புதுச்சேரி சாலைகளை சீரமைக்கவும், போக்குவரத்தை சரி செய்ய வழிபார்க்காமல் பண்டிகை நேரத்தில் காவல்துறையை ஏவிவிட்டு சோதனை, அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வதை புதுச்சேரி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றின் தாக்கத்தால் 2 ஆண்டுகாளமாக மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது தான் மக்களின் இயல்பு வாழ்க்கை துவங்கி ஓர் அளவுக்கு சீராகி வருகிறது. மேலும் கடுமையான விலைவாசி உயர்வினால் அன்றாடம் உழைக்கும் மக்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளனர். புதுச்சேரியில் எந்த வித வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தாத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியாளர்களின் அவளநிலையும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு மத்தியில் சுயமாக வங்கிமூலம் கடன்பெற்று ஆட்டோ உள்ளிட்ட இலரக வாகனங்களை ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் பெரும்பாளன உட்புற சாலைகள் குண்டும் குழியுமாகவே உள்ளது.ஒருபக்கம் வாகனங்களின் உதிரி பகங்கள் மற்றும் பெட்ரோல்,டீசல் விலையோ வின்னை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அன்றாடம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் சிறு இலரக வாகணங்களை வாடகைக்கும், சிலர் சொந்தமாகவும் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்த முறைச்சாரா தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி சிரிதும் கவலைபடாத, புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள், அதுவும் போக்குவரத்து துறை காவல்துறையினர் சிக்னலுக்கு , சிக்னல் நின்று ரூ.200 முதல் ரூ.1000 வரை அபராத கட்டணம் என்று கூறி கொண்டு வழிபறியில் ஈடுபடுவதை உடனே நிறுத்த வேண்டும். இந்த நிலை தொடரும்மேயானால் அனைத்து பகுதி வாகன ஓட்டுனர்களை திரட்டியும், பொதுமக்களுடன் காவல்துறையின் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும். இவ்விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் உடனே தலையிட்டு காவல்துறையின் அடாவடி அபராத வசூலை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.