அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்- அநியாய விலை யேற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி பிரதேசக் குழு

பத்திரிக்கை செய்தி

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள சில மொத்த கொள்முதல் மற்றும் பெரும் வர்த்தகர்கள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களை, பருப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களை கட்டுக்கடங்காத விலையில் கட்டுப்பாடு ஏதுமின்றி விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருகிறார்கள். விலை நிர்ணயம் மற்றும் தர நிர்ணயம் செய்வது குறித்து, பல சட்டத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், புதுச்சேரி ஆட்சியாளர்கள் அதனை செயல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மேற்படி வர்த்தகச் சூதாடிகள், தேவைக்கேற்ப விலைகளை உயர்த்தி பொதுமக்களை கொள்ளயடிக்கின்றனர்.

உதாரணமாக, புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள “அன்னை & கோ” என்கின்ற நிறுவனம் 16/4/2016 அன்று மாலை 5 மணிக்கு 50 கிலோ எடை கொண்ட 1 சிப்பம் கருப்பு உளுந்தினை ரூ.6,350/-க்கு விற்பனை செய்துள்ளனர் (பில் எண் 202 – 3 சிப்பம் உளுந்து ரூ.19050/-). பின்னர் ஒன்றறை மணி நேரம் கழித்து அதே எடை கொண்ட 1 சிப்ப கருப்பு உளுந்தினை பில் எண் 212-ன் படி ரூ. 7,500/-க்கு விற்பனை செய்துள்ளது. (உரிய பில் இத்துடன் இணைத்துள்ளோம்). ஆக ஒரு சில மணிகளில் 50 கிலோ கொண்ட ஒரு சிப்பம் கருப்பு உளுந்துக்கு ரூ.1150/- விலையினை உயர்த்தி கொள்ளை இலாபத்திற்கு பொருட்களை விற்பனை செய்துள்னர்.

இத்தகைய மோசமான செயல்களினால் உணவு பொருட்கள் பதுக்கப்படுவதும், சந்தையில் பொருட்களின் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தவும், ஏழை எளிய சாதாரண மக்களை கொள்ளையடிக்கவும் ஏதுவாக அமைகிறது. புதுச்சேரி அரசும், உணவு கட்டுப்பாட்டு துறையும் இது போன்ற செயல்களையும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கள், அநியாய விலை ஏற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும் அன்னை & கோ நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அவர்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வளியுறுத்துகிறது.
இவண்

ஆர். ராஜாங்கம்,
செயலாளர்
market_scam (1)

Leave a Reply