புதிய சமூக அமைப்பும் புரட்சிகர மருத்துவரும்- சேகுவேரா

தோழர் சே ஒரு தலைசிறந்த மருத்துவரும் கூட. கியூபாவின் புரட்சிக்குப் பின் நடைபெற்ற ஒரு மருத்துவர்கள் மாநாட்டில் 1981960ல் அவர் ஆற்றிய ஒரு வித்தியாசமான உரையாகும் இது.

கியூபாவின் மக்கள் தினசரி நூற்றுக்கணக்கான பொது நிகழ்ச்சிகளை நடத் திக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் தங்களது சுதந்திரத்தை, புரட்சிகர முன்னேற்றத்தை முழுமையான விடுதலை நோக்கிய பாதையை வெளிப் படுத்தி வருகிறார்கள். ஆயினும் இவைகளின் ஒரு பகுதியாக இருந்து வரும் இந்த எளிய நிகழ்ச்சி. என்னைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது.

நான் மருத்துவராக எனது பணியை துவக்கியதை, பொதுவாக அனைவருமே அறிந்திருக்கக்கூடும். அன்றைய தினம் நான் மருத்துவராகும்
பொருட்டு அதற்கான கல்வியை துவக்கியபோது, இன்றையதினம் கொண்டி குக்கிற பெரும்பாலான புரட்சிகரமான கோட்பாடுகளை நான் கொண்டிருக்கவில்லை. எல்லா மனிதர்களைப் போலவே நானும் எனது துறையில் வெற்றி பெறவே விரும்பினேன்.

மருத்துவ அறிவியல் துறையில் புகழ் பெற்ற ஆய்வாளராகும் கனவுகளுடன் நான் இருந்தேன். மனித குலத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் படியான மருந்துகளை கண்டுபிடிப்பதான கற்பனைகளை நான் கொண்டிருந்தேன். தனிப்பட்ட ரீதியில் அவை எனக்கு புகழ் தேடித்
தருவதான கனவுகளையும் கொண்டிருந்தேன். இவை அனைத்துமே தினம் நான் வாழ்ந்த அச்சூழலின் வெளிப்பாடுகளே, மருத்துவப் படிப்பை முடித்தவுடன், விசேஷ சூழ்நிலையின் காரணமாக மட்டுமின்றி எனது தனித்துவம் பொருந்திய குணாம்சத்தினாலும் நான் அமெரிக்க நாடுகள் முழுவதுமான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டேன். ஹைதி, நீங்கலாக அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் நான் சென்றதோடு மட்டுமின்றி, அவை பற்றியும் ஓரளவு அறிந்தவளாகவும். இருந்தேன். முதலில் மாணாக்கனாகவும் பின்னர் மருத்துவனாகவும் நான அங்கெல்லாம் சென்றமையால் வறுமை, பசி, நோய் ஆகியவை பற்றி நெருக்கமாக அறியத் துவங்கினேன்.

நிதி ஆதாரங்கள் இல்லாமையால் குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிக்கப்படாத நிலை இருந்து வந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து வறுமை யிலும், துயரிலும் நீடித்து இருந்தமையால், அவர்கள் தங்களை உண்மை யாகவே இழந்துவிட்டனர். இன்னும் சொல்லப் போனால் மகனை இழந்த தந்தை அதை முக்கியமற்ற விபத்தாக கருதுவது என்பது, மிகவும் வறிய நிலையில் உள்ள அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மக்களிடம் பெருகி வருகிறது. மருத்துவ அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க முறையில் பங்காற்றுவது என்பது முக்கியமானதாகும் என்பதை அத்தருணத்தில் நான் உணரத் துவங்கினேன். எனவே நான் இந்த மக்களுக்கு உதவி செய்யவே விரும்பினேன். ஆயின் வழக்கம் போலவே சூழலின் வெளிப்பாடாக இருந்து வரும் நான் எனது சொந்த முயற்சிகளின் பேரில் இந்த மக்களுக்கு உதவி செய்திட முற்பட்டேன்.

ஏற்கெனவே நான் விரிவான அளவில் பயணத்தை மேற்கொண்டிருக் கிறேன். அப்பொழுது நான் குவாடிமாலாவில் இருந்தேன். அர்பென்னின் ஆளுகையின் கீழ் குவாடிமாலா இருந்து வந்தது. ஒரு புரட்சிகர மருத்துவரின் நெறிமுறைகள் பற்றிய குறிப்புகளை தயாரிக்கத் துவங்கினேன். தவிர ஒரு புரட்சிகர மருத்துவருக்கு அவசியமானது எது என்பது குறித்தும் ஆராயத் தொடங்கினேன். அந்நிலையில் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. யுனை டெட் பழ நிறுவனம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாஸ்டர் டல்லாஸ் ஆகியோர் தலைமையில் இது நடைபெற்றது. அவர்களின் கைப் பாவையாக ஆர்மாஸ் அதற்கு பொறுப்பேற்றார். அவர்களின் ஊடுருவல் வெற்றி பெற்றது. ஏனெனில் இன்றைய தினம் கியூபாவிலுள்ள மக்களைப் போன்று முதிர்ச்சி கொண்டோராக அங்கிருக்கக்கூடிய மக்கள் இல்லை. ஒருநாள் நான் அந்நாட்டை விட்டு வெளியேற முற்பட்டேன். அது எனது நாடாக இல்லை. எனவே குவாடிமாலாவை விட்டு விமானத்தில் வெளியேறினேன்.

