மற்ற மாநிலங்களைபோல் புதுச் சேரியில் ரேசன் கடைகளை திறந்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் என்.பிரபுராஜ் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமக்கிருஷ்ணன் கலந்து கொண்டார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் உள்ளிட்ட அனை வரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் சிவப்பு கலர் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாதம் நபர் ஒன்றுக்கு 5 கிலோ என்ற வகையில் வழங்கி வந்த இலவச அரிசி திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரோடு நிறுத்தியதால், ஏழை-எளிய மக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலமை மேலும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை முறையாக ரேசன் கடைகளை திறந்து அதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும்.
இலவச அரிசி திட்டம்
புதுச்சேரி அரசால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கிய வந்ததை காலம் தாழ்த்தாமல் ரேசன் கடைகளை திறந்து பொருட்களாகவே வழங்க வேண்டும். பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். ஏற்கனவே அந்த திட்டத்தில் உள்ள நிலுவைத் தொகையை பய னாளிக ளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
ரேசன் கடை ஊழியர்
ரேசன் கடை மூடப்பட்டதால் 50 மாதத்திற்கு மேல் ஊதிய பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களில் பத்துக்கும் மேற்பட்ட வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். எனவே, இனியும் இந்த நிலை தொட ராமல் இருக்க பாதிப்புக்குள்ளான ரேசன் கடை ஊழியர்களுக்கு சேர வேண்டிய நிலுவை ஊதி யத்தை உடனடியாக புதுச்சேரி அரசு வழங்க முன்வரவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.