போலிஸ் லாக்-அப்பில் தொழிலாளர் தலைவர் முரளி மோகன் பலி வெகுண்டெழுந்து நியாயம் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிசூடு ஒன்பது தொழிலாளர்கள் மருத்துவமனையில் ; உயிர் ஊசலாட்டம்.
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதவாரி மாவட்டத்தை ஒட்டிய பகுதியாக புதுச்சேரியின் ஏனாம் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் ரீஜென்சி செராமிக்ஸ் என்ற தரையில் பதிக்கும் டைல்ஸ் தயாரிக்கும் தொழிலறசாலை இயங்கி வருகிறது.1500-க்கும் மெற்பட்ட தொழிலாளர்கள் எனாம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து வேலை செய்து வருகிறார்கள்.இந்த நிறுவனத்தில்ல எந்த தொழிலாளர் நல சட்டமும் அமலாவதில்லை.குறைந்த கூலி,அதிக நேர உழைப்பு,நிரந்தரமின்மை போன்ற பல்வேறு நிலைபாடுகளிலும் தொழலாளர்களின் உழைப்பின் காரணமாக நிறுவனம் கொள்ளை லாபம் குவித்தது.கல்வித் தொழிலும் இறங்கி கல்லூரிகள் கட்டி லாபம் அடைந்தனர்.
கூனிக் குறுகி வெலைபார்த்துக் கொணடிருந்த தொழிலாளர்கள் சற்று நிமிர்ந்து ஒரு தொழிற்சங்கம் அமைத்தனர்.அந்த அமைப்பின் மூளையாய் செயல்பட்டவர் முரளி மோகன் என்ற தொழிலாளர் வெலைபார்க்கும் அத்தனை தொழிலாளர்களிலும் ஓரளவு ஆங்கிலம் படித்தவர.சங்கத்தின் முன்னணி தோழர்களை வேலை நீக்கம்,தொலைதூர காரைக்கலுக்கு மாற்றம்,இறுதியில் வேலையிலிருந்த அனைத்துத் தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்து விட்டு நிறுவனம் விதிக்கூடிய நிபந்தனைகளை ஏற்று கையெழுத்து போடுபவர் மட்டுமே மீண்டும் வேலை செய்ய முடியுமென அறிவித்தது.புதுச்சேரி அரசின் சட்டமோ,ஆட்சியோ தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்திமிரோடு நிர்வாகம் செயல்பட்டுள்ளது.தேவைக்கும் அதிகமாக பொருளை தொழிலாளர்கள் உற்பத்தி செய்து வைத்திருப்பதால்,கதவடைப்பு செய்து தொழிலாளர்களின் உழைப்பையே அவர்களுக்கு எதிரான ஆயுமாக நிறுவனம் பயன்படுத்துகிறது.இந்நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் தலித் சமூதாயத்தை சேர்ந்தவர்கள்.சாதிய அடிப்படையில் தொழிலாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை நிறுவனம் கையாண்டது.
26.1-2012 அன்று தோழர் முரளிமோகன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி காவல்துறை கைது செய்து லாக்-அப்பில் அடைத்து கடுமையாக தாக்கி உயிரைப்பறித்தது.இது விபரம் தெரிந்தவுடன் மறுநாள் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று திரண்டு காவல்நிலையம் முன்புகூடி நியாயம் கோரி ஆர்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.ஆர்பாடடக்காரர்களைக் கலைப்பது என்ற பெயரில் காவல்துறை எந்தவித சட்டபூர்வமான நடைமுறையையும் கையாளாமல் கண்மூடித்தனமாக காக்கை,குருவி சுடுவது போல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.இங்கு தொழிலாளரக்ள போராடிக் கொண்டிருக்கும் போதே இந்த லாக-அப்படுகொலை அறிந்த அருகாமை ஊர்மக்கள் அந்த தொழிற்சாலை உள்புகுந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில்; படுகாயமடைந்த 9 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டள்ளது.
ஏனாமில் நீண்ட காலமாகவே சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரும் தற்சமயம் காங்கிரஸ் கட்சியில் உள்ளவருமான மல்லாடி கிருஷ்னராவ் தான் இந்த ரீஜென்சி முதலாளிக்கு பின்புலமாக இருந்து வருகிறார். ஏனாமில் சங்கம் வைக்க அனுமதிப்பதில்லை எனவும் உறுதியாக செயல்பட்டு வருகிறார்.
மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் ஏனாம் காவல்நிலைய லாக்-அப்பில் காவல்துறை தாக்கியதில் மரணமடைந்துவிட்டார். நியாயமான அதிகாரியாக இருந்த உதவிகலெக்டர் ஜவகர் என்பவர் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவலரை தற்காலிக வேலை நீக்கம் செய்தார்.அந்த வேலை நீக்கம் செய்த காவலர்களை மீண்டும் உடனடியாக வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டுமென காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டவர் இந்த சட்டமன்ற உறுப்பினர். அந்த உண்ணாவிரத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களை வேலையில்சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.நியாயமாக நடந்து கொண்ட உதவி கலெக்டரை அந்தமானுக்கு மாற்றிவிட்டு ,தன்னுடைய கைப்பாவைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுத்துள்ளார் இந்த சட்டமன்ற உறுப்பினர்.
27.1.2012 அன்று இந்த துப்பாக்கி சூடு மற்றும் உயிர்பலி செய்தி அறிந்தவுடன் மாலையில் சிஐடியு புதுச்சேரியில் ஆர்பாட்டம் நடத்தியது.மறுநாள் அனைத்து தொழிற்சங்களும் ஒன்றினைந்து ஆர்பாட்டம் நடத்தியது.
1936-ஆம் ஆண்டு எட்டு மணி நேர வேலைகேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது அன்றை பிரெஞ்ச் ஏகாதிபத்தியம் சுழல் பீரங்கிகளால் சுட்டதில் 12 பஞ்சாலை தொழிலாளர்கள் உயிர்பலியானார்கள்.
சுதந்திரம் பெற்ற பிறகு அதே புதுச்சேரி பிரதேசத்தில் தொழிலாளர்கள் மீது நவீன தாராளமயத்தை அப்படடமாக கடைபிடிக்கும் அரசின் துப்பாக்கிகள் திரும்பியுள்ளன.ஒரு தொழிலாளர் தலைவர் பலி, ஒன்பது தொழிலாளிகள் உயிர் ஊசலாட்டம்.
எனவே கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்,நடைபெற்ற துப்பாக்கி சூட்டைக் கண்டித்தும் புதுச்சேரியில் 02-02-2012 வியாழன் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் தொழிற்சங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கோரிக்கைகள்
1.ஏனாமில் நடைபெற்ற லாக்-அப் கொலை துப்பாக்கி சூடு சம்பந்தமாக நீதிபதி தலைமையில் நீதி விசாரணை.
2.உயிரிழந்த முரளி மோகன் குடும்பத்திற்கு 25லட்சம் மற்றும் படுகாயமடைந்துள்ள ஒன்பது தொழிலாளர்கள் குடும்பங்களுகும் தலா 10லட்சம் நிதி உதவி.
3.ஏனாம் பகுதியில் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்துவது.
4.ரீஜென்சி செராமிக்ஸ் நிறுவனத்தை மீண்டும் திறந்து தொழிலாளர்ளுக்கு வேலை அளித்திடுக.
தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்து.
கே.முருகன்,சிஐடியு புதுச்சேரி மாவட்ட செயலாளர். புதுச்சேரி,
ஜன-31.01.2012