போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணம்: மக்கள் நல கூட்டியக்கம் வலியுறுத்தல்

புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணத்தை வழங்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டியக்கம் வலியுறுத்தி உள்ளது.

பாகூர், நெட்டப்பாக்கம், ஏம்பளம் ஆகிய தொகுதிகளின் மக்கள் நல கூட்டியக்க செயல்வீரர்கள் கூட்டம் பாகூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பாகூர்- நெட்டப்பாக்கம் கொம்யூன்குழு செயலாளர் த.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் வெ.கலியமூர்த்தி, வெ.பழனிவேல், வி.பி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் நலக்கூட்டியக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலருமான ஆர்.விசுவநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், ம.தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் ஆர்.சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச்செயலாளர் ப.அமுதவன் ஆகியோர் பேசினர்.

நிர்வாகிகள் நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, எஸ்.சலீம், விஎஸ்.அபிஷேகம், வே.கு.நிலவழகன், கலியன்,சரவணன், தமிழ்மாறன், தமிழ்வளவன், மணிமாறன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமப்புறமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போராடும் மக்கள் நலக்கூட்டியக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply