சி.பி.எம்- பு.மு.கா – சி.பி.ஐ கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம்

மக்கள் கோரிக்கைகள் மீது பு.மு.கா – சி.பி.ஐ – சி.பி.எம் கட்சிகள் சார்பில்
அக்டோர் 14 – 17 . 2008 தேதிகளில் பிரச்சார இயக்கம்

மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி ஆட்சியில் எப்போதுமில்லாத அளவிற்கு விலைஉயர்வும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. வேலையின்மையும் ,வறுமையும் ,விவசாயிகள் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. உழைப்பாளி மக்களில் 70 சதத்தினர் நாளொன்றுக்கு ரூ 20 தான் வருமானமாக ஈட்டுகிறார்கள் மறுபுறத்தில் உலக முதலாளிகள் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்திய முதலாளிகள் இடம் பிடித்துள்ளார்கள்.

இடதுசாரிகளின் ஆதரவு விலக்கிக்கொண்ட நிலையில் மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இதர நாடுகளிலும் அதன் பாதிப்பு ஏற்பட துவங்கிய நிலையிலும் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் தொடரும் என மத்திய அரசு கூறுகிறது.

மக்கள் பிரச்சனைகள் குறித்து கவலைப்படாத மத்திய அரசு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் இறையாண்மையை காவுகொடுப்பதில் முனைப்பு காட்டுகிறது. ஒரிசா, கர்நாடகாவில் தொடரும் சிறுபான்மை மக்கள் மீதான மதவெறியர்களின் தாக்குதலை தடுக்க – அமைதியை ஏற்படுத்த ஆர்வம் காட்டவில்லை. மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மழைக்கால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும் மத்திய அரசு மறுக்கிறது.

புதுச்சேரி அரசின் அலங்கோலம்!

காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் அமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் கண்டையிட்டு புதுச்சேரி நலனை கவனிக்காமல் ஒதுக்கியதன் விளைவாக காங்கிரஸ் அரசு தி.மு.க, பா.ம.க ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்துவருகிறது. 2 ½ ஆண்டுகால ஆட்சியில் 8 மாதங்கள் அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் ஆட்சி ஸ்தம்பித்தது. மக்கள் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் புதிய திட்டங்கள் இல்லாத வேலை அறிக்கையையாகவே அமைந்தது.

விலைவாசி உயர்வு , பொதுவினியோக முறை சீரழிப்பு, வேலையின்மை சமூக குற்றங்கள் பெருக்கம் , கல்வி வியாபார மயம், வணிகமயமாகிவரும் விளைநிலங்கள், அரசு நலத்திட்டங்கள் வழங்கவதில் பாரபட்சம் , நலத்திட்டங்கள் தொடர்வதில் நிதி நெருக்கடி , ஊழல், லஞ்சம், ஊதாரித்தனம் …… என காங்கிரஸ் ஆட்சி துக்ளக் தர்பாராக காட்சி அளிக்கிறது. ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.

நிதி நெருக்கடி

காங்கிரஸ் ஆட்சியில் வரியில்லாத பட்ஜெட் என்ற பெயரால் 2300 கோடி ரூபாய் கடன் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்ப நிதி யாண்டிற்கு ரூ1300 கோடி தேவை உள்ளதாகவும், இரண்டு மாதகாலத்திற்குள் நிதி நிலமை சரியாகிவிடும் என வானவேடிக்கை அறிவிப்புகள் வருகின்றன. அமைச்சர் பெருமக்கள் இரு துருவங்களாக செய்து மத்திய திட்டக்குழுவிடம் 1750 கோடி மட்டுமு; நிதியாக பெற்று வந்தனர். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களும் அதற்கான நிதி ஒதுக்கீடும் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் கூடுதல் நிதி பெற்று வந்ததாக போஸ்டர் வெளியிட்டு பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பின்னர் அரசின் பங்குபத்திரம் விற்று பணம் திரட்டினார்கள். ஆனாலும் நிதி நிலமை சீரமையவில்லை. 6 வது ஊதியக்குழு சிபாரிசுகள் அமுலுக்கு வருமா என்பது தற்குரியாக உள்ளது. அனைத்து சமூக நலத்திட்டங்களும் முடங்கியுள்ளது.

பெருகிவரும் சமூக குற்றங்கள்

மாநிலத்தில் கொலை தொடர்கதையாகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளில் 76 கொலைகள் நடந்துள்ளன. கொலை குற்றம் சாட்டப்பட்டவர் 30 தினங்களுக்குள்ளாகவே ஜாமினில் வெளிவர முடிகிறது. கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற கொலைகள் அனைத்தும் சி.பி.ஐ விசாரனைக்கு விடவேண்டும். (குறிப்பாக பிரான்ஸ் சுல்தா இரட்டைக்கொலை, பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை) போக்குவரத்து துறையில் நடந்த ஊழல் -முறைகேடுகள் , நில மோசடி , மின்துறையில் பணம் கையாடல் ஆகியவற்றின் மீதான விசாரனை சிதம்பர ரகசியமாகவே உள்ளது. பல அதிகாரிகள் மீதான சி.பி.ஐ தொடுத்துள்ள வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரனையில் உள்ளது.

