முதல்வர் அவர்களுக்கு கடிதம்

பெறுதல் : மாண்புமிகு முதல்வர் அவர்கள்.                                                                                         05.06.2008
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.
மதிப்பிற்குரியீர்

பொருள் : பெட்ரோலிய பொருட்கள் வினியோகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை கோருதல் தொடர்பாக.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு , வனமக்கள் பாதுகாப்பு சட்டம் தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், தகவல் அறியம் சட்டம், பெண்கள் மீதான குடும்பவன்முறை தடுப்பு….. உள்ளிட்ட சில ஆக்கபூர்வமான காரியங்களை செய்துள்ளது. இதில் இடதுசாரிகளின் தலையீடுகளும் – பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை என்பதை அறிவீர்கள். என்றாலும் மத்திய அரசு, முந்தைய பா.ஜ.க கடைபிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதால் எப்போதுமில்லாத விலைஉயர்வு ஏழைஎளிய நடுத்தர மக்களை கடுமையாக பதித்துள்ளது. மேலும் மத்திய அரசு 05.06.2008 ல் பெட்ரோலிய பொருட்கள் மீதான செங்குத்தலான விலையேற்றம் அறிவித்துள்ளதன் மூலம் அனைத்துப் பொருட்கள் மீதான விலைகலும் உயரும் – பணவீக்கம் அதிகரிக்கம். சாமானிய மக்கள் மேலும் கடும் துன்பத்திற்கு தள்ளப்படுவார்கள்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு என்றாலும் மாநில அரசும் விலைஉயர்விலிருந்து மக்களை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தங்களை கேட்டுக்கொள்கிறது.

இலவச அரிசி திட்டம், பாமாயில், பருப்பு உள்ளிட்ட 5 பொருட்கள் மானியவிலையில் வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் தங்களது ஆட்சியில் விலைஉயர்வின் கடுமையில் இருந்து மக்களை பாதுகாக்கும் திட்டங்களாகும். என்றாலும் இத்திட்டத்தை தொடர்நது அமல்படுத்தவும் மேலும் பலப்படுத்தவும் தங்கள் அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும்.

1. இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து மாதா மாதம் வழங்குவதை உறுதிச்செய்தல்.

2. தமிழகத்தில் கிலோ அரிசி ரூ 2 க்கு வழங்கப்படுகிறது. அதைப்போல புதுச்சேரியிலும் ரூ 2 க்கு ஒரு கிலோ அரிசி என்ற வகையில் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ வழங்கிடுக.

3. பாமாயில், பருப்பு, மல்லி, மிளகாய், சிவப்பு அட்டைதாரருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதில் விரும்பிய பொருளை வாங்கவும் , அதற்கேற்ப மானியம் அளிப்பதிலும் பிரச்சனை எழுகிறது. விரும்பிய பொருளை வாங்க உத்திரவாதம் செய்ய வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிற அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். இவைகளுடன் மேலும் ரவா, கடலைபருப்பு , உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும். ரேஷனில் வழங்கப்படும் அனைத்துப் பொருளும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.

4. பேட்ரோல் – டீசல்,சமையல் எரிவாயு மீதான மாநில விற்பனை வரியை குறைத்து விலைகளை குறைத்திட வேண்டும்.
5. தகுதியடைய நபர்களுக்கு புதிய சிவப்பு ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு வினியோகத்தில் தொடர்ந்து பிரச்சனை எழுகிறது. இவற்றில் மாநில அரசு ஒழுங்குபடுத்தவம், மக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்கவும் உரிய பொறுத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

1. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் அளவு, எண்ணெயின் தரம், விற்பனை அளவை அன்றாடம் கண்காணித்தல், கள்ளச்சந்தையில் விற்பது, பதுக்குவது ஆகியவற்றை முற்றாக ஒழித்தல் .
2. அனைத்து பங்குகளிலும் சாதாரண பெட்ரோல் டீசலை தட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். சில பங்குகளில் சிறப்பு பெட்ரோல் ,டீசல் மட்டுமே வழங்கப்படுவதாக தகவல் வருகிறது. சிறப்பு பெட்ரோல் , டீசல் என்ற முறையில் கொள்ளையடிக்கும் பங்க் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. குடிமைப்பொருள் வழங்கு துறை மற்றும் உணவு கட்டுப்பாட்டுப் பிரிவு (குழுழுனு ஊநுடுடு) கள் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் தரமான பெட்ரோல், டீசல் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். கலப்பட பெட்ரோல்,டீசல் குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டும்.
4. னைத்து பங்குகளிலும் பெட்ரோல், டீசல் விலைகள் பட்டியலை வாடிக்ககையாளர்கள் பார்வைக்கு தெரியும் படி வைத்தல்.அன்றாட இருப்பை அறிவிக்க வேண்டும்.
5. சாதாரண,பெட்ரோல், டீசல், சிறப்பு வகை பெட்ரோல், டீசல் இவற்றிற்கான வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. ஆட்டோ தொழிலாளர்கள் – உரிமையாளர்களுக்கு மானியத்துடன் பெட்ரோல்,டீசல், கேஸ் வழங்க வேண்டும்.
7. ஆசிரமத்தின் பெட்ரோல் பங்குகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஆட்டோக்களுக்கு பெட்ரோல் , டீசல் வழங்கப்படுகிறது. இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையை நீக்கி மற்ற பங்க்குகளைப்போல எல்லா நேரத்திலும் பெட்ரோல்- டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட அம்சங்கள் மீதும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்கு சார்பில் வேண்டுகிறோம்.

இங்ஙனம்
(ஏ,பெருமாள்)
செயலாளர்

Leave a Reply