உலக மக்கள் அனைவராலும் மொழி இனம் கடந்து பாடப்படும் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம், தி இன்டர்நேஷனல், 1888 ஆண்டு ஜூன் 23ந்தேதி முதல் முறையாக இசைக்கப்பட்டது.
1871 ஆம் ஆண்டில் யூஜின் பொட்டியர் என்ற பாரிஸ் கம்யூன் பிரெஞ்சு புரட்சியாளரால் இந்த இன்டர்நேஷனல் எழுதப்பட்டது. தொழிலாளி வர்க்க தோழர் இசைக்கலைஞர் பியர் டிஜீட்டரால் இசையில் அமைக்கப்பட்டது.
சர்வதேச கீதம்
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள்
கொட்டு முரசு கண்டன முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட
பண்டையப்பழக்கம் என்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது.
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திட
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்
முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக்கொண்ட மனித ஜாதி யாரும் ஒன்றதாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே
பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பயனைக்கொள்ளை கொண்டு நின்றதே
மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குரிய பங்கைக்காட்டி கேட்கிறோம்.
தொன்று தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச்சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்
வேலை செய்யக்கூலி உண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வீண் வார்த்தை பேசி உடல் வளர்க்கும் காதர்கர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங்கிடமில்லை
நாம் உணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங் கிடமில்லை…
பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும்
சில நாளதில்.
காடு வெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்!
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்…
The Internationale [variant words in square brackets]
Arise ye workers [starvelings] from your slumbers Arise ye prisoners of want For reason in revolt now thunders And at last ends the age of cant. Away with all your superstitions Servile masses arise, arise We'll change henceforth [forthwith] the old tradition [conditions] And spurn the dust to win the prize. So comrades, come rally And the last fight let us face The Internationale unites the human race. So comrades, come rally And the last fight let us face The Internationale unites the human race. No more deluded by reaction On tyrants only we'll make war The soldiers too will take strike action They'll break ranks and fight no more And if those cannibals keep trying To sacrifice us to their pride They soon shall hear the bullets flying We'll shoot the generals on our own side. No saviour from on high delivers No faith have we in prince or peer Our own right hand the chains must shiver Chains of hatred, greed and fear E'er the thieves will out with their booty [give up their booty] And give to all a happier lot. Each [those] at the forge must do their duty And we'll strike while the iron is hot.