பெருகிவரும் சமூக குற்றங்களை தடுத்திட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சமூக விரோதிகளோடு கைகோர்த்துள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீத நடவடிக்கை எடுப்பது-பொறுத்தமான அதிகாரிகளை சட்டம் ஒழுங்க பிரிவில் அமர்த்துவது- காவலர்களுக்கு பதவி உயர்வு –சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்ற முறையில் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

பொது வினியோக முறை

விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மறுத்துவருகிறது. மாநில அரசும் விலைவாசி கொடுமையில் இருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிற 5 அத்தியாவசியப் பொருட்களுடன் சேர்ந்து 14 பொருட்களை மானிய விலையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் வழங்க வேண்டும். மேலும் இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து வழங்கவும் , ரூ 2 க்கு ஒரு கிலோ அரிசி வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு 50 ரூபாய் உயர்த்தியதை தொடர்ந்து மாநில அரசு ஒரு சிலின்டர் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் ரூபாய் 30 மானியம் வழங்கியுள்ளது. மானியத்தொகையை கூடுதலாக்கி, இரண்டு சிலின்டர் வைத்துள்ளவர்களுக்கும்; மானியம் வழங்க வேண்டும்.
வீட்டுமனை- நிலம் வழங்குக

மாநிலத்தில் வீடற்ற மக்கள்;; அனைவருக்கும் மனைப்பட்டா வழங்கவும், நகரப்பகுதிகளில் தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கவும் வேண்டும். வீடற்ற மக்கள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்த எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் 11,000 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் விவசாயம் சாராத பயன்பாட்டிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் தவறான விவசாயக் கொள்கைளால் ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருமளவிற்கு நடந்துவருகிறது. விவசாய நிலப்பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.மாநில அரசு விவசாய விளைநிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு துணைத்திட்ட நிதியில் இருந்து நிலமற்ற தலித்களுக்கு நிலம் வழங்குவும், நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில் 480 ஹெக்டேர் நிலங்கள் குறித்த வழக்குகளை முடித்து தகுதியடையவருக்கு நிலம் மற்றும் மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குக

புதுச்சேரி மாநிலத்தில். 2008 மார்ச் 31 வரை 1,92,216 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். பெருகிவரும் வேலையின்மைக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை உள்ள தொழில்களும் மூடப்படுகிறது. அரசு துறைகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.. சில துறைகளில் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இது சமூக நீதிக்கு எதிரானதாகும். வேலையில்லாகால நிவாரணம் கடுமையான விதிமுறைகளால் ஒருவர் கூட நிவாரணம் பெற முடியவில்லை. ஆகவே, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, வேலைவாய்ப்பகம் மூலம் பணி நியமனம் செய்ய, அரசு உயர் பதவிகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பொருட்டு பணித்தேர்வானையம் (ருPளுஊ) உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற மக்கள் வேலைத்தேடி இடம் பெயர்வதைத் தடுத்திட கிராமப்புற வேலைத்திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும்.

தொழிலாளர் நலன்

புதுச்சேரி மாநிலத்தில் ரோடியர,; சுதேசி, பாரதி, மற்றும் கூட்டுறவு பஞ்சாலைகள் நிர்வாக சீர்கேடு மற்றும் அரசின் தவறான கொள்கையால்; ஆலைகள் மூடப்படும் ஆபத்துள்ளது. அரசு பஞ்சாலைகளை நவீனப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது போல மத்திய ஜவுளி மேம்பாட்டு கழகத்திடமிருந்து உரிய நிதி பெற்று ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு சரியான தொழில் மற்றும் தொழிலாளர் கொள்கைகளை பின்பற்றுவதில்லை. கூடுதல் மணி நேர வேலை , அடிமட்ட சம்பளம், சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறை , பணிப்பாதுகாப்பு இல்லாமை என தொழிலாளரகள்; சுரண்டப்படுகின்றனர்., தொழிற்சங்க உரிமைப் பறிக்கப்படுகிறது.

கட்டுமான நலவாரியம் மற்றும் முறைசார தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றில் போதிய ஊழியர்கள் இல்லாமல் மந்த நிலையில் உள்ளன. வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட புதிய முறைசாரா பிரிவு தொழிலாளர்கள் நலச்சங்கத்தில் சேர்க்க மறுக்கப்படுகிறது. இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு களைந்திட வேண்டும். எதிர்வரும் தீபாவளி பண்டிகையை யொட்டி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்தாண்டைவிட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்.

விவசாயிகள் நலன்

விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களை ரத்து செய்து, 4மூ வட்டியில் புதிய பயிர்க்கடன், தட்டுப்பாடுயின்றி உரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிராளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும்.

வணிகமயமாகும் கல்வி

தனியார் மருத்துவ பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளின் எண்ணிக்கைதேவைக்கும் மேலாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசிற்கு உரிய இடங்களை கெஞ்சிப்பெறுகிறார்கள்.. அரச இடஒதுக்கீடு குறைவதும் கல்விக்கட்டணம் பலமடங்கு அதிகரிப்பதும், தொடர்கிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் கல்வி வியாபாரிகளுக்கு ஒத்திசைவாகவே உள்ளது.ஆகவே, மத்திய , மாநில அரசுகள் உரிய சட்டம் இயற்ற வேண்டும். தனியார் பள்ளி கல்வியை ஒழுங்குபடுத்தவும் சட்டம் இயற்ற வேண்டும். காமராஜர் கல்வி உதவித்திட்டத்தை தொடர வேண்டும்.

ஆகவே மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து , மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் மதவாத சக்திகளை எதிர்த்து நடைபெறுகிற பு.மு.கா-சி.பி.ஐ- சி.பி.எம் கட்சிகளின் கூட்டு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் நலனை சார்ந்த மாற்று அரசியலை உருவாக்க ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி

Leave a Reply