புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவத்தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், முன்னால் கௌரவத்தலைவரும்மான சி.எச்.பாலமோகனன் கடந்த மோ மாதம் காலமானார். தன்னலம் கருதாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் புதுச்சேரி விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக வளம்வந்தவர் சி.எச்.பாலமோகன். எனவே அவரது பிறந்தநாளில் அவரது திருவுருவச்சிலை திறப்புவிழா அரசு ஊழியர் சம்மேளன வளாகத்தில் செப்டம்பர் 30ல் நடைபெறுகிறது. சிஐடியூ அகில இந்திய தலைவர்களுள் ஒருவர் ஏ.கே.பத்மநாபன் விழாவில் பங்கேற்று மறைந்த தலைவர் சி.எச்.பாலமோகனின் வெண்கள சிலையை திறந்து வைக்கிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், முன்னால் சட்டமன்ற உறுப்பினரும்மான கே.பாலபாரதி, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவர்களுள் ஒருவர் எம்.துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம்,சம்மேளன முன்னால் தலைவர் நா.சண்முகம் ஆகியோர் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம் மரம் நடுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் நடைபெறுகிறது என்றனர். இச்சந்திப்பின் போது சம்மேளன நிர்வாகிகள் கீதா, லலிதா, கிரிஸ்தோபர், ஞானசே