ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? குலாம் நபி ஆசாத்திற்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சில விதமான சிகிச்சை களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படு வதை ரத்து செய்திட வேண் டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், மத்திய சுகா தாரத்துறை அமைச்சருக் குக் கடிதம் எழுதியிருக் கிறார்.டி.கே.ரங்கராஜன் அக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-புதுச்சேரியில் இயங்கி வரும் அரசாங்கத்தைச் சேர்ந்த ஜிப்மர் மருத்துவ மனையில் அனைத்து சிகிச் சைகளுக்கும் இதுநாள் வரை இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திடீ ரென்று கதிர்வீச்சு பாதிப்பு (ரேடியோ தெரபி) மற்றும் அணுசக்தி மருந்துகள் (நியூக் கிளியர் மெடிசன்) ஆகிய வற்றிற்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசின் சார்பில் ஆணை பிறப்பிக் கப்பட்டிருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். மாதத்திற்கு 2500 ரூபாய்க்கும் மேல் வருமா னம் பெறுவோரிடமிருந்து இவ்வாறு உபயோகிப்பா ளர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கட்டனை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவமனை அதி காரிகள், மருத்துவமனை யில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளுக்கும் இவ்வாறு உபயோகிப்பா ளர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று முன்பு ஆணை பிறப்பித்திருந்த னர். பின்னர்அதனை மாற் றித் தற்போது ரேடியோ மற்றும் நியூக்கிளியர் மெடி சன் ஆகியவற்றிற்கு மட்டும் என மாற்றி இருக்கின்றனர்.ரேடியோ தெரபி மற் றும் நியூக்கிளியர் மெடிசன் மூலம் சிகிச்சை பெறுவது என்பது மிகவும் அதிகம் செலவுபிடிக்கக்கூடிய சிகிச் சையாகும் என்பது உங்க ளுக்குத் தெரிந்திருக்கலாம். இவ்வகையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் நீண்ட காலத்திற்கு சிகிச்சை பெற வேண்டியிருக்கும். இந் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அந்நோய்களால் பாதிக் கப்பட்டவர்களின் குடும்பத்தார் தங்கள் வசம் உள்ள சொத்துக்கள் அனைத்தை யும் இழந்து, வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டிருப் பதை நானறிவேன்.
நிலைமை இவ்வாறிருக்கையில், மருத்து வமனை அதிகாரிகள் நாளொன்றுக்கு 80 ரூபாய் ஈட்டும் ஒருவர், மருத்துவ ஆய்வுகளுக்காக, ஆயிரக் கணக்கில் செலவு செய்வதை எப்படி எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமையல்லவா?ஜிப்மர் மருத்துவமனை அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு மருத்துவ மனையாகும். இம்மருத்துவ மனை புதுச்சேரி மக்க ளுக்கு மட்டுமல்ல, தமிழ் நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். நாள்தோறும் 4 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக இம் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். இவ்வாறு ஏழை மக்களுக்கு உதவும் லட்சியம் பாதிக்கப்படக் கூடாது.தாங்கள் இப்பிரச்சனை யில் உடனடியாகத் தலை யிட்டு, மருத்துவமனை அதி காரிகள் இவ்வாறு உப யோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டி.கே.ரங்கரா ஜன் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > அரசியல் தலைமைக்குழு > ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்
ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்
posted on
You Might Also Like
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்திய புதுச்சேரி
September 14, 2024
பாகூர் பகுதி சிபிஐ(எம்) கட்சி வரலாறு
September 9, 2024