கேப்பையில் நெய் வடியும் என்ற கதையாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என முதல்வர் என். ரங்கசாமியும், பாஜக மாநில தலை வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது. தெரிவித்தனர். அரசியல் அமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சி கோட்பாட்டையும் ஒன்றிய பாஜக அரசு சீரழித்து வருகிறது. உண்மை நிலை அறிந்தும் தெரிந்தே பொய் பேசுவதன் மூலம் என்.ரங்கசாமி மக்களை ஏமாற்ற முயலுகிறார். 2021 புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலின் போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மாநில அந்தஸ்து கோரிக்கை இடம் பெறவில்லை. திருவாளர்கள் மோடி, அமித்ஷா, நட்டா போன்றவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங் களில் கூட ஒப்புக்காக கூட மாநில அந்தஸ்து குறித்து பேசவில்லை. மூன்றாண்டு என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் அரசு சார்பில் நேரிடையாக கொண்டுவரவில்லை. 2023-24 சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளன்று (30.03.23) எதிர்கட்சி தலைவர் இரா.சிவா உள்ளிட்ட 4 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேச்சை என 5 பேர் தனிநபர் தீர்மானங்களாக மாநில அந்தஸ்து தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்கள். நிர்ப்பந்தம் காரணமாக முதல்வர் என்.ரங்கசாமி மாநில அந்தஸ்து தீர்மானத்தை ஆதரித்து பேசினார். பின்னர் முதல்வரின் வேண்டு கோளை ஏற்று தனிநபர் தீர்மானங்கள் திரும்பப் பெறப்பட்டு அரசுத் தீர்மானமாக ஒரு மனதாக நிறைவேறியது.
என்.ஆர். கணிப்பும், நமச்சிவாயத்தின் கபடநாடகமும்
“மாநில அந்தஸ்து இல்லாமல் எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறோம் என்பது அரசியலில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். மாநில அந்துஸ்து தான் ஒரே வழி, நல்ல நேரம் வந்துள்ளது. நல்லது நடக்கும். இந்த ஆண்டே அதாவது 2023ல் மாநில அந்தஸ்து பெறுவோம்” என மாநில முதல்வர் அரசு தீர்மானமாக முன்மொழிந்து பேசினார். பாஜக உள்துறை அமைச்சர் நமசிவாயம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பது பாஜகவின் எண்ணம். அதிகாரிகள் தங்களுக்கான அதிகாரம் பறிபோய்விடுமே என்று நினைத்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம், பணிவிதி களில் திருத்தம், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான நிதி அதிகாரத்தை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இடைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கும் கதையாக கபட நாடகத்தை அரங்கேற்றினார்.
ஆளுநரின் அரசியல் சூது
அன்றைய ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ற பிரச்சனை எழவில்லை. அரசின் அனைத்து கோப்புகளுக்கும் அனுமதி வழங்கி வருகிறேன். மாநிலத்திற்கு உரிய அனைத்து உரிமைகளும் புதுச்சேரிக்கு உள்ளது என்று பாஜகவின் அரசியலை நியாயப்படுத்தி வந்தார். 30.03.2023 அன்று சட்டப்பேரவையில் நிறை வேற்றிய மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. 2023 ஆகஸ்டில் நடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்ப ராயன் (சிபிஐ), எழுப்பிய கேள்வி யால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. மாநில அந்தஸ்து தீர்மா னம் காலம் கடந்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் உரிமையை நிராகரித்தது. தற்போதைய யூனியன் பிரதேச நிலையே தொடரும் என அறிவித்தது. இதே அணுகுமுறை ரேசன் கடையை திறப்பது குறித்து 2022 செப்டம்பரில் அமைச்சரவை எடுத்த முடிவை பரிந்துரைப்பதிலும் நடந்தது.
இந்தியாவுடன் இணைந்த புதுச்சேரி
பிரஞ்சு ஏகாத்திபத்தியத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி, அடிமைப்பட்டு கிடந்தது. உடனடி சுரண்டலுக்கு உள்ளான பஞ்சாலைத் தொழிலாளர்கள் 1936 ஜூலை 30ல் நடத்திய வீரஞ் செறிந்த போராட்டம். 12 தொழிலா ளர்கள் உயிர்த்தியாகம் செய்து 1937ல் தெற்காசியாவில் முதன் முதலில் 8 மணி நேர வேலை உரிமை யைப் பெற்றெடுத்தனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தால் 1954 நவம்பர் 1ல் புதுச்சேரி விடுதலைப் பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962 ஆகஸ்ட் 16ல் அதிகாரப் பூரமாக இணைக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சிப் பிடிப்பு சட்டம் 1963 நிறை வேற்றப்பட்டு 25.08.1964ல் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை விட குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை சட்டம் வழங்கியுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் அவ்வப்போது சர்ச்சை எழுந்தது. 1968 திமுக-சிபிஐ கூட்டணி ஆட்சியில் வ. சுப்பையா புதுச்சேரிக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தினர்.