நான் அத்தருணத்தில் அடிப்படையான அம்சங்களை உணரத் தொடங் கிளேன். ஒரு புரட்சிகர மருத்துவனாகவோ அல்லது ஒரு புரட்சியாளனா கவோ இருக்க வேண்டுமெனில் முதலில் புரட்சி ஒன்று நடைபெற்றாக வேண்டும் புரட்சி நடைபெறாமல் தனி மனிதனின் முயற்சிகளும். சீரிய நோக்குகளும் பயன்பாட்டினை கொண்டிருக்க முடியாது. அம்மாதிரியே ஒரு மனிதன் தன்னந்தனியே அமெரிக்காவின் எங்கோ ஓர் மூலையில் சமூக மாற்றத்தை தடுத்திடும் மாறுபட்ட அரசுகளுக்கும், சமூக நிலைபாடுகளுக்கும் எதிராக போராடியபடி சீரிய நெறி முறைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்வதும் உத்வேகம் பொருந்திய அவனது செயல் பாடுகளும் எவ்வித பலனையும் அளிக்காது. புரட்சியை உருவாக்க வேண்டு மென்றால் கியூபாவில் நடைபெற்றதைப் போல் நிகழ்வுகள் அமைய வேண்டும். அனைத்து மக்களும் திரட்டப்பட வேண்டும். அவர்கள் ஆயுதங் களை பயன்படுத்துவதை அறிந்து வைத்திருந்தனர். தீவிரமான ஒருமைப் பாட்டை கொண்டிருந்த அவர்கள் ஆயுதங்களின் மதிப்பை மட்டுமின்றி, மக்கள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்தனர். அத்தரு ணத்தில் மக்களின் மையமான பிரச்சனை நம் முன்னர் வந்தது. இறுதியர்க இன்றைய தினம் அனைத்து அம்சங்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தோடு. ஒரு புரட்சிகர மருத்துவரின் உரிமை மட்டுமின்றி கடமை பற்றியும் புதிய கருத்தோட்டங்கள் எழுந்தது.

ஒரு புரட்சிகர மருத்துவர் தனது தொழில் ரீதியான அறிவாற்றலை புரட்சிக் கான, மக்களுக்கான, பயன்பாட்டினை கொண்டிருக்க வேண்டும். இந் நிலையில் அதே பழைய கேள்வி நம் முன்னே எழுகிறது. ஒரு மருத்துவர் சமூக நலப் பணிகளை எப்படி மேற்கொள்வது? தனி மனித முயற்சிகளையும் சமூகத்தின் தேவைகளையும் இனங்காண்பது எப்படி? நாம் நமது வாழ்வு முறை பற்றிய ஆய்வினை மீண்டும் மேற்கொண்டாக வேண்டும். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இதுவரை செய்தது பற்றியும் அல்லது புரட்சிக்கு முந்திய காலங்களில் மக்களின் ஆரோக்கியம் குறித்த செயல்பாடுகளில் நமது பங்களிப்பு குறித்தும் அந்த பரிசீலனை அமைந்திட வேண்டும். இந்த ஆய்வு என்பது தடம் பதிக்கும் வகையில் ஆழமிக்கதாய், உத்வேகத்துடன் நடைபெற வேண்டும். இதன் பேரில் நாம் கடந்த காலத்திய கருத்துக்களையும், உணர்வோட்டங்களையும் பெட்டகத்தில் வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அத்தோடு ஒரு புதிய மனிதனை நாம் உருவாக்க வேண்டும் இதற்கான மேம்பட்ட முயற்சிகளில் ஒவ்வொருவரும் ஈடுபடு வதோடு, தங்கள் பங்களிப்பை எவ்வளவு தூரம் அளிக்க முடியுமோ அந்த அளவு அளிப்பதன் மூலம் புதிய மனிதனை உருவாக்கும் முயற்சிகள் கலப மாகிறது. இதற்கான பொருத்தமான எடுத்துக்காட்டாக கியூபா அமைந்துள்ளது.

ஹவானாவில் வாழ்ந்து வருகின்ற நீங்கள் இங்கே திரண்டிருக்கின்றீர்கள். உங்களிடத்தில் இந்த புதிய கருத்துக்களை முக்கியத்துவப்படுத்திட விரும்புகின்றேன். கியூபாவில் புதிய மனிதன் உருவாக்கப்பட்டான். இங்கே தலைநகரில் அவனது பங்காற்றலை நாம் முழுமையாக அறிந்திடவில்லை. அவை பாராட்டுப் பெறவும் இல்லை. ஆயினும் இந்த புதிய மனிதர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடிக்கிலும் பரவி நிற்கிறார்கள். ஜூலை 26 அன்று சியாரா மாஸ்டிராவிற்கு சென்றவர்கள் இதுவரை கண்டிராத இரு நிகழ்வுகளை கண்டிருக்க முடியும். ஒரு பெரும் பட்டாளம் மண் வெட்டி யுடனும் மண் கொத்தியுடனும் அணி வகுத்து சென்று கொண்டிருந்தது. தேசப் பற்றை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சியில், மண் வெட்டியையும். மண் கொத்தியையும் பெருமையுடன் ஏற்றிச் செல்லும் ஒரு பட்டாளத்தை நம்மால் உருவாக்க முடிந்திருக்கிறது. அதே தருணத்தில் ராணுவத்தில் இருக்கக்கூடிய அவர்களது தோழர்கள் துப்பாக்கி ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். ஆயின் இதைக் காட்டிலும் முக்கியமானதொன்றை நீங்கள் கண்டிருக்க முடியும் பதி னான்கு அல்லது பதினாறு வயதுடைய குழந்தைகள் எட்டு அல்லது ஒன்பது வயதுடையவர்களைப் போல தேக வாகு கொண்டவர்களையும் நீங்கள் பார்த் திருக்கக்கூடும். இவர்கள் சியாரா மாஸ்டிராவின் குழந்தைகள்தான். பசியிலும், பட்டினியிலும் உருவானவர்கள் ஊட்டச்சத்தின்மையால் இவர்கள் இந் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்கள்தான் கியூபாவில் உருவான புதிய மனிதர்கள் சியாரா மாஸ்டிராவின் மூலை முடுக்குகளிலும் பல்வேறு பட்ட பகுதிகளிலும் கூட்டுறவு அமைப்புகளிலும், வேலைக் கூடங்களிலும் இவர்கள் பிறந்தவர்கள்,

