புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு என்பது என்ன ?

புரட்சிகரமான போரைப் பற்றிய புரட்சிகரமான வாய்ச்சொல் நமது புரட்சியை நாசம் செய்யக் கூடும் என்று நான் ஒரு கட்சிக் கூட்டத்தில் சொன்ன போது என்னுடைய வாதத்தின் கூர்மைக்காக என்னைக் கடிந்து கொண்டார்கள்.

ஆனபோதிலும், ஒரு பிரச்சினையைக் கூர்மையாக எழுப்பித் தீர வேண்டிய, விவகாரங்களைப் பச்சையாகச் சொல்லித் தீர வேண்டிய தருணங்கள் உண்டு; இல்லையேல் கட்சிக்கும் புரட்சிக்கும் நிவர்த்தி செய்ய முடியாத தீங்கு உண்டாக்கும் அபாயம் ஏற்படும்.

புரட்சிக் கட்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாட்டாளி வர்க்கச் சக்திகளும் குட்டி முதலாளி வர்க்கச் சக்திகளும் இணைந்த ஒரு சேர்க்கையாக, அல்லது கூட்டணியாக, அல்லது பரஸ்பரக் கலவையாக அமைகிற காலங்களிலும் புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு பெரிய, வேகமான திருப்பங்களைக் காட்டும் போதும் புரட்சிக் கட்சிகள் பெரும்பாலாக அனுபவிக்கிற ஒரு வியாதியே புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு ஆகும்.

புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு என்பது நிகழ்ச்சிகளின் ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் இருக்கிற புறநிலைச் சந்தர்ப்பங்களையும், அந்தந்த நேரத்தில் இருக்கிற குறிப்பிட்ட விBust Of Lenin And Karl Marxவகார நிலைகளையும் பார்க்காமல் புரட்சிகரமான கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதையே குறிக்கிறது.

அந்தக் கோஷங்கள் நேர்த்தியானவை. வசீகரமானவை, போதையூட்டுபவை, ஆனால் அவற்றிற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. புரட்சிகரமான வாய்ச்சொல்லின் இயல்பு இப்படிப்பட்டது.  -மாமேதை லெனின்

Leave a Reply