பெரு முதலாளிகளின் பேராசைக்காக காடுகளை காவு கொடுக்கும் பிஜபி அரசு

The Forest (Conservation) Amendment Bill, 2023

FCA 2023வனத்தையே தங்கள் தாய்வீடாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் ஆதிவாசி மக்கள். அவர் களை காடுகளிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு வன வளங்களை, மலைகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் வனக்கொள்கை. இதனால் ஆதிவாசி மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்குமான மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. மரணம் வரை போராடித்தான் தங்களின் சந்ததிகளை அம்மக்கள் வாழ வைத்துக் கொண்டுள்ளனர்.

அறியவே வாய்ப்பில்லாதவர்கள் கருத்து தெரிவிப்பது எப்படி?

மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து பிரதமர் மோடி இயற்கை வளங்களை பெரு முதலாளி களுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தாரை வார்த்து கொடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். இதில் ஒரு பகுதிதான் “வனப் பாதுகாப்புச் சட்டம் 1980”இல் பல திருத்தங்களை மார்ச் – 27ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்மொ ழிந்திருப்பது.   வனம் சாராத திட்டங்களுக்கு வனத்தை பயன் படுத்தக்கூடாது என்ற நோக்கத்துடன் தான் வனப் பாது காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நோக்கத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் திருத்தங் கள் முன்மொழியப்பட்டதால் எதிர்ப்புத் தெரிவிக் கப்பட்டது. கடும் எதிர்ப்புக் காரணமாக, சட்டமாக்கப் படாமல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீல னைக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்க ளுக்குள் இத்திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவிக்க லாம் என்று மே 3ஆம் தேதி பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டம் இந்தி  மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. விளிம்பு நிலை மக்களாக இருக்கக்கூடிய ஆதிவாசி கள் தங்களை பாதிக்கக்கூடிய இச்சட்டத்திருத்தம் குறித்து அறிந்து கொள்ளவே வாய்ப்பில்லை. பிறகு எப்படி கருத்துத் தெரிவிப்பார்கள். குறைந்தபட்சம் 8ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலாவது இதை வெளியிடுவதற்கு அரசு முன்வரவேண்டும். அதற்கேற்ப கருத்துத் தெரிவிப்ப தற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இச்சட்டத் திருத்தத்தை மொழிபெயர்த்து வெளியிட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அமைச்ச ருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மக்கள், அமைப்பு கள் அனுப்பும் கருத்துக்கள் கணக்கிலெடுத்துக் கொள் ளப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

இதன் முதல் திருத்தமே இந்தி மொழியை திணிக்கும் விதமாகவே உள்ளது. இதுவரை (Forest Conservation Act 1980) என்று அழைக்கப்பட்டு வந்த இச்சட்டம் இனிமேல் Van (sanrakshan Evam samvar dhan) என அழைக்கப்படும். அதாவது, காடு பாது காப்பு (production) மற்றும் மேம்பாடு (production) சட்டம் என்று பொருள். Conservation என்பதை விட்டு விட்டு promotion என்பதை சேர்ப்பது இச்சட்டத் திருத்தம் வணிக நோக்கில் காடுகளை பயன்படுத்தத் தான் என்று தெரிகிறது.

தேசமுக்கியத்துவம் எனும் பெயரில் வணிக நோக்கில்

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், வனம் சம்பந்தமான மொத்த அதிகாரத்தையும் ஒன்றிய அர சுக்கு மாற்றுகிறது. இதனால் வனத்தின் மீதான மாநில அரசுக்குள்ள உரிமைகள் பறிக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான அல்லது தேச முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்திற்காக வன நிலங்களை மாற்றிக் கொள் வது. தேச முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டு விட்டால் அதற்கு எந்த வரையறையும் இவர்கள் அகராதி யில் கிடையாது. இதை காரணமாகக் காட்டி வனத்திற் குள் வாழும் மக்களை வெளியேற்றலாம். காடுகளை அழிக்கலாம். அழிக்கப்படும் மரங்களுக்கு பதிலாக அரசு குறிப்பிடும் வேறொரு இடத்தில் மரங்கள் நட்டால் போதும். காடு என்பது வேறு. மரம் வளர்ப்பு என்பது  வேறு. காடு அழிப்புக்கு மரம் வளர்ப்பது ஈடாகாது.  இதனால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்புக்குள்ளாகும். பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு மீளமுடியாத சூழல்  பாதிப்பு உருவாகும். காடுகளில் “சூழல் சுற்றுலாவை” விரிவுபடுத்தவும், தனியாரை இதில் ஈடுபடுத்தவும், திருத்தம் வகை செய்கிறது. 2020ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது இந்நாட்டில் உள்ள 160 வன உயிரின பூங்காக்களை மேம்படுத்துவ தற்கு தனியாருடன் சேர்ந்து ஒப்பந்தம் செய்ததையும் இதனுடன் தொடர்புபடுத்த வேண்டியுள்ளது. தனி யார் இதில் ஈடுபடுவது, சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் காடுகளை அழித்து ரிசார்ட்டுகள் கட்டுவது, ஆகியவற்றால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு, ஆதிகாலந்தொட்டு அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். காடுகள் அழிக்கப்படு வதால், வன விலங்கு மனித மோதல் அதிகரிக்கும். இதனால் உயிரிழப்புகளும், வேளாண்மைப் பயிர் அழிவும் நடைபெறும். மழைப் பொழிவு குறையும். மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை உருவாக்கும்.

