புதுச்சேரி அரசின் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தை கண்டித்து பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் அக்டோபர் மாதம் 8ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- புதுச்சேரி ஆளுகின்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மின்துறையை ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்,
- பணம் இருந்தால் தான் மின்சாரம் என்ற ப்ரீபெய்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்,
- உயர்த்தப்பட்டுள்ள மின் கட்ட ணத்தை பாதியாக குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடை பெற்றது.
புதுச்சேரி பாகூர் மின் துறை இள நிலை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பிரபுராஜ்,மாநில குழு உறுப்பினர் கலியன், கமிட்டி உறுப்பினர்கள் ஹரிதாஸ், வடிவேலு, கலைச்செல்வன், கிளை செயலாளர்கள் முருகையன், வெங்கடாசலம் உட்பட திரளானோர் பங்கேற்றனர். இறுதியாக போராட்டத்தை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் பேசினார். முன்னதாக மின்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.