சிதம்பரம் பத்மினியை சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரது கணவர் நந்தகோபாலை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்குக் கீழமை நீதிமன்றம் அளித்திட்ட தண்ட னைத் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
அத்துடன், நந்தகோபால் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302வது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை வாங்கித் தராததற்கு, தன் கண்டனத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1992 ஆம் ஆண்டு மே 30க்கும் ஜூன் 2க்கும் இடைப் பட்ட நாட்களில் சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என் பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன் னாலேயே காவல்துறையின ரால் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினி யின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் குண்டாந்தடிகளாலேயே அடித்துக் கொன்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப் பட்ட பத்மினிக்கு நீதி கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர், வாலிபர் சங்கங்களும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத் தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய கடலூர் மாவட்டச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ஜான்சி ராணி ஆகி யோர் பாதிக்கப்பட்ட பத்மி னிக்கு அரணாக விளங்கி வழக்கை நடத்தினார்கள். பத்மினியின் உறுதியான சாட்சியத்தின் கார ணமாக குற்றம்புரிந்த காவல் துறை அதிகாரிகளுக்கு கீழமை அமர்வு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. அதில் அத் தண்டனைகளை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ மற்றும் ஞான் சுதா மிஸ்ரா ஆகியோ ரடங்கிய பெஞ்ச் தங்கள் தீர்ப் பில் கூறியிருப்பதாவது:
சாட்சி பத்மினி தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், தன் கணவர் காவல் துறையினரின் குண்டாந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட் டது குறித்தும் மிகவும் விளக் கமாக சாட்சியமளித்திருக்கிறார். இவர் தவிர மேலும் 37 பேர் இவ்வழக்கில் சாட்சியமளித் துள்ளனர். பத்மினியின் சாட்சியம் அவர் காவல்துறையினரால் எந்த அளவிற்கு மனிதாபி மானமற்ற முறையிலும் காட்டு மிராண்டித்தனமாகவும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெளிவாக்குகிறது. பத்மினியின் சாட்சியத்தை நம் லிபாதிருப்பதற்கு எந்தக் காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை. சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் தன் கவுரவத்திற்கு இழுக்குத் தேடும் வகையில் நீதிமன்றத்தின் முன் பொய்யாக சாட்சியம் அளிக்க மாட்டார். பத்மினியின் சாட்சியம் காயமுற்ற வேறு சில சாட்சிகளாலும் மற்றும் எண்ணற்ற சாட்சி களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் 1992 ஆகஸ்ட் 13 அன்று கடலூர் மத்திய சிறை யில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது சாட்சி பத்மினி, எதிரிகளை அடை யாளம் காட்டியிருக்கிறார். பத்தாவது எதிரி குறித்து பத்மினியால் அடையாளம் காட்ட முடியாது போயிருந்தபோதும், உயர் நீதிமன்றம் அவரையும் குற்றத்துடன் பிணைத்திட போது மான காரணங்கள் இருப்பதாகக் கூறி தண்டித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் கூற்று டன் நாங்கள் உடன்படுகிறோம்.
பத்மினியை காவல்துறை யினர் நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது, அது அட்டூழிய மானது, மன்னிக்க முடியாதது. மருத்துவர் அளித்துள்ள சடலக்கூராய்வு சான்றிதழிலி ருந்து பத்மினியின் கணவர் நந்தகோபால் காவல்துறை யினரால் காவலடைப்பில் இருந்த சமயத்தில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. பத்மினியும் தன் சாட்சியத்தில் நான்கு போலீ சார் பூட்ஸ் கால் களால் தன் கணவரை அவரது மார்பில் மிதித்ததையும் அடித்துக் கொன்றதையும் நீதிமன்றத் தில் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
மரண தண்டனை
இந்த நிலையில் குற்றமி ழைத்த காவல்துறை அதிகாரி கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302வது பிரிவின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப் படாதது ஏன் என்பது ஆச்சரிய மாக இருக்கிறது. மாறாக, கீழமை நீதிமன்றங்கள் நந்த கோபாலின் சாவை தற்கொலை என்று கணித்திருக்கின்றன. உண்மையில் காவல்துறை யினர் கொலைக் குற்றத்திற் கான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருக்க வேண்டும்.
காவல் அடைப்பின் (லாக் அப்) போது காவல்துறையின ரால் கொல்லப்படும் வழக்கு கள் எங்கள் கருத்தின்படி அபூர் வத்திலும் அபூர்வம் என்றும், அதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண் டும் என்பதுமேயாகும். ஆனால், அவர்களுக்கு எதிராக இந்தி யத் தண்டனைச் சட்டம் 302 வது பிரிவின்கீழ் குற்றச் சாட்டு பதிவு செய்யப்படாதது அதிர்ச்சியளிப்பதாக இருக்கி றது. விசாரணை மேற்கொண்ட அமர்வு நீதிமன்றமும், உயர்நீதி மன்றமும் இது தொடர்பாகத் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டதாகவே நாங்கள் முடிவுக்கு வரவேண்டியதாக இருக்கிறது.
சம்பவங்கள் முழுமையாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்குள் நடைபெற்றி ருக்கிறது. எனவே குற்றம் சாட் டப்பட்டவர்களுக்குக் கருணை காட்டிட முடியாது. இந்த வழக்கில் முதல் எதி ரிக்கு மூன்றாண்டுகள் கடும் சிறை தண்டனையும், அப ராதமும் விதிக்கப்பட்டிருக் கிறது. மற்றவர்களுக்கு பத் தாண்டுகள் கடும் சிறைத் தண் டனையும் அபராதமும் விதிக் கப்பட்டிருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் தண்டனையை அதிகரிப்பதற்காக, தண்டனை அதிகரிப்புக்கான அறிவிப் பினை அளித்திட முடியும். ஆனால் இவ்வழக்கில் எதிரிகள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302வது பிரிவின்கீழ் குற்றச் சாட்டுப் பதிவு செய்யப்படாத தால் அவ்வாறு தண்டனை யை உயர்த்துவதற்கான அறி விப்பை எங்களால் உடனடி யாக அளித்திட முடியாது. இவ்வாறான எங்கள் கருத் துக்களுடன் இந்த மேல்முறை யீடு தள்ளுபடி செய்யப்படு கிறது. இவ்வாறு நீதிபதிகள் தங் கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.