இந்த ஆண்டும் உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நிலை மோசம் அடைந்துள் ளது. இந்த ஆண்டும் இந்த அறிக்கையை தவ றென சாடியுள்ளது மோடி அரசாங்கம். 107 ஆவது இடத்தை பிடித்துள்ள இந்தியா, சக ஆசிய நாடுகளான பாகிஸ்தான் (99), வங்க தேசம் (84), நேபாளம் (81) போன்ற நாடுக ளுக்கும், ஏகாதிபத்திய பொருளாதாரத் தடை களால் தவிக்கும் வடகொரியா (97), வெனி சூலா (85), ஈரான் (29) போன்ற நாடுகளுக்கும் பின்னால் உள்ளது. இந்தியாவின் குறியீட்டு எண்ணான 29.1 (அதிகம் என்றால் மோசம்) என்பது உலகிலேயே மிக ஏழ்மையான பகுதியான சஹாரா-விற்கு தெற்கே உள்ள நாடுகளின் சராசரி குறியீடான 27.0-ஐ விடவும் மோசம். 2014இல் 28.2-ஆக இருந்த இந்தியக் குறியீடு, 3.2 சதவீதம் மோசம் அடைந்துள்ள விகிதம் தான் தெற்கு ஆசியாவிலேயே மிக அதிகம். மோடி அரசின் புலம்பல்கள் ஒரு புறம் இருக்க, இந்தியா ஏன் இவ்வளவு மோசம் அடைந்து வருகிறது? பட்டினிக் குறியீட்டில் நான்கு பரி ணாமங்கள் உள்ளன – ஊட்டச்சத்தின்மை விகிதம், போதிய வளர்ச்சியற்ற குழந்தை கள், போதிய எடையற்ற குழந்தைகள், குழந்தைகள் இறப்பு விகிதம்.
ஊட்டச்சத்தின்மை
இந்தியாவின் குறியீடு மோசம் அடைய முக்கியக் காரணம் போதிய ஊட்டச்சத்து அற்றவர்களின் விகிதம் அதிகரித்து இருப்பது தான். இது 2014இல் 14.8சதவீதமாக இருந்து, இன்று 17.1சதவீதமாக மோசம் அடைந்துள் ளது. இந்த விகிதாச்சாரக் கணிப்பில் தவறு உள்ளதாக மோடி அரசு சாடுகிறது. ஆனால் இந்த விகிதம் கணக்கெடுக்க பட்டினிக் குறியீடு ஆய்வில் பயன்படுத்தப்படும் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1798 கலோரிகள் என்ற வரம்பு, இந்திய அரசு வறுமை விகிதத்தை கணக்கெடுக்க பயன்படுத்தும் ~2100 கலோரி கள் என்ற வரம்பை விட குறைவு. தன் சொந்த அதிகாரப்பூர்வ வரம்பை விட குறைவான ஊட்டச்சத்து வரம்பு இருந்தாலும், அதிலும் மோசம் அடைந்து வருகிறது இந்தியா. கொரோனா காலத்தில் “கரீப் கல்யாண் யோஜனா” மூலம் அளிக்கப்பட்ட இலவச தானியங்களை கணக்கில் கொள்ளவில்லை என்கிறது இந்திய அரசாங்கம். இந்த திட்டத் தில் அளிக்கப்படும் பண்டங்கள் போதுமா னது அல்ல என எதிர்க்கட்சிகள் அன்றே கூறின.
மேலும், இந்த திட்டம் உண்மையில் திறம்பட செயல்பட்டதென்றால், அரசே கணக்கெடுப்பு நடத்தி ஊட்டச்சத்து அளவை வெளியிடலாமே? உண்மையில், 2012க்குப் பிறகு ஊட்டச்சத்து குறித்த அதிகா ரப்பூர்வ தரவுகளே இல்லை. 2018இல் நடந்த தேசிய மாதிரி கணக்கெடுப்பில் வறுமை அதி கரித்துள்ளதாக (ஊடகம் மூலம் கசிந்த) தகவல் வெளியானதால், அந்த அறிக்கையை மோடி அரசாங்கம் மூடி மறைத்தது. அதன் பின் நிலைமை மேலும் மோசமே அடைந்தது. ஆனால் கொரோனா காலத்தில் வெளியான தனியார் கணக்கெடுப்பு அறிக்கைகள் அனை த்தும், பலதரப்பட்ட மக்களாலும் போதிய ஊட்டச்சத்து பெற முடியாததை காட்டியது. நவதாராளமயக் கொள்கைகள் பல கால மாக மக்களை வாட்டி வதைத்து வந்தாலும், மோடி அரசாங்கக் காலத்தில் இது கடுமை யாக மோசம் அடைந்துள்ளது. பண மதிப் பிழப்பு, ஜி.எஸ்.டி துவங்கி, கார்ப்பரேட் நல னுக்காக மக்களை பிழிந்து எடுத்து வரும் மோடி ஆட்சி காலத்தில், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும், புதுச்சேரியில் காண்ப தைப் போல பொது விநியோகத் திட்டமும் கடுமையாக வலுவிழக்கச் செய்யப்பட்டு வரு கிறது. மேலும் இன்று பணவீக்கம் உச்சத்தை தொட்டு, உணவுப் பொருட்களின் விலை கடு மையாக உயர்ந்துள்ள போதிலும், பொது விநி யோகத்தை நீட்சி செய்து, விலை கட்டுப்பாடு கள் விதித்து, மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய எந்த முயற்சியும் இல்லை. இந்த சூழலில் ஊட்டச்சத்தின்மை அதிகரித்து இருப்பதில் ஆச்சரியமில்லை.
