தோல்வி பயத்தால் NR காங்கிரஸ் அரசியல் சாகசம்

தோல்வி பயத்தால் N. R காங்கிரஸ் அரசு,

  • கொள்ளைப்புற நியமனம்
  • பூமிபூஜை
  • நலதிட்டம் வழங்குதல்

போன்ற அரசியல் சாகசத்தில் ஈடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வண்மையாக கண்டிக்கிறது.

N.R காங்கிரஸ் 5 ஆண்டு ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் துயரங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்படவில்லை. தனி நபர் ஆதிக்கம் மிக்க, இடைக்கால பட்ஜெட்டின் ஆட்சிகாலமாகவே N.R  அரசு செயல்படுகிறது. மாநில மக்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லை இதனால் மாநில அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது.

2016 ல் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கபட உள்ள நிலையில் அவசர அவசரமாக பூமிபூஜைகள், கால்கோல்விழா, திறப்பு விழா, ஆதரவாளர் பகுதிகளில் நல திட்டங்கள் வழங்குதல், கொள்ளைபுற நியமனங்கள் என அரசியல் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது. தோல்வி பயத்தால் முந்தை காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அதே சாகசத்தில் N.R அரசு செயல்படுகிறது.

ஆளுங்கட்சி, எதிர் கட்சி, மற்ற கட்சி பிரமுகர்கள் என பலருக்கும் தலா 25 முதல் 50 நபர் என்ற வகையில் அரசு பனிகள் கொள்ளைப்புறமாக நியமனம் செய்யப்படுகிறது. பணம் பெற்றுக்கொண்டு நிரந்தரமற்ற பணிகளில் இளைஞர்களை சேர்ப்பதும், பிறகு ஆட்சி மாறிய பின் அவர்களை வேலை விட்டு தூரத்துவதும்,  இட ஒதுக்கீட்டு கொள்கையை குழிதோண்டி புதைப்பதும், வேலை வாய்ப்பகத்தை உதாசீனப்படுத்துவதும் தொடர்கிறது.

பல அரசு ஊழியர்களுக்கு பல மாத சம்பள பாக்கிகள் நிலுவையில் உள்ளன. விளையில்லா மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை. மேற்படி திட்டத்திற்கும், இதர அரசு திட்டங்களுக்கும் அரசு ஊழியர்களின் வைப்பு நிதியில் பெருமளவு பணம் எடுக்கப்படுகிறது இதனால் அரசு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மாநில அரசின் இத்தகைய மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெறிவித்துக்கொள்கிறது.

ஆகவே மாநில N.R அரசு, கொள்ளைபுற நியமனம், அரசு ஊழியர் வைப்பு நிதியில் பணம் எடுத்தது, விளையிள்ளா மிக்சி, கிரைண்டர் திட்டத்திற்கான நிதி, ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசு வலியுறுத்துகிறது.

இப்படிக்கு,
ஆர்.ராஜாங்கம், செயலாளர்.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்குழு குழு, புதுச்சேரி.

Leave a Reply