இன்றைய தினம் நமது உரையின் மையப் பொருளும் இது சம்பந்தப் பட்டதுதான். ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ ஊழியரை புரட்சிகர இயக்கத் துடன் இணைப்பதுதான் இதன் முக்கியமான சாராம்சமாகும். சிறாருக்கு உணவும் கல்வியும் அளிப்பது, ராணுவத்தினரைப் பயிற்றுவிப்பது. ஓடிப் போன நிலப்பிரபுக்களின் நிலங்களில் எவ்வித ஆதாயமும் இன்றி காலங்காலமாய் உழைத்திட்ட விவசாயிகளுக்கு அதே நிலத்தை பிரித்து அளிப்பது. சமூகத்திற்கான மருத்துவ உதவி ஆகியவை கியூபாவில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

நோய்க்கெதிரான போர் என்பது ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதில்தான் அடங்கியிருக்கிறதே அன்றி, பலவீனமான மனிதர்கள் மத்தியில் செயல்படக்கூடிய ஆரோக்கியமான, பலசாலியான மருத்து வர்களை உருவாக்குவதில் அல்ல. மேலும் மாற்றாக ஆரோக்கியமாக கூட்டாக உழைக்கக்கூடிய சமூகத்தை உருவாக்குவதிலும் இது அடங்கி யுள்ளது. எனவே ஒரு கட்டத்தில் மருத்துவத்தின் தன்மையும் மாற்றம் காண் கிறது. மருத்துவம் நோய் தடுப்பு அறிவியலாக மக்களுக்காக பயன்பாட்டைக் கொண்டதாய் மாற்றம் காண்கிறது. நாம் உருவாக்கி வரும் ஒரு புதிய சமூகத்தில் இருக்கின்ற மக்களின் தேவைகளுக்கான மருந்துகள் மிகவும் அவசரமான நிலையில் தேவைப்படுகின்ற தறுவாயில் வழங்குவதாக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையும் அதுபோன்ற முறைகளும் இத்தகைய முறையில்தான் இருக்க வேண்டும். உடல் நலத்துறை அமைச்சகத்திற்கும் இதையொட்டிய வேறு அமைப்புகளிடத்திலும் நாம் வேறு சில பணிகளையும் ஒப்படைத்திருக்கிறோம்.

நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் பொது சுகாதாரத் துறையின் பயன்களை பெறுவதே அது. தவிர நோய் தடுப்பு மருந்திற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும்படியும். மக்களிடம் பொதுவான சுகாதார முறை களை பேணுவது பற்றியும். பயிற்சி அளித்திடும் வகையில் ஒரு திட்டத்தை தயாரிக்கும்படியும் கோரியுள்ளோம். ஆயினும் இதுபோன்ற ஸ்தாபன பணிகளை நிறைவேற்றுவதும், புரட்சிகர கடமைகளை நிறைவேற்றுவதும் அடிப்படையில் தனி மனிதர்களின் செயல்பாடாகும். அப்படி செயல்படக் *கூடியவர்களே இன்றைக்கு தேவைப்படுகிறார்கள்.

சிலர் கூறுவதைப் போன்று புரட்சி கூட்டுணர்வையும் கூட்டுச் செயல் பாட்டையும் முறைப்படுத்தவில்லை. மாறாக புரட்சி தனி மனிதனின் திறமைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. மனிதனின் திறமைகளை புரட்சி முறைப்படுத்தியிருக்கிறது. முழுமையாக்கியிருக்கிறது. எனவே இன்றைய தினம் நமது கடமையென்பது பல்வேறு மருத்துவர்களின் செயல்பாட்டு திறனை சமூகத்திற்கான மருத்துவத்தை உருவாக்கும் திசை வழியில் பயன் படுத்திக் கொள்வது பற்றியதாகவே இருக்க வேண்டும்.

கியூபாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் ஒரு சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் நாம் வெகுவாய் அறிந்த முதலாளித் துவத்தின் வடிவம் பற்றி முன்னர் நாம் நினைத்ததும் அல்லது கூறப்பட்டவை களும் வேறு மாதிரியாகவே அமைந்துவிட்டது. அத்தகைய முதலாளித்துவ முறையின் கீழ்தான் நாம் உருவாக்கப்பட்டோம். அதன் ஆளுகையின் கீழ் சொல்லொண்ணா துயரங்களை எதிர்கொண்டோம். அத்தகைய முதலாளித துவம் இன்றைய தினம் உலகெங்கிலும் தோல்வியை எதிர்கொண்டு வருகிறது. ஏகபோகங்கள் தூக்கியெறியப்பட்டுவிட்டன. கூட்டுச் செயல்பாடு நவீன அறிவியலாக மாறியதோடு. தினசரி புதிய முக்கியத்துவம் வாய்ந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறது. வெகு நாட்களுக்கு முன்னரே அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்களின் முன்னணிப் படையாக நாம் இருந்து வந்தது பற்றி பெருமை கொள்ள முடியும். இதுபோன்ற சமூக மாற்றத்தை ஏற்பதற்கு மக்களின் மனோபாவத்திலும் மாற்றம் தேவைப்பட்டது. சமூக அமைப்பினுள் ஒரு தனி மனிதனின் தனித்துவம் வாய்ந்த செயல் வடிவங்கள் கியூபாவில் நிச்சயம் தொடர முடியாது. எதிர் வருங்காலங்களில் இந்த தனித்துவம் வாய்ந்த தன்மை என்பதே கூட்டுச் செயல்பாட்டை செழுமைப்படுத்தக்கூடிய விதத்தில் அமைய வேண்டும். நான் இந்த கருத்தை இன்றைய தினம் உங்கள் முன் வைக்கும்போது இன்றைய நிகழ்வுகள் மட்டு மின்றி எதிர்வருங்காலங்களில் நிகழக்கூடியவை பற்றியும் கருத்துக்களை கொண்டிருக்கிறேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

