புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவதும் தலையாயக் கடமையாகும்.
இன்னொரு தேசத்தை ஒடுக்கும் எந்த தேசமும் சுதந்திர தேசமாக இருக்க முடியாது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினை தான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது.
சமூக உழைப்பிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டு, வீட்டு வேலை செய்வதுடன் நிறுத்தப்படுகின்ற வரை பெண் விடுதலை சாத்தியமில்லை.
ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளி மக்களின் நலன்களை சொல் மூலம் பாதுகாத்து வருவதைப் போல் செயல் மூலமும் பாதுகாத்து நிற்போம்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி இன்று நிலவும் சமுதாயத்தை படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.
உங்களுக்கு எதிரான சக்திகளிடம் அமைப்பு, கட்டுப்பாடு, தொடர்ச்சியான அதிகார பலம் ஆகிய எல்லாச் சாதகங்களும் உள்ளன. அவற்றை எதிர்த்து பலமான சக்திகளைக் கொண்டுவராவிட்டால் நீங்கள் முறியடிக்கப்படுவீர்கள், அழிக்கப்படுவீர்கள்.
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கம்.
பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு கம்யூனிச சமுதாயம் முடிவு கட்டும்.
இயற்கை உயிரினங்களின் வளர்ச்சி பற்றிய விதியை டார்வின் கண்டுபிடித்தது போன்று, மனித வரலாற்றின் வளர்ச்சி பற்றிய விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.
நம்மிடம் மென்மையைக் கடைபிடிக்காத முதலாளி வர்க்கத்தை அன்பு வழிமுறைகளில் வெல்வது சாத்தியமில்லை.
புரட்சிகர எழுச்சி என்பது மிகவும் திட்டவட்டமாக இல்லாத பரிமாணங்களைக் கொண்ட நுண் கணிதமாகும். இவற்றின் மதிப்பு நாள்தோறும் மாறலாம்.
வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது.