களங்களே
மனங்களே
புரட்சிப் பூக்கும்
நிலங்களே
சினங்களே
முரண்களே
சிவப்பைக் காட்டும்
திசைகளே
சாதி என்ன
மதம் என்ன
மனிதம் அழிக்கும்
களைகளே
செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம்
சமத்துவத்தின் செங்கொடி
நினைவிலே வந்தாடிட
சந்தோஷத்தில் கொண்டாடிட
வாய்த்திடாத வாழ்க்கைதான்
நாம் வாழ்ந்து
கொண்டு இருக்கிறோம்
யாரிதை திணித்தது
எவர் கொடுத்து சென்றது
ஏன் நமக்கு நேர்ந்தது
சிந்திக்க வேண்டும் தோழனே
உன்னோடு நான்
என்னோடு நீ
ஒன்று பட்டால்
வெல்வோம் இனி
செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம்
சமத்துவத்தின் செங்கொடி
கடைசி மனிதன் உரிமை மீட்க
போரிடும் நம் செங்கொடி
பாடல்: ராஜ சங்கீதன்