நாம் கருதுகின்ற விதத்தில் மாறுதல்கள் உருவாகும் வகையில், அவற்றை கண்டறியும் வகையில். மனோ ரீதியான மாற்றங்கள் அவசியம் தேவை. குறிப்பாக சமூகத்தில் நமது பணிகள் கடமைகள் குறித்தவற்றிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது. இன்றைய தினம் கியூபாவில் புற நிலைமாற்றங்கள் தினசரி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புரட்சி பற்றியும், மக்களின் திறன் குறித்தும், அறிய வேண்டுமென்றால் மக்களுடன் இருப்பதோடன்றி கியூபாவெங்கிலும் பயணத்தை மேற்கொண்டு புரட்சிக்குப் பின் உருவாக்கப்பட்ட கூட்டுறவு: களையும் உற்பத்தி மையங்களையும் பார்வையிட்டாலே போதும். மருத்துவ பிரச்சனைகள் குறித்து அறிவதற்கு அங்கு செல்வதோடு இவற்றை உரு வாக்கிய அந்த மக்களுடன் நெருக்கமான தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதோடு மட்டும் போதுமானதல்ல. அவர்கள் எவ்வித நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும். அவர்களின் துயரங்கள் குறித்தும், காலங்காலமாய் அனுபவித்து வரும் அல்லல்கள் குறித்தும், நூறாண்டுகளாய் சந்தித்த அடக்கு முறைகள் பற்றியும். அடங்கி ஒடுங்கிக் கிடந்த நிலை பற்றியும் உணர வேண்டும்.

மருத்துவரும் மருத்துவ ஊழியரும் தங்களை புதிய பணிக்கு தக்கபடி மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய மனிதராக அவர்களின் கூட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்கக் கூடியவராக இருக்க வேண்டும். உலகில் என்ன நிகழ்ந்தாலும் எந்தக் காலத்திலும் மருத்துவர் என்போர் நோயாளிக்கு நெருக்கமானவராக மனோவியல் ரீதியாக அவனது ஆழ்ந்த உளப்பாங்கை அறிந்தவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்களே துன்பத்திற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிவாரணத்தை அளிக்கிறார்கள். தவிர சமூகத்தில் மிக முக்கியமான பொறுப் பினைக் கொண்டிருப்பதோடு அளப்பரிய பணிகளையும் செய்து முடிக்கின்றனர்.

இங்கே ஹவானாவில் ஒரு சில மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி குறிப்பிட விரும்புகிறேன். புதியதாக சட்டம் பெற்ற ஒரு சில மருத்துவர்கள் கிராமப் பகுதிக்கு செல்ல விரும்பவில்லை. பின்னர் அவர்கள் அங்கே செல்வதற்கு ஒப்புதல் அளிக்கு முன்னர் கூடுதலான ஊதியம் அளிக் கும்படி கோரினர். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இது உலகில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். என்னைப் பொறுத்தமட்டில் அவ்வாறுதான் இருந்து வந்தது. இச்சூழல் எனது கடந்த கால நினைவுகளைத் தூண்டியது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எப்படி யெல்லாம் இருக்க வேண்டுமென்று நினைத்தது பற்றியும், என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்த்தேன். மேம்பட்ட வாழ் நிலைமை களுக்காக மக்களின் சரியான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தன்னந் தனியே மல்லுக்கு நின்று போராடிய வீரனின் அடையாளமாகத்தான் அது இருக்கும். ஆனால், தற்பொழுது இந்த மாணவர்களுக்கு பதிலாக தங்கள் கல்விக்கான பணத்தை செலவிடக்கூடிய குடும்பத்தினராக இருந்தால் பரவாயில்லை. ஆயின் பள்ளியில் படிப்பை முடிப்பதற்கும், இதுபோன்ற தொழில் முறை கல்வியை மேற்கொள்வதற்கும் அவ்வாறே வசதியற்ற குடும்பத்தினராக இருப்பின் நிலைமை எவ்வாறு இருக்கும்? இந்த பல்கலைக் கழக அரங்குகளிலிருந்து நூறு இருநூறு பேர் உடனடியாக மந்திரத்தால் தோன்றுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது என்ன நிகழும்? இந்த கேள்விக்கான பதிலை சுலபமாக தர முடியும். விவசாயிகளின் குடும்பங்களி லிருந்து உருவான இவர்கள் வேறு விதமாக எண்ணப் போக்குகள் ஏதுமின்றி, உடனடியாக தங்களது சகோதரர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு கிராமப் புறங்களை நோக்கி செல்லக்கூடும். தாங்கள் பெற்ற கல்வி விரயமாகவில்லை. என்பதை நிரூபிக்கும் வகையில் மிகவும் கடுமையான சிக்கலான பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் தங்களிடம் அவற்றை ஒப்படைத்திடும்படி அவர்கள் கோரக்கூடும்.

ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிலைமையில் மாற்றங்கள் எப்படி யெல்லாமோ உருவாகக்கூடும். தொழிலாளர்கள் விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்முறை கல்வியை பெற முடியுமென்றால் வெவ்வேறு விதமான மாற்றங்களும் உருவாகக்கூடும். இதற்காக கல்வி கற்கக்கூடிய குழந்தைகளை உழைப்பாளிகளின் விவசாயிகளின் குழந்தைகள் என்றும், எதிர்ப் புரட்சியாளர்களின் குழந்தைகள் என்றும் பிரிப்பது சுலபமாக இருப்பினும் அது ஆபத்தான செயலாகும். தவிர புரட்சி மனிதனின் கல்வியை வாழ்வை மேம்படுத்துகிறதேயொழிய பிரிவினையை செய்வதில்லை. கிராணமா தோணியில் முதல் அணியில் பயணத்தை மேற்கொண்டு, சியாரா மாஸ்டிரா விற்கு வந்த நாங்கள் அனைவருமே விவசாயிகளையும், தொழிலாளர் களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருந்ததோடன்றி, அவர்களுடன் இணைந்து வாழவும் தலைப்பட்டோம். இத்தனைக்கும் நாங்கள் விவசாயி அல்லது தொழிலாளி குடும்பத்திலிருந்து உருவானவர்கள் அல்ல. அந்த அனுபவங்களை பின்னணியாக கொண்டவர்களுமல்ல.

அங்கே இருக்கக்கூடிய வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உழைப்பாளிகள். சிறு பிராயத்திலேயே வாழ்வின் அனுபவங்களைக் கொண்டவர்கள். குறிப்பாக பசியின் கொடுமையை நன்குணர்ந்தவர்களாக இருந்தனர். அவர் களின் உண்மையான பசித் துயரை நாங்கள் என்றுமே பெற்றதில்லை. ஆயின் சியாரா மாஸ்டிராவிலிருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் பசித் துயரை உணர்ந்தோம். பின்னரே பல்வேறு அம்சங்கள் எங்களுக்கு புரிய வந்தது. பெரும் செல்வம் கொண்ட விவசாயியாகவோ அல்லது நிலச்சுவான்தாரரா கவோ இருப்பினும் அவர்களின் சொத்தின் மீது கை வைக்கக்கூடிய எவரையும் கடுமையாக தண்டிப்பதில் நாங்கள் தான் முதலில் இருந்தோம். ஒரு நாள் பத்தாயிரம் கால்நடைகளை சியாரா மாஸ்டிராவிற்கு இறக்குமதி செய்தோம். விவசாயிகளிடம் இவற்றை உண்ணுங்கள் என்று சொன்னோம். அங்கிருக்கக்கூடிய விவசாயிகள் பல்லாண்டுகளுக்குப் பிறகு வாழ்வில் முதன் முறையாக மாட்டிறைச்சியை உண்டனர். பத்தாயிரக்கணக்கான கால் நடைகள் மீது அவர்களுக்கு வழங்கப்பட்ட புனிதமான உரிமைகளை ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் நாங்கள் இழந்திட்டோம். இருப்பினும் மனிதனின் பெருமையை நன்கறிந்தவராக இருந்தோம். உலகிலுள்ள மாபெரும் செல்வந் தரின் கோடிக்கணக்கான சொத்துக்களின் மதிப்பைக் காட்டிலும் ஒரு தனி
மனிதனின் உயிர் அளப்பரியது என்பதை மிகச் சரியாகவே உணர்ந்தி ருந்தோம். இவற்றையெல்லாம் அனுபவங்களிலிருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

இத்தனைக்கும் நாங்கள் உழைப்பாளிகளோ அல்லது விவசாயிகளோ அல்ல. வசதியான சூழலில் உருவான நாங்கள் கற்றறிந்ததை ஏன் கியூபாவி லுள்ள மற்ற மக்களும் அறிந்திட முடியாது? இதை நாற்றிசையிலும் அறிவிக்க முடியும். ஆம் நிச்சயமாக மக்கள் அறிந்திட முடியும். அது மட்டுமின்றி இத்தகைய அறிதல் புரட்சிக்கு அத்தியாவசியமானதும்கூட தவிர அதிக அளவில் பணம் காசு சம்பாதிப்பதைக் காட்டிலும் அண்டை அயலாருக்கு பணியாற்றுவது மிக முக்கியமானது என்பதையும் புரட்சி போதித்துள்ளது. உலகிலுள்ள தங்கத்தையெல்லாம் செல்வமாக குவித்து வைப்பதைக் காட்டிலும், மக்களின் நன்றியை பெறுவது மேம்பட்ட செல்வமாகும். ஒவ் வொரு மருத்துவரும் தனது வட்டத்திற்குட்பட்ட செயல்பாடுகளின் மூலம் மக்களின் நன்றியுணர்வையே செல்வமாக குவிக்க வேண்டும். நாம் முதலில் பழைய கண்ணோட்டங்களை மூட்டை கட்டி வைத்து மக்களிடம் இன்னும் நெருக்கமாக தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு இதை முழுமையாக அறிந்தாக வேண்டும். முன்னைப் போல் இல்லாமல் மக் களுடன் நாம் நெருங்க வேண்டும்.

இல்லை நான் மக்களை விரும்புகிறேன். நான் தொழிலாளர்களுடனும், விவசாயிகளுடனும் உரையாடுவது மகிழ்வளிக்கிறது. நான் ஞாயிற்றுக் கிழமைகளில் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை பார்வையிடுகிறேன் என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடும். அனைவருமே இது போன்ற காரியங்களை செய்திருக்கக்கூடும். ஆயின் அறப்பணிகளை மேற் கொள்வதை முறை யாகவே நாங்கள் செய்து வருகிறோம். ஆயின் இன்றைய தினம் நாங்கள் மக்களிடையே வழக்கத்தில் ஒருமைப்பாட்டையும் உருவாக்கி வருகிறோம்.