குழந்தை ஊட்டச்சத்து
தரவரிசைப் பட்டியலில் இந்தியா பின்னு க்குச் செல்வதற்கு குழந்தை ஊட்டச்சத்தில் போதிய முன்னேற்றம் இல்லாததே காரணம். குடும்பநல ஆய்வு தரவுப்படி 2015-16 மற்றும் 2019-21 இடையே வயதுக்கேற்ற உயரமற்ற குழந்தைகள் விகிதம் 38.4சதவீதத்திலிருந்து 35.5சதவீதத்திற்கும், உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகள் விகிதம் 21சத வீதத்திலிருந்து 19.3 சதவீதத்திற்கும் தான் குறைந்துள்ளது. அதிர்ச்சிகரமாக இந்த விழுக்காடு உலகிலேயே மிக அதிக அளவு களில் ஒன்று. கொரோனா காலத்தில் மதிய உணவு நிறுத்தப்பட்டதால் போதிய எடை யற்ற குழந்தைகள் விகிதம் அதிகரித்து தான் இருக்கும். மேலும் கடுமையாக எடை யற்ற குழந்தைகள் விகிதமும் (7.5 சத வீதத்திலிருந்து 7.7 சதவீதம்), ரத்தசோகை உள்ள குழந்தைகள் விகிதமும் (58.6சதவீதத் திலிருந்து 67.1 சதவீதம்) அதிகரித்துள்ளது! ஆனால் இந்தியாவின் அண்டை நாடுக ளான நேபாளமும், வங்கதேசமும் குழந்தை ஊட்டச்சத்தில் அதிவேக வளர்ச்சி காண்கின் றன. 2001க்கு முன் முறையே 56.6 சதவீதம் மற்றும் 58.5சதவீதம் இருந்த நேபாளம் மற்றும் வங்கதேசத்தின் வளர்ச்சியற்ற குழந்தைகள் விகிதம், இன்று இந்தியாவைவிட குறைவாக முறையே 31.5சதவீதம் மற்றும் 28சதவீதமாக உள்ளது. இதனால் தான் இந்தியா பட்டிய லில் பின்னுக்குச் சென்றது.
இளைஞர்கள் அதிகம் உள்ளதால் இந்தி யாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என கணித்துக் கொள்கிறது இந்திய அரசாங்கம். ஆனால் நாளைய இளைஞர்களான இன் றைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை உலகிலேயே மோசமான நிலையில் தான் இருக்கிறது என்பது பெரும் அவலம். ஊரக சுகாதாரம் மற்றும் குழந்தை நலத்திற்கு பாடு படும் ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகா தார மையம் பரிசு வழங்கினாலும், இன்றும் பணி நிரந்தரத்திற்கும், போதிய ஊதியத்திற்கு பல லட்சம் ஊழியர்கள் மோடி அரசிடம் போராடி தான் வருகின்றனர். ஏற்கனவே இருந்து வந்த குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டங்களை மோடி “போஷன்” என பெயர் மாற்றினாலும், அவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கீடும் இல்லை, அவற்றால் நம் குழந்தை கள் போஷாக்கு பெறுவதாகவும் தெரிய வில்லை. 30 ஆண்டு தாராளமய, தனியார்மய காலத்தில் வளர்ச்சி விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக அரசு மார் தட்டுகிறது. ஆனால் இதனால் கொழுத்தது என்னவோ ஆதானி, அம்பானி போன்ற பெரும் பணக் காரர்கள் மட்டும் தான். ஆனால் இதுபோல் அதிவேக வளர்ச்சி கண்ட மக்கள் சீனம், வறுமையை ஒழித்து, பட்டினிப் பட்டிய லில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆனால் முத லாளித்துவ இந்திய அரசோ, உணவு விநி யோகத்தையும், குழந்தை நலத் திட்டங்களை யும் வலுப்படுத்தி, பேரிடர் காலங்களில் மக்க ளை காக்கும் கட்டமைப்பை உருவாக்கும் அடிப்படைக் கடமையைக் கூட நிறைவேற்றத் தவறிவிட்டு, இன்று “குறியீடு சரியில்லை”, “இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறார்கள்” என கூச்சல் இடுகின்றனர். குறியீட்டில் குறை பாடுகள் இருந்தாலும் கூட, ஒரு ஜனநாயக அரசு, அதிலிருந்து மக்கள் நலன் குறித்த படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பாசிசத் தன்மை கொண்ட பிரி வினைவாத மோடி அரசிடம் நாம் ஜனநாயக மாண்புகளை எதிர்பார்க்க முடியுமா? -கட்டுரையாளர் – அபினவ் சூர்யா