பத்திரிக்கை செய்தி
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் புதுவை மாநிலத்தை புறக்கனிக்கப்பட்டதை நினைவூட்டுகிற வகையில் மத்திய ரயில்வே அமைச்சர், மத்தியணையமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தலைவர், புதுவை முதல்வர், புதுவை பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் புதுவை ராஜ்யசபா உறுப்பினர் ஆகியோர்களுக்கு தந்தி கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் பயனிகள் பயனக்கட்டணம், சரக்குக்கட்டணம் உயர்த்தாமல் இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் புதுவை பிரதேச செயற்குழு வரவேற்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைவிட ரூ.645 கோடி அதிகமாக சரக்குக் கட்டணம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறியீட்டை அடைவதற்கு இரயில்வே துறையின் பாதுகாப்பு விரிவாக்கம், வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதோடு தமிழகத்தில் மேலும் 5 புதிய ரயில்களை அனுமதித்ததற்கு பாராட்டை தெரிவித்துக்கொள்வதோடு தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுவையை கண்டுகொள்ளாமல் விட்டது வேதனை அளிக்கிறது.
புதுவை ஒரு சிறிய மாநிலமாகும், விழுப்புரம் to புதுவை அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதை வரவேற்பதோடு மின்சார இணைப்பை கொடுத்து துரித ரயிலாக மாற்றி ரெகுலர் சர்வீஸாகவும், புதுச்சேரி to திருவண்ணாமலையோடு விஸ்தரிப்பதும், தின்டிவணம் to புதுச்சேரி ரயில்பாதை அமைப்பதும், எதிர்காலத்தில் கடலூர் to புதுச்சேரி இந்த இணைப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம். முதல்கட்டமாக புதுவை to தாம்பரம் போல் இயக்க வேண்டும். ரயில்வே பாதுகாப்புக்குழு போடுகிறபோது அரசியல் மாட்சரியங்களை மறந்து அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இவண்
(தா.முருகன்);
செயலாளர்
19.07.2004