மக்களிடம் சென்று நாங்கள் உங்கள் முன் நிற்கிறோம். எங்கள் முன்னிலை யில் உங்களுக்கு தான தர்மங்களை செய்யப் போகிறோம். அறிவியலை போதிக்கப் போகிறோம். உங்களது தவறுகளையும், கலாச்சாரமின்மையையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் இன்னும் ஒரு சில அடிப் படையான விஷயங்களை அறியாமல் இருக்கின்றீர்கள் என்றெல்லாம் சொல்வது சரியாக இருக்க முடியாது. மாறாக அவர்களின் மனதில் வேறு சிந்தனைகளை தூண்டக்கூடிய பணிகளை மேற்கொண்டாக வேண்டும்.

மனிதனின் பெரும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஞானத்தை கற்பதற்கான முறைகளை கையாள வேண்டும் நாம் நமது கோட்பாடுகளில் பலவேற்றில் தவறிழைத்ததை பின்னாட்களில் உணர்கிறோம் இந்த கோட்பாடுகள் நமக்கு பரிச்சயமானதாக இருப்பதோடு. நமது சிந்தனையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது பெரும்பாலும் நாம் நமது கோட்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. பொதுப்படையான கோட்பாடுகள் மட்டுமின்றி சமூக தத்துவ கோட்பாடுகளும் இதில் அடங்கும் ஏன் சிற்சில சமயங்களில் மருத்துவம் பற்றிய கோட்பாடு கூட மாற்றத்திற்கு உட்பட வேண்டியிருக்கிறது

மருத்துவ முறை என்பது நகரங்களில் உள்ள பெரும் மருத்துவ மனைகளில் பின்பற்றப்படுவதைப் போல எப்பொழுதுமே இருக்கத் தேவை யில்லை. மருத்துவர் என்பவர் ஒரு விவசாயியாக இருப்பதோடு புதிய உணவுக் கேற்ற புதிய தாவரங்களை வளர்ப்பதோடு, வரம்புக்குட்பட்ட கியூபாவின் சத்துணவு அமைப்பில் பெரும் மாற்றங்களை உருவாக்கம் ஆர்வங்கொண்டவராகவும் இருக்க வேண்டும். விவசாய ரீதியாகவும். இயற்கையாகவும் உலகில் வளம் பெற்ற நாடுகளில் ஒன்றாக திகழும் கியூபாவில் ஊட்டச்சத்து என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளின் அடிப்படை தேவையை நாம் நிறைவேற்றி யாக வேண்டும். இது அத்தியாவசியமானதும்கூட. இது அரசியல்வாதிகளின் பணியுமாகும். அவர்கள் முதலில் மக்களிடம் சென்று தங்களின் அறிவாற் றலை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது. அவர்கள் மக்களோடு இணைந்து வாழ்ந்திட வேண்டும் ஒரு புதிய முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதாக இருக்க வேண்டும். ஒரு நவீன கியூபாவை உருவாக்கும் மிக முக்கியமான பணியில் இன்று ஈடுபட்டு வருகிறோம் என்பதையும் உணர்ந்திட வேண்டும். நாம் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டிருக்கிறோம். 1959 ஜனவரிக்கும். இன்றைய தினத்திற்கும் இடைப்பட்ட நாட்களின் இடைவெளியை வழக்கமான முறையில் நம்மால் மதிப்பீடு செய்ய முடியாது நீண்ட நாட்களுக்கு முன்னரே இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சர்வாதிகாரி மட்டுமின்றி அமைப்பு முறையொன்றும் வீழ்ச்சி அடைந்ததை உணர்ந்திருக்கின்றனர். தற்பொழுது புதிய நிலைமையில் கற்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்ததே அழிவிலிருந்து ஒரு புதிய அமைப்பினை உருவாக்கிட வேண்டும். அதுவே முழுமையான மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்கவல்லது,