தோல் இருக்க சுளை முழுங்குதல்

extended reach drilling எனும் தொழில் நுட்பத் திற்கான அனுமதி குறித்தும் மறைமுகமாக இச்சட்டத் திருத்தம் குறிப்பிடுகிறது. அதாவது, “தோல் இருக்க சுளை முழுங்கி” என்பது தான். காடுகளுக்கு அருகில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு எண்ணெய் வளங்களை காடு என்ற வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டுச் சென்று வளங் களை எடுப்பதுதான். அடியில் இருக்கும் வளங்களை யெல்லாம் உறிஞ்சி எடுத்துவிட்டால் மேற்பரப்பில் இருப்பது எப்படி பாதுகாப்பாக இருக்கும்? இதை அனுமதிப்பதற்காக காட்டில் உள்ள கனிமங்கள், இதர வளங்களை ஆய்வு செய்வதற்கும் நில அதிர்வு சோதனை நடத்துவதற்கும் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.  அதிகாரம் முழுவதையும் ஒன்றிய அரசுக்கு மாற்று வதன் மூலம் வன உரிமைச்சட்டம்- 2006 மற்றும் பஞ்சா யத்து ராஜ் சட்டம், கிராம சபைக்கு வழங்கியுள்ள உரி மைகள் பறிக்கப்படுகின்றன. இனி ஒன்றிய அரசு நினைத்தால் கிராம சபையின் ஒப்புதல் இல்லாம லேயே எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியும். வன உரிமைச் சட்டம் 2006-இன் படி வனம்  மக்களுக்குச் சொந்தம். அவர்களின் அனுபவ நிலங்க ளுக்கும் குடியிருப்புக்கும், சமூகத்தின் பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கும் அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும். இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் வன உரிமைச்சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன பிறகும் இச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதில் ஆட்சியாளர்கள் போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பதைத்தான் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

30.11.2022 வரை நாடு முழுவதும் உரிமை கோரி வரப்பெற்ற தனிநபர் மனுக்கள்    – 42,97,245 இதில் உரிமை வழங்கப் பெற்றது- 21,46,782 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது- 17,29,872 தமிழ்நாடு இச்சட்ட அமலாக்கத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது.  உரிமை கோரி பெறப்பட்ட மனுக்கள்    – 33,765 உரிமைச் சான்று வழங்கப்பட்டது    – 8,144 தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள்    – 9,493 உரிமை பெற்றவர்களை விட மனு தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில்தான், வன உரிமைச் சட்டத்தை உயிரற்ற தாக மாற்றும் வகையில் ஒன்றிய பாஜகஅரசு திருத்தங்க ளை முன்மொழிந்துள்ளது.

வரைமுறையின்றி மாற்றப்படும்…

2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா பூஜ்ஜியம் உமிழ்வு இலக்கை அடைய உறுதி கொண்டுள்ளதால் அதற்காகவே பசுமை பரப்பை அதிகரிக்க இத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக மசோதாவில் கூறப் பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை யாகும். ஏனெனில், கடந்த 2021 ஆம் ஆண்டு கிளாஸ் கோவில் நடந்த காலநிலை உச்சி மாநாட்டில் உலகில் சராசரி வெப்ப நிலையை 2.5 டிகிரி செல்சியஸ் அள விற்கு உயராமல் தடுப்பதற்காக காடுகள் அழிப்பை 2030ஆம் ஆண்டிற்குள் நிறுத்துவதற்கான உடன்பாடு ஒன்றில் 141 நாடுகள் இணைந்து கையெழுத்திட்டனர். இந்த உடன்பாட்டை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 12.12.1996க்கு முன்பாக காடுகள் சாராத பிற திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்ட பகுதி களை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வரைமுறை யின்றி வன நிலங்களின் பயன்பாடு மாற்றப்படும்.

எதிர்கால சந்ததிகள்  மன்னிக்க மாட்டார்கள்modi-ambani

இந்த திருத்தங்கள் செய்யப்பட வேண்டியதன் நோக்கம் என்று நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுழலியல் பாதுகாப்பு, பொரு ளாதார வளர்ச்சி என்று அலங்கார வார்த்தைகள் நிறைந்துள்ளது. ஆனால், உண்மையான நோக்கம், காடு, மலை அதிலுள்ள இயற்கை வளங்கள், கனிம வளங்களை தனியார் முதலாளிகளுக்கு திறந்து விடுவதுதான். அதற்கு தடையாக இருக்கும் சட்ட பாதுகாப்பு அம்சங்களை தகர்த்தெறிவது தான். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.  ஆதிகாலம் தொட்டு இருந்து வரும் வனங்களை பெரும் முதலா ளிகளின் பேராசைக்காக அவ்வப்போது ஆட்சியில் அமருபவர்கள் அழிப்பதற்கு அனுமதித்தால் எதிர்கால சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசின் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வலுவாக தலையிட வேண்டும். எனவே, இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்புக் குரலை அனைவரும் பதிவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளர் : பெ.சண்முகம் மாநில தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

Leave a Reply