தாமஸ் பெய்ன் (Thomas Paine)(29-01-1737 : 08-06- 1809)
புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர். இவரின் “The Rights of Man”
என்ற நூல் தோழர் ஜோதிராவ் பூலே வாழ்க்கையில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய நூல்
“நாகரிக நாடுகள் என்று சொல்லப்படும் இடங்களில் மக்கள் கூட்டத்தில் பெரும் பகுதி வறுமையை மிஞ்சி துர்ப்பாக்கிய நிலையில இருக்கின்றனர் அவர்கள் அருவருக்கத்தக்க இந்த துர்பாக்கிய நிலைக்கு மக்களை காரணம் அரசாங்கங்களே” என்றார்
தாமஸ் பெயின் எழுதிய “The Rights of Man” (மனித உரிமைகள்)
என்ற நூலை தோழர் ஜோதிராவ் பூலே வாசிக்கிறார். இந்நூல் அவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. பின்னாளில் பிராமணியம் மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக சமூக சீர்திருத்த சமத்துவ நிலைப்பாட்டுக்கு மிகவும் பயணமாக இந்நூல் அவருக்கு உதவுகிறது.
தாமஸ் பெய்ன் “The Rights of man” நூலில் விவரிப்பது என்ன என்றால்
எல்லா மனிதர்களும் பிறவியிலேயே சமமானவர்கள்.
“Man is born free and equal in rights.”
அதாவது,எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும்,எந்த மதம், சாதி, பணம் இருக்கிறதோ இல்லையோ,அனைவரும் சமமான உரிமையுடன் பிறக்கிறார்கள்.”Hereditary government is a fraud”
தந்தைக்கு பின் மகன் ஆட்சியில் அமர்வது(அரசனாக) வேண்டும் என்ற எண்ணம் ஏமாற்று சூழ்ச்சி.Government is a necessary evil; its legitimacy comes only from the will of the people.”
அரசுகள் மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும், அரசு என்பது சேவை அமைப்பு”People can overthrow an oppressive government and build a fair one.”
அதாவது, மக்கள் அடக்குமுறையை எதிர்த்து புரட்சி செய்து ஒரு சமத்துவ அரசு உருவாக்க முடியும்
மக்கள் தங்களுக்குத் தேவையான அரசியல் அமைப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்கள்“Governments should use tax money to help the poor – schools, pensions, aid.”
அரசு மக்கள் வரி பணத்தை, மாளிகைகள் கட்டவும், போர் நடத்தவும் பயன்படுத்தாமல்; மக்களின் அடிப்படை நலன்களுக்கு பயன்படுத்த வேண்டும். அரசு கல்வி, நலவாரிய திட்டங்கள் வழங்க வேண்டும்.
மேலும் வறுமையும், ஒடுக்குமுறையும் அரசு செயலிழப்பால் ஏற்படுகின்றன.
எல்லோரும் அரசியல், சமூக, பொருளாதார சமத்துவம் பெற வேண்டும்.
வளர்ச்சி, சமத்துவம், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான் உண்மையான ஜனநாயகம் அமையும்”To argue with a man who has renounced the use and authority of reason…
…is like administering medicine to the dead.”
பகுத்தறிவை முற்றிலுமாக புறக்கணிக்கும் நபர்களுடன் விவாதிப்பது பயனில்லை என்கிறார்.
அது மருந்து கொடுத்து ஒரு இறந்தவரை குணப்படுத்த முயற்சிப்பது போலவே.*There is no more dangerous illusion than that of being free when one is not.
மக்கள் அடிமைத்தனத்திலோ, அரசியல் கட்டுப்பாட்டிலோ, அரசு வன்முறையிலோ வாழ்ந்தாலும்,
அவர்கள் “நாம் சுதந்திரமாக இருக்கிறோம்” என்று நம்புகிறார்கள் என்றால்,அது மிகவும் ஆபத்தான மாயை. போன்ற நிறைய சமூக சீர்திருத்தங்களை வெளிப்படுத்துகிறார்
இவரின் நூல்கள்
Common Sense (1776)
The American Crisis (1776–1783)
Rights of Man (1791–1792)
The Age of Reason (1794–1807)
Agrarian Justice (1797)
Dissertation on First Principles of Government (1795)
இறுதிக்காலத்தில் 1809களில்
மதவாதிகள், அரசியல் எதிரிகள் ஆகியோரால் அவர் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார். தனிமையில் வாழ்ந்தார். ஜூன் 8, 1809 தனது 72வது வயதில் மரணம் அடைகிறார் New York, USA வில்
தாமஸ் பெயின் நமக்கு சொல்ல வருவது
மக்கள் உண்மையாக சுதந்திரமாக, சமத்துவமாக, பகுத்தறிவுடன் வாழவேண்டும்; அரசும் மதமும் அதற்கு தடையாக இருக்கக்கூடாது.” பதிவு நவின்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > புத்தகங்கள் > தாமஸ் பெய்ன் (Thomas Paine)
தாமஸ் பெய்ன் (Thomas Paine)
posted on