கடந்த ஆண்டின் துவக்கத்தில் அர்ஜெண்டினாவிலிருந்து தோழர்
குல்யென் வந்தது என் நினைவிற்கு வந்தது. அவர் இன்றைக்கும் ஒரு மாபெருங்கவிஞராக திகழ்கிறார். அவரது நூல்கள் ஓரிரு மொழியில் தவிர மற்ற மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் உலகெங்கிலும் எண்ணற்ற வாசகர்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆயினும் இன்றைய தினம் அவரது கவிதைகளை வாசிப்புது என்பது மிகவும் சிரமமான தாகவே இருந்தது. ஏனெனில் அவரது கவிதைகள் யாவும் முந்தைய கீர்வு கட்டத்தில் எழுதப்பட்டவை. வேற்றுமை உணர்வும், அசமத்துவமும் நிலவி வந்த நாட்கள் அது. கவிஞர் குல்யென் தனது சிறப்பு வாய்ந்த கவித்துவத்தை மக்களின் நலனுக்காக, அவர்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்திய வர். குல்யெனது மாறாத பற்றுணர்வை மக்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவே மாட்டார்கள். மக்கள் அவரை கியூபாவிற்கு பெருமை சேர்ப்பவராக மட்டும் பார்க்கவில்லை. ஒரு அரசியல் கட்சி என்பதே ஒதுக்கப் பட்ட வடிவமாக இருக்கும்போதே ஏதோ ஒரு அமைப்பின் கட்சியின் பிரதி நிதியாகவே அவரை கண்டு வருகின்றனர். தற்பொழுது இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டது. உள்நாட்டில் வேறு அம்சங்களைப் பின்பற்றக்கூடிய அமைப்பின் காரணமாய் பேதமே இல்லாமல் போய்விட்டது. அனைவருக் குமே பொதுவான எதிரி மட்டுமின்றி, பொதுவான இலக்கையும் நாம் கொண்டி ருக்கிறோம். இன்றைய தினம் அதே பொது எதிரியை நாம் அனைவரும் ஏற்கிறோமா என்பதோடு அதே பொதுவான இலக்கை நோக்கிய பயணமும் தொடர்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆயின் நமக்கு பொதுவான எதிரி இருப்பதை நிச்சயமாக அறிய முடி கிறது. இதை யாராவது நமது முதுகின் பின்னே நின்றுகொண்டு நாம் கூறும் கருத்துக்களை கேட்டு பிறரிடம் கூற வேண்டுமென்பதில்லை. ஒரு வேளை வேற்றுநாட்டு தூதுவரகத்தைச் சார்ந்த ஒருவர் நாம் திட்டவட்டமாக கூறிவரும் நமது எதிரி மட்டுமல்ல. அமெரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த எதிரியும். ஐக்கிய அமெரிக்க அரசே என்று கூறுவதை ஒட்டுக் கேட்டுத்தான் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்நாட்டு அரசே நமது எதிரி என்பது அனை வரும் அறிந்ததே. எதிரியுடன் மோதுகையில் நம்மிடையே ஒரு பொதுவான அம்சம் உருவாகிறது.இரண்டாவது விஷயம் கியூபாவில் நாம் எங்கு எப்படி இருக்கிறோம். நமது இலக்குகள் என்ன என்பது பற்றியது. நாம் எவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்த வேண்டுமென்று விரும்பினோம்? மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறு வதைத்தானே நாம் விரும்பினோம். கியூபாவின் ஒட்டுமொத்த பொருளாதார விடுதலைக்காகத்தான் நாம் போராடினோம்? இது போன்ற வினாக்களும் நம்மிடையே எழுகிறது. பல்வேறு சுதந்திர நாடுகளுக்கிடையே எந்தவித ராணுவ அணியிலும் இடம் பெறாது ஒரு சுதந்திர நாடாக இருந்திட நாம் டோரரிக் கொண்டிருக்கிறோம். அதுவும் இப்புவியின் பெருஞ்சக்தியாகத் திதிழும் நாட்டினர் தூதுவருடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நாம் பின்பற்றுவது என்ற ஆலோசனையை பெறாது எத்துகையர் வடிக்கைகளை நாம் சுயமாக செயல்படவில்லையா? செல்வத்தை அதிகமாகக் கொண்டிருக் இந்தி உயவர்களிடமிருந்து அவற்றை எடுத்து ஒன்றுமில்லாதவர்களுக்கு விநி யோசிக்கதிட்டங்களை உருவாக்கவில்லையா? அறிவு சார்ந்த பணிகளை தினசரி மேற்கொண்டு அனைவரும் மகிழ்ச்சி பெறத்தக்க வழிமுறைகள் பற்றி கருதவில்லையா? நிச்சயமாக இவை பற்றி நாம் கருதியிருந்ததோடு திட்ட வட்டமான இலக்குகளையும் கொண்டிருக்கிறோம். இதே மாதிரியான இலக்கு களை கொண்டிருப்போரெல்லாம் நமது நண்பர்களே. இது தவிர வேறு கோட் பாடுகளை கொண்டிருப்பதோடு. இதே அமைப்பையோ வேறு அமைப் பையோ சார்ந்திருப்பது என்பதும் சாதாரண விஷயங்களே.

ஒரு பெரும் அபாயகரமான நிலையில் நெருக்கடியான தருணங்களில் மிகச் சிக்கலான செயல்பாடுகளுக்கு இடையில் நமது எதிரிகளையும், இலக்கு களையும் மறக்கவா செய்வோம்? நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட இலக்கை நோக்கிய பாதையில்தானே நமது பயணமும் தொடரும். இதனால் யாருக்கு துன்பம் நேரிடுகிறதோ அவர்கள் துயர்படட்டும். நமது பணியை தொடங்கத் தானே வேண்டும். ஏற்கெனவே நான் சொன்னதிற்கிணங்க நீங்கள் ஒரு புரட்சிக்காரனாக இருக்க வேண்டுமென்றால் புரட்சி ஒன்று நடைபெற்றிருக்க வேண்டும். இங்கே புரட்சி ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. அடுத்தது எந்த மக்களுக்கிடையே நீங்கள் உழைக்கப் போகின்றீர்களோ அவர்கள் பற்றி அறிந்தவர்களாக இருக்க வேண்டும். நாம் இது பற்றி இன்னும் சரியான பரிச்சயம் கொண்டிருக்கவில்லை என்றே கருதுகிறேன். நாம் பயணம் மேற் கொள்ள வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. மக்களை அறிந்துகொண்டு அவர்களோடு இணைந்துவாழ்ந்திடும் வழிவகை பற்றி நீங்கள் கேள்விகளை, கோரிக்கைகளை எழுப்பக்கூடும் அனைவராலும் இத்தகைய பணியை செய்துவிட முடியாது. தவிர பல்வேறு இடங்களில் பல்வேறு தருணங்களில் ஒரு மருத்துவ ஊழியரின் பங்காற்றல் என்பது அதி முக்கியமானது.

கியூபாவில் மக்களின் ஒருமைப்பாட்டில் உருவானதுதான் மகத்தான அமைதிப்படையாகும் இது. இந்த அமைதிப் படை மருத்துவர்களுக்கு புதியபணிகளை வழங்குவதோடு அதற்கான தயாரிப்புகளிலும், அவர்கள் ஈடு படுத்துகிறது. கடந்த காலம் வரை நாம் ஒரு பெரும் ஆபத்தை எதிர்நோக்கி யிருந்தோம். நாம் ஆயுதத் தாக்குலுக்கு இரையாகக்கூடிய நிலையில் இருந் தோம். ஒரு மருத்துவர் என்பவர் சிப்பாயாக. புரட்சியாளனாக பணியாற்றுவது பற்றி எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். அவன் எப்பொழுதுமே மருத்துவ னாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் சியாராவில் செய்த தவற்றை நீங்கள் செய்யக்கூடாது. அதை தவறாகவும் சொல்ல முடியாது. அன்றைய தினம் மருத்துவத்தோழர்கள் அதை அறியவும் செய்திருந்தனர். வதைப்பட்டு நோய்ப்பட்டு மரணத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கையில் என்ன செய்ய முடியும் என்பதற்கு பதிலாக, போர்வீரனின் கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்க முடியுமா என்று யோசிப்பது நமக்கு பெருமையளிக்கக்கூடியதல்ல.

