06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பதும் அவரது படகுகளை திருப்பி தருக

பெறுதல்

 மாண்புமிகு முதல்வர் அவர்கள்

புதுச்சேரி அரசு, புதுச்சேரி

 ஐயா

பொருள் : 06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பது தொடர்பாக.

 புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த விசைப்படக்கு உரிமையாளர் திரு.வீரமணி அவர்கள் படகோடு 06.12.2015 அன்று மீன் பிடிக்க சென்ற மீனவர்களை அன்று இரவு சுமார் 11 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கு சுமார் 10 நாட்டிகல் மைல் தூரத்தில் நமது எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை

1.       வீரமணி                       2. வீர்ராஜன்           3. பொன்னுசாமி  4.       ரங்கநாதன்                   5. வினித்              6. ரபின்குமார்

7.       அஜித்குமார்                  8. காளிதாஸ்         9. இடும்பன் 10.      நீலமேகம்            

ஆகியோரை கைதுசெய்து அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் வலைகளை அறுத்து சேதப்படுத்தியும் மீனவர்களையும் விசைப்படகுகளையும் இலங்கை ராணுவம் சிறைபிடித்து மீனவர்களை யாழ்ப்பானம் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இது போன்று கைது செயல்பாடுகள் இலங்கை கடற்படையினரால் தொடர்கிறது. ஏற்கெனவே 8 விசைப்படகுகள் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்திய அரசு தலையிட்டு விடுதலை செய்தாலும் விசைப்படகுகளை திருப்பிக் கொடுப்பதில்லை. பல இலட்சகணக்கான ரூபாய் பெறுமான படகுகளை இப்படி மீனவர்கள் இழந்துள்ளார்கள்.

 எனவே, உடனடியாக மத்திய அரசு தலையிட்டு கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும்  மீட்க தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கேட்கிறோம்.

 

இந்த செய்தியை தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள

{ இராஜாங்கம். ஆர்}

பிரதேச செயலாளர்

Leave a Reply