புதுச்சேரி : ஆட்சி முடிய நான்கு மாதங்களே உள்ள நிலையில், தனது அமைச்சரவையை விரிவாக்கி மீண்டும் புதுச்சேரி அரசியலில் ஒரு அதிரடியை அரங்கேற்றியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றதால் அப்போது அதன் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து ராஜவேலு, கல்யாணசுந்தரம், சந்திரகாசு, பன்னீர்செல்வம், தியாகராஜன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த கல்யாணசுந்தரம் மீது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த சர்ச்சையில் அவரது பதவி பறிபோனது. அதற்குப் பிறகு அந்த அமைச்சர் பதவி கடந்த நான்கரை ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்து வந்தது. http://www.vikatan.com/article.php?module=news&aid=53987&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2