் கைது செய்யப்பட்டு தீவிர அடக்குமுறைக்கு உள்ளாகி 8/9/1943இல் பெர்லினில் தூக்கிலிடப்பட்டார் .
சிறையில் அவர் எழுதிய குறிப்புக்களை செக் காவலாளி கொலின்ஸ்கி மூலம் ரகசியமாக நம்பிக்கை மிக்க மனிதர்கள் மூலம் பாதுக்காக்கப் பட்டு வந்த குறிப்புக்களை ஜூலிஸ் பூசிக்கின் மனைவி அகுஸ்தினா பூசிக் சேகரித்து 1949 இல் வெளியிட்டார் .

டில்லியில் இருந்த பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் இதை ஆங்கிலத்தில் ” Notes from the Gallows ” வெளியிட்டது .

இதைப் படித்த தமிழ்ப்புத்தகாலய நிறுவனர் கண.முத்தய்யா இதன் விஷய கனத்தால் ஈர்க்கப்பட்டு , அதைத் தமிழில் கொணர விரும்பினார் . கம்யூனிஸ்ட் தோழர் இஸ்மத் பாட்ஷா ஒரு வாரத்திற்குள் மொழிபெயர்த்துத் தர இசைந்து மொழிபெயர்த்தார் .கண.மு தமிழில் பதிப்பிக்க இடையில் அனுமதியும் பெற்றார் .

ஆங்கிலத்தில் வெளிவந்து ஒரு மாதத்திற்குள் 1949 அக்டோபரில் தமிழில் வெளிவந்தது இந்த அரிய நூல் !

அன்றைய பாரதப் பிரதமர் ஆங்கில நூலைப் படித்து , ” second in the world ” எனப் பாராட்டினார் ” .உலகிலேயே முதலாவது மிகச் சிறந்த மரண வாக்குமூலம் சாக்கரடீசுடையது; இரண்டாவது ஜூலிஸ் பூசிக்குடையது ” எனப் பாராட்டினார் நேரு .

கண.மு இப்படிக் கூறுகிறார் :
” அதைத் தமிழில் வெளியிட்டதில் பெருமை அடைந்த நாங்கள் அதை விற்று முடித்ததிலும் பெருமை அடைந்தோம் ! அது வெளிவந்த நான்கு மாதங்களுக்குள் மூன்றாயிரம் பிரதிகளையும் தனிப்பட்டவர்களே வாங்கிவிட்டார்கள் ! ஒரு சிறந்த அரசியல் நூலை எந்த நிறுவனத்தின் தயவும் இல்லாமல் வாசகரிடையே நான்கு மாதத்தில் மூன்றாயிரம் பிரதிகள் விற்க முடிந்த தமிழ்நாட்டில் , பல வசதிகள் , கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற வளர்சிகள் ஏற்பட்டு இருக்கும் இன்றைய நிலையில் நல்ல நூல்கள் ஆயிரம் பிரதிகள் விற்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை எப்படி வந்தது என்பது யோசிக்க வேண்டிய விஷயம் .
தமிழ் நாட்டில் கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர , வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றே கருதுகிறேன் ” என்று பதிப்பனுபவம் மிகக் கொண்ட கண.முத்தையா அவர்கள் 1996இல் குறிப்பிட்டுக் கவலை கொண்டார் .
இந்த 66 ஆண்டுகளில் 13 பதிப்புகள் வந்துள்ள நூல் ” தூக்குமேடைக் குறிப்பு ”

ஜூலிஸ் பூசிக் எழுதி இஸ்மத் பாட்ஷா மொழிபெயர்ப்பில் தமிழ்புத்தகாலயம் தினமணி ‘ நாளிதழ்

Leave a Reply