பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசை கண்டித்தும், புதுச்சேரி காங்கிரஸ் தலைமையிலான அரசின் பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நகரக்குழு செயலாளர் எம்.பி.மதிவாணன் தலைமை தாங்கினார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலக்கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிகையில்,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலைமையிலும் ஒரு தலைமையும், முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஒரு மையம் என இரண்டு அதிகார மையங்கள் செயல்படுவது மக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் குப்பைகளை வாருவதற்காகவா நியமிக்கப்பட்டார். புதுச்சேரியின் மக்கள் நலத் வளர்ச்சிதிட்டங்கள் நிறைவேற்ற போதிய நிதி ஆதாரத்தை திரட்ட எந்த எந்த வழிகளை பின்பற்றுவது என ஆராயுவதை விட்டு, வீதிகளில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுகிறோம் என்று தினந்தோரும் பத்திரிக்கைகளில் வருவது மக்களை ஏமாற்றும் செயல்.
உள்ளாட்சி பஞ்சாய்த்து தேர்தல்
முந்தைய ரங்கசாமி தலைமையிலான அரசு உள்ளாட்சி பஞ்சாய்த்து தேர்தலை நடத்த முன்வரவில்லை. தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்பித்துள்ள பட்ஜெட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என குறிப்பிடவில்லை. தினந்தோறும் பதட்டமாகவே வாழ்ந்து வரும் காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் கூட உள்ளாட்சி தேர்தலை அம்மாநில அரசுகள் நடத்திவிட்டது. ஏன் புதுச்சேரியில் நடத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசமியும் முன்வரவில்லை என்று பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
வேலைவாய்ப்பற்ற மாநிலம்
புதுச்சேரியில் இலவசமாக வழங்கப்படும் அரிசி தனியாரிடம் இருந்து ஆண்டு ஒன்றுக்கு ரூ.200கோடிக்கு மேல் அரசு கொள்முதல் செய்கிறது. இதை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயண்பெறுவார்கள். கொள்முதலே செய்யாத மாநிலம் என்றால் அது புதுச்சேரி மட்டுமே என்ற அவளநிலை உள்ளது. புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெற வில்லை என்று குற்றஞ்சாட்டினார். எனவே இதே நிலை நீடித்தால் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் அரசை எதிர்த்து போராடும் என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் பேசினார்கள். புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவின் அரசியல் நையாண்டி பாடல்கள் இசைக்கப்பட்டது.