ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற் சாலை சம்பவம் குறித்து நடைபெற்று வரும் சிபிஐ விசாரணை வரம்பிற்குள் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் வையும் சேர்க்க வேண்டும் என்று இடதுசாரி தலைவர் கள் வலியுறுத்தினர்.புதுச்சேரியில் சிபிஐ, சிபிஎம், பார்வர்டு பிளாக்,புரட்சிகர சோஸலிஸ்டு கட்சி தலை வர்களின் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் விசுவநாதன், சிபிஎம் பிரதேச செயலாளர் வி. பெருமாள் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.
ஏனாம் ரீஜென்சி தொழிற்சாலையில் சங்கம் அமைத்ததால் தலைவர் முரளிமோகன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி காவல்நிலையத் தில் அடித்து கொல்லப்பட்டார். இச்சம்பவத் திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாநில முதலமைச்சர், ஏனாம் மண்டல அதிகாரி ஆகி யோரை சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன், சிஐடியு பொதுச்செயலாளர் அ. சவுந்தராஜன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத் திற்கு முக்கிய காரணமான தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ், தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் ஜி.என். நாயுடு ஆகியோரையும் குற்றவாளியாக சேர்த்து சிபிஐ விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். முரளிமோகன் குடும்பத்திற்கும் துப்பாக்கி சூட்டில் படு காயம் அடைந்த தொழிலாளர்களுக் கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்குவ தோடு, அந்த தொழிற்சாலையை உடனே திறக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அம்பலம்
தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கலவரத்தின் போது ஏனாம் காவல்துறை யினர் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதர வாக செயல்பட்டு தொழிலாளர்களுக்கு எதிரான போலியான ஆவணங்களை தயாரித்து வழக்கு பதிவுசெய்துள்ளதும், தூக்கு தண்டனை பெரும் வகையில் தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதும் அம்பலமாகி யுள்ளது. மேலும், காவல்துறை அதிகாரிகளின் உறவினர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் மாற்றப்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதி யாகியுள்ளது. உயர் காவல்துறை அதிகாரிக ளுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏனாம் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய சாமி, உதவி ஆய்வாளர் வீரபத்திரசாமி, சில காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15நாட்கள் சிறையில் வைத்துள்ளது காவல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.