தற்பொழுது நிலைமைகள் வெகுவாய் மாறிவிட்டது. நாட்டை பாதுகாக்கக் கூடிய ராணுவம் என்பது வெவ்வேறு விதமான தந்திரோபாயங்களை கொண்டதாக விளங்குகிறது. புதிய ராணுவத்தின் நெறிமுறைகளின் கீழ் ஒரு மருத்துவருக்கு ஏராளமான முக்கியத்துவம் இருக்கிறது. அவன் மருத்துவராக பணியை தொடரவேண்டும். யுத்த காலத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இது இருந்ததோ அவ்வாறே இன்றைய தினம் மிக அழகு மிக்க செயல்பாடாக இருக்கும். அவ்வாறே செவிலியர். ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள். இன்னும் இதுபோன்ற யாவருமே மனிதாபிமானமிக்க இத்துறைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாவர்.

நமக்கு எதிராக ஒளிந்திருக்கக்கூடிய ஆபத்து குறித்து நாம் நன்கறிவோம்.
தவிர நம் மீது நடைபெறக்கூடிய தாக்குதலுக்கு எதிராக நாம் இன்றும் தயாரிப்பு களை மேற்கொண்டு வருகிறோம். நாம் உடனடியாக இவைபற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.

நாம் யுத்த தயாரிப்புகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது. நாம் செயலாற்றம் மிக்க பணிகளை உள்நாட்டில் மேற்கொள்ள முடிவதில்லை. ராணுவத் தயாரிப்பு செயல்பாட்டில் குவிக்கப்படும்

நிதி மூலதனமும், மனித உழைப்பும், விரயமாகிப் போன உழைப்பும் செல்வமும் ஆகும். ஆயின் துரதிருஷ்டவசமாக மற்றவர்கள் இதில் ஈடுபட்டு வருவதால் நாம் இத்தகைய செலவினங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயின் நேர்மையான முறையில் ஒரு உண்மையான சிப்பாய் என்றமுறையில் நான் இது பற்றி சொல்வதென்றால் இவ்வகையில் நிதியாதாரங்களை செலவிடுவது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. தேசிய வங்கியின்பெட்டகத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டு ஆயுதம் வாங்கும்பொருட்டு வெளியேறுவது துயரை ஏற்படுத்துகிறது.

ஆயினும் அமைதிப்படை சாதாரண காலங்களில் ஏராளமான பணிகளை. மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மக்கள் மையங்களில் அவர்களை ஒன்று படுத்தும் கருவிகளாக அவர்கள் இருக்கிறார்கள். நான் ஏற்கெனவே கூறியபடி மருத்துவர்களின் அமைதிப்படை மிகச்சிறப்பான முறையில் ஒருமைப் பாட்டை பின்பற்றிவருகிறார்கள். ஆபத்து நேரிடக்கூடிய தருணங்களில் ஏழை கியூபர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக பணிபுரிந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இணைந்து வாழ்ந்திடக்கூடிய ஒரு வாய்ப்பு உரு வாகியிருக்கிறது. ஒரே நேரத்தில் பல்வேறு சமூகத்தைச்சார்ந்தவர்கள், பட்டாளத்தில் இணைந்து, ஒரே மாதிரியான உடையை அணிந்து ஒன்றாய் வாழ்வது என்பது வித்தியாசமான அனுபவமாகும்.

மருத்துவ ஊழியர்களே, இந்த இடத்தில் மருத்துவ ஊழியர்கள் என்ற அடைமொழியை நான் பயன்படுத்துவதை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். சில நாட்கள் முன் வரை இவ்வாறுதான் பயன்படுத்தி வந்தேன். பின்னரே இந்த அடைமொழியை நான் மறந்துவிட்டேன். நாம் ஒருமைப்பாடு என்கிற புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தும்போது, நமது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். நாம் நமது இலக்குகளையும், எதிரிகளையும், திசைவழியையும் பரி பூரணமாக அறிந்திருக்கும் பட்சத்தில், எந்தப் பகுதி விடுபட்டுப் போயிருக்கிறது, எந்தப் பகுதியில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதை அறிந்தவர்களாகிறோம்.

இந்த பாதையை, வழியை எவருமே நமக்கு காட்டமாட்டார்கள். அது ஒவ் வொரு தனி மனிதனின் வாழ்க்கை பாதையாகும். இதுவே அவனது அன் றாட பாதை நாம் தனி மனிதனின் அனுபவங்களை சேகரிப்பதன் மூலம், அவனது தொழில் முறையை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், மக்களின் நலன்களுக்காக அர்ப்பணிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

எதிர்காலம் பற்றிய அனைத்துக் கூறுகளையும் கொண்டு நாம் அணி வகுத்துச் செல்கையில் மார்டீயின் மொழிகளை நினைவு கூர்வது சரியாக இருக்கும். தற்பொழுது நான் அவற்றை புறக்கணிக்கவில்லை, இருப்பினும் அவரது கூற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்றே நான் கருதுகிறேன்.

“மிகச் சிறப்பான ஆலோசனை என்பது முறையான செயல்பாடே”
எனவே நாம் கியூபாவின் வளமிக்க எதிர்காலம் நோக்கி பீடு நடை
போடுவோம்.

தமிழாக்கம்
ராமச்சந்திர வைத்தியநாத்

Leave a Reply