சட்டமன்றத்தில் சிபிஐ [எம்] குரல்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான முதல் தீர்மானம் 1981ல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. 24.04.1981ல் மாண்புமிகு தெ.இராமச்சந்திரன் அவர்கள் அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்க பரிசீலனை செய்யவும், 1963 யூனியன் ஆட்சிப்பரப்பு சட்டம் மற்றும் வீதி களில் திருத்தம் செய்யவும் உயர் மட்டக்குழு அமைக்க கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில் ஒன்றிய அரசு பிரதிநிதிகள், யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் இடம் பெறச் செய்து தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்தப்பட்டது. புதுச்சேரி மட்டுமின்றி இதர யூனியன் பிரதேச அரசு களையும் ஒருங்கிணைக்க முயற்சியும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாகே சட்டப்பேரவை உறுப்பி னர் கே.வி.ராகவன் “அரசு முன்மொழிந்த தீர்மானத்தை நானும், எனது கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறோம். மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்துகிறது. மாநில முதல்வருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுமானால் தற்போதைய அரசு நல்லெண்ணத்தோடு சரி யாக அதிகாரத்தை பயன்படுத்திட வேண்டும். மேலும் தீர்மானம் செயல்வடிவம் பெறுவதற்கு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவேண்டும் என்று எனது கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று குரல் எழுப்பினார்.
14 தீர்மானங்கள்
1981 முதல் 2023 வரையில் 14 முறை மாநில அந்தஸ்து, கூடுதல் அதிகாரம் குறித்த தீர்மானங்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. பல யூனியன் பிரதேசங் கள் மாநில அந்தஸ்து பெற்று விட்டன. புதுச்சேரி, தில்லி ஆகிய மாநிலங்களுக்கு இதுவரையில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வில்லை. புதுச்சேரி விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாகிறது. சட்டப்பேரவை அமைந்து 60 ஆண்டுகளாகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காதது அநீதியாகும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதா, கூடாதா என்பதை சட்டத்தின் வரையறைக்குள் இருந்து பரிசீலிக்க முடியாது. மாறாக பிரெஞ்சிந்திய பகுதியான புதுச்சேரியின் தேசிய இயக்கங் களின் வரலாற்றுப் போக்கில் இருந்து அணுகிட வேண்டும். மேலும் மாறியுள்ள அரசியல், பொருளாதார சூழல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மாநில மக்கள் மத்தியில் புதுச்சேரிக்கு மாநில அதிகாரம் வேண்டும் என்ற மன நிலை வலுவாக மேலோங்கியுள் ளது. மாநில வளர்ச்சிக்கு சுதந்திர மாக திட்டமிடுகிற அதிகாரமும், மக்கள் பங்கேற்போடு கூடிய ஜனநாயக செயல்பாடும் அவசி யம் என்பதை மக்கள் உணர்ந்துள்ள னர் என்றாலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது எளிதல்ல.
பாஜக அரசை வீழ்த்துவது வரலாற்று கடமை
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் கூட்டாட்சி என்பது மிக அடிப்படையான ஒன்றா கும். ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சி யில் கூட்டாட்சி முறை சிதைக்கப் பட்டு வருகிறது. அதிகாரம் மற்றும் நிதி ஆதாரங்கள் பெருமளவு மையப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்கட்சி ஆளும் மாநில அரசு களுக்கு நிதி பகிர்வு மற்றும் மத்திய பங்களிப்பு திட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இக்காலத் தில் மாநிலங்களின் உரிமை மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டில் அத்துமீறல் குறித்து உச்சநீதி மன்றத்தில் பல வழக்குகள் பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என நாட்டின் பன்மைத்துவத்தை நிராகரித்து ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர பாஜக முயலுகிறது. இது மக்களுக்கும், நாட்டிற்கும் பெரும் சிக்கலை கொண்டுவரும் பேராபத்து உள்ளது. ஆகவே, இந்திய அரசியல மைப்பை பாதுகாத்திட, புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத் திட பாசிச பாஜக அரசை ஆட்சியி லிருந்து அகற்றுவது ஒன்றே தீர்வாகும்.