பெறுதல்,
உயர்திரு. அரசு செயலர் மற்றும் இயக்குனர் அவர்கள், குடிமைப்பொருள் வழங்கல் துறை,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.
பொருள்: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல் மக்களுக்கு உணவு ஊட்டச்சத்து உறுதிப்படுத்துதல்….
புதிய ரேஷன் அட்டை சிகப்பு அட்டை வழங்க கோருதல்…
மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்தப்படுவது கைவிட கோருதல்… இப்பணியில் நியாயவிலை கடைஊழியர்களை ஈடுபடுத்துதல் தொடர்பாக…
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மனித பேரழிவுகளையும் பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தனிமனித இடைவெளி நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவிடும். ஆனால் மக்களுக்கு உணவு, ஊட்டச்சத்தும் அளித்து நோய்த்தொற்று நோய் பாதிப்பில் ஏற்படும் மரணங்கள் மற்றும் பட்டினிச் சாவுகளை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான கடமையாகும்.
பொது விநியோகத் திட்டம் என்பது மக்களின் வறுமை ஒழிப்பு மற்றும் வருவாய் ஆதரவு திட்டமாகும். மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கல் பொது சந்தையில் விலைவாசியை கட்டுப்படுத்துதல், விவசாயத்தை பாதுகாத்தல் இத்திட்டத்தின் அடிப்படையாகும். இத்திட்டம் மத்திய ஆட்சியாளர்களால் தொடர்ந்து பலவீனப் படுத்தப் பட்டன அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அழித்து பெரும்பகுதி மக்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வறுமைக்கோடு குறித்த அளவீடு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, பயனாளிகளின் எண்ணிக்கையை மாநிலங்கள் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. புதுச்சேரியில் ரேஷனில் வழங்கிய பொருட்கள் படிப்படியாக கைவிடப்பட்டு அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. தற்போது அரிசிக்கு பதில் பணம் வழங்கும் முறை 2016 செப்டம்பர் முதல் அமுல் படுத்தப்பட்டு வருகிறது.
மாநில அரசின் இலவச அரிசி திட்டம் மற்றும் பண்டிகைக்கால பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன. தற்போது covid-19 பேரிடர் காலத்தில் வழங்கப்படும் உணவு பொருட்கள் வழங்க நியாயவிலை கடை ஊழியர்கள் பயன்படுத்தப்பட வில்லை. மாறாக ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது அநீதியானது இத்தகைய நடவடிக்கையால் ரேஷன் கடை முறை வலுக்கட்டாயமாக அழிக்கப்பட்டுள்ளன அரசின் இந்த அணுகுமுறையை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
1990களில் துவங்கிய பசுமைப் புரட்சியினால் உணவு தானிய உற்பத்தி பெருகியது. வெளிநாடுகளில் உணவுக்கு கையேந்தும் நிலை மாறியது. தற்போது தேவைக்கு அதிகமான உணவு தானியங்கள் அரசு கையிருப்பு இருந்தபோதும் அசாதாரணமான சூழலில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்க மத்திய அரசுக்கு மனமில்லை. இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான வற்புறுத்தல் உலக சுகாதார அமைப்பின் பற்றி நிலைமை விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக மத்திய அரசு பிரதமர் கல்யாண் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2011 கணக்கெடுப்பு அடிப்படையில் வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. 2010- 11 ஆண்டுக்கு
பிறகு உருவாகியுள்ள ஏழ்மை மக்கள் covid-19 பிறகு ஏற்பட்டுள்ள மக்களின் ஏழ்மை நிலையை கவனத்தில் கொண்டு புதிய சிவப்பு அட்டை வழங்க வேண்டும். அனைவருக்கும் பிரதமர் கரீம் கல்யாண் திட்டம் விரிவுபடுத்த வேண்டும்.
இந்திய பெருமுதலாளிகளின் பொருளாதாரத்தை மீட்பு நடவடிக்கைக்கு முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசு, ஏழை மக்களை மீட்பதற்கு முனைப்பு காட்டவில்லை. உற்பத்தித்துறை சேவைத் துறை உள்ளிட்ட சகல துறைகளையும், தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு பெரும் பொருளாதார சுமைகள் ஏற்படுத்தப்படுகிறது வரும்காலம் பொருளாதார பாதிப்பு நோய்த்தொற்று, பேரழிவும் பெரும் சவாலாக உருவெடுத்து விடும். ஆகவே பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்தவும், நியாயவிலைக் கடைகளை செயல்படுத்தவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுகிறோம்.
கோரிக்கைகள்:-
1.பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அரிசி பருப்பு வகைகள் சமையல் எண்ணெய் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் நியாய விலையில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்க வேண்டும்.
- பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் covid-19 முன்பும் பின்பும் உருவாகியுள்ள ஏழை மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். புதிய சிவப்பு ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ள ஏழை மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக கைவிடவேண்டும்.
நியாய விலை கடை ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
4.மாநில அரசின் இலவச அரிசித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவன்
அ.மு.சலீம், செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஆர். ராஜாங்கம், செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
சோ. பாலசுப்பிரமணியம், செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்)