புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாடு தோழர் E.K.நாயனார் நினைவரங்கில் ( நவீனா கார்டன் திருமண நிலையம்,புதுவை) டிச-5,6 2004 தேதிகளில் நடைபெற்றது.

இரண்டுநாள் மாநாட்டில் கடந்த 3 ஆண்டுகால அரசியல்-ஸ்தாபன நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.30 க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.10 புதிய பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு 31 பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.பிப்ரவரி 3-6,2005 தேதிகளில் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழ் மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

1.புதுச்சேரி விடுதலைக்குப் பிறகு இறுதியாக டிச 16,1968 ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 36 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் நடத்த அதற்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

2.புதுச்சேரி அரசுக்கு சட்டம்,நிதி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. 1975 ல்,9 லட்சம் மக்களைக்கொண்ட அருணாசலப்பிரதேசம், 4 லட்சம் மக்களைக்கொண்ட சிக்கிம்,1 987 ல் 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிசோரம் ஆகியவற்றிற்கு மாநில அந்தஸ்து. வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக கோவாவிற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு நிலுவைக் கடன்களை ரத்து செய்து, 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

3.விஞ்ஞான யுகத்திலும் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு பகுதிகளில்,பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக ஏப்ரல் 14,2005 ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. அதில் கள ஆய்வு நடத்தி கோரிக்கைகளை உருவாக்கி மக்களை திரட்டி போராடவும்,அரசை நிர்பந்திக்கும் வகையில் போராட்டம் திட்டமிடும் வகையில் மாநாடு அமையும்.

4.வீட்டுவரி,கட்டிட வரி நிர்;ணய அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்கள் கருத்தறிந்து வீட்டு வரி,கட்டிட வரி நிர்ணயம் செய்யப்படவேண்டும்.

5.ரேஷன் கார்டுகளின் ஆயுள்காலம் 2004 ஜனவரியில் முடிந்துவிட்டது.11 மாதகாலமாக வழங்கப்படாமல் உள்ள புதிய ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும்.

6.அரியூர் சர்க்கரை ஆலையை புதுச்சேரி அரசு ஏற்றெடுக்க வேண்டும். 17 கோடி ரூபாயை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.சுதேசி,பாரதி மில்களை ஏற்றெடுப்பதற்கான உத்திரவாதமான அரசானை வெளியிட வேண்டும்.

8.அரசின் சமூக நலத்திட்டங்களை பாரபட்சம் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.வேலை நியமன தடை ஆணையை ரத்து செய்து,வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் அரசுப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

10.மாநில அரசின் உயர் அதிகாரி பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களைக்கொண்டு நிரப்பிட மாநிலத்திற்கான பணித்தேர்வானையம் அமைத்திட வேண்டும்.

11. புதுச்சேரி மாநிலத்தின் தொழில் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக,அனல் மின்சார உற்பத்தி சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான துறைமுகம், விமான போக்குவரத்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இரயில் போக்குவரத்து மற்றும் நவீன விவசாயத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

12. கல்வி தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்.அரசுப்பள்ளிகளில் காலியுள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50மூ அரசு மாணவர் சேர்க்கையை கறாறாக அமுலாக்க வேண்டும்.

13.செவிலியர் பயிற்சிப்பள்ளியை திறந்து நடத்த வேண்டும்.

14. மாநில மகளீர் ஆணையத்தில் ஆளும் கட்சியினரை கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. பெண் உரிமைக்காக செயல்படும் மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக மகளீர் ஆணையம் மாற்றி அமைக்க வேண்டும்.

15. தமிழை ஆட்சிமொழி மற்றும் பயிற்று மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

16. முறைசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும். விவசாயதொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்.

17. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். கடந்த கால நடைமுறைக்கு எதிராக “ஊ“ மற்றும் “னு“ பிரிவு பணியிடங்களை நிரப்ப அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கும் அறிவிப்பை ரத்து செய்.

18.நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்

19.காரைக்கால் மீன்பிடி துறைமுகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்களாகிறது. உடனடியாக மீன் பிடி துறைமுகம் கட்டிட வேண்டும்.

20. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் புதுச்சேரி வாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் இடஒதுக்கீட்டு மூலம் பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

21. சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன் அவர்களை அரசியல் பகையுடன் ரவுடிகள் பட்டியலில் இணைத்துள்ள காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி பட்டியலில் இருந்து எல்.கலிவரதன் பெயரை நீக்க வேண்டும்.

22. ஆண்டொன்றுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை அளிப்பது என்ற வேலைஉத்திரவாத சட்டத்தின் படி புதுச்சேரியில் உடனடியாக அமுலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்ட பயனாளிகளில் 40 சதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

23.பெண்களுக்கெதிரான சமூக ஒடுக்குமுறைகளை தடுத்திட,பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24.முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் வாரியாக குறைந்த பட்ச கூலியை நிர்ணயிக்க வேண்டும்

25. சட்ட விரோத ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்திட வேண்டும். 8 மணி நேர வேலை உரிமையை அமுலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

26. அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாகத் துவங்க வேண்டும். வில்லியனூரில் பெண்கள் கல்லூரி என்ற அரசின் தொடர்ச்சியான வாக்குறுதியை அமுலாக்க வேண்டும்.

27. சமூக விரோத குற்றங்களை தடுக்க ரௌடியிசத்தை ஒடுக்க புதுச்சேரி அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28. கட்டுமான நலவாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட வேண்டும். நலவாரியத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

29. வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்துள்ள அரசியல் பிரமுகர்கள்,அதிகாரிகள் மீது விசாரனை நடத்தி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

30. அரசு நலத்திட்டங்களுக்காக கைத்தறி சேலை, லுங்கி, துண்டு பான்டெக்ஸ் நிறுவனத்திடமிருந்து  அரசு கொள்முதல் செய்து வருகிறது.அதை உறுதிப்படுத்தும் முறையில் அரசானை வெளியிட வேண்டும். நூல் வங்கி ஒன்றை பான்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்படுத்த வேண்டும்.

இவண்
(வெ.பெருமாள்)
செயலாளர்
தேதி: 09.12.2004

Leave a Reply