ஆய்வாளர் திரு. வெங்கிடசாமியின் அத்துமீறல்-விரோத, குரோத அணுகுமுறை

பெறுநர்: உயர்திரு முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள்                                                            21.06.2008
காவல் துறை சட்டம் ஒழுங்கு
புதுச்சேரி அரசு ,

மதிப்பிற்குரியீர்!

பொருள்: வட்ட ஆய்வாளர் திரு. வெங்கிடசாமியின் அத்துமீறல்-விரோத, குரோத அணுகுமுறை- தங்களின் தலையீடு கோருதல் தொடர்பாக.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 07.06.2008 ல் மத்திய அரசு அறிவித்த பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை எதிர்த்து பொது வேலைநிறுத்தம்-கடையடைப்பு முறையில் நடைபெற்றது. அன்றைய தினம் புதுச்சேரி நகரில் காமராஜர் சிலை, இலாசுப்பேட்டை, முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், மதகடிப்பட்டு, வினாயகம்பட்டு, வில்லியனூர் மற்றும் காரைக்கல் ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 350 க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் வில்லியனூர் கடைவீதியில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மக்கள் பிரச்சனைகள் மீது அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக முறையில் இயக்கம் நடத்துவது அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள உரிமை. அதே நேரத்தில் மறியல் போராட்டம் என்றால் காவல் துறை சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்வது (அ) வழக்கு பதிவு செய்வது என்பது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் – கடமை என்பதை நன்கு அறிவோம். ஆனால் வில்லியனூர் வட்ட ஆய்வாளர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.

07.06.08 ல் வில்லியனூர் கடைவீதியில் கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் எஸ்.மணிபாலன் தலைமையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வமயம் வட்ட ஆய்வாளர் திரு.வெங்கிடசாமி அவர்கள் மணிபாலனை தாக்க கைஓங்கியதுடன் கம்யுனிூஸ்டு என்ன மயிரை புடுங்கி விடுவீங்கிளா? .ரௌடிய வச்சு உன்ன போட்டு தள்ளிடுவேன் என்று கோபத்துடன் பேசியுள்ளார். அத்துடன் நிற்காமல் குற்றவாளிகளை அடைக்கும் அறையில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் வைக்கப்பட்டுளார்கள். தகவல் அறிந்த அப்பகுதி கட்சி செயலாளர் னு.முருகையன் வட்ட ஆய்வாளருடன் பேசிய பின்பு அரசியல் கைதியாக நடத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு மேற்படி அதிகாரி வெங்கிடசாமி அரசியல் காழ்ப்புணர்வு – விருப்பு –வெறுப்பு உணர்வுடனும் ,ரௌடியை வைத்து தீர்த்துகட்டிவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இதன் மூலம் பொறுப்புள்ள அதிகாரியாக நடந்துகொள்ளவில்லை என்பதும், சமூக விரோதிகளுடன் தொடர்ந்து ஒருபக்கம் தொடர்பு இருப்பதையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

பாகூரில் திருட்டு சம்பவம் தொடர்பாக இருளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் மனிதவதை செய்தது, பாகூரில் குடிமனைப்பட்டாவுக்காக இயக்கம் நடத்திய போது கட்சி செயலாளரான என்னை திட்டியும், துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டியது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் செய்த போது போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டது. காவல் துறையினரால் தாக்கப்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளை புகைப்படம் எடுக்கச்சென்ற பத்திரிக்கையாளர்களை அசிங்கமாக திட்டியது……… என அவரின் நடவடிக்கை தொடர்கதையாக உள்ளது.

மேற்படி நிகழ்வுகள் குறித்து காவல் துறைக்கு புகாராக, ஊடகங்களில் பத்திரிக்கை செய்தியாக, இயக்கமாக அரசின் கவனத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கொண்டு சென்றது. இதன் வெளிப்பாடுதான் 07.06.08 ல் நடந்த நிகழ்வு என்பதை உறுதிபடுத்துகிறது.

ஆகவே, மதிப்பு மிக்க அரசின் நிர்வாகப் பொறுப்பில் இருந்துகொண்டு ரௌடியை வைத்து தீர்த்துகட்டிவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ள வட்ட ஆய்வாளர் திரு வெங்கிடசாமி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுகிறோம். ரௌடியை வைத்து தீர்த்துக் கட்டிவிடுவேன் என்று கூறிய வட்ட ஆய்வாளர் திரு வெங்கிடசாமி இது போன்ற செயல்களில் இதற்கு முன்பு ஈடுபட்டுள்ளாரா என்பதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.மேலும் விருப்ப வெறுப்பு அடிப்படையிலான அவரின் செயல்பாடுகள் குறித்து துறைசார்ந்த விசாரணைக்கு உத்திரவிடவும் தங்களை வேண்டுகிறோம். இது போன்ற விருப்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க பொருத்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ளவும் தங்களை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்.

இங்ஙனம்
(V,பெருமாள்)
செயலாளர்

நகல் பெறுவோர்
1. உயர்திரு முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள்.
காவல் துறை சட்டம் ஒழுங்கு
புதுச்சேரி அரசு ,
புதுச்சேரி.

Leave a Reply