தேசநலனுக்கு எதிரான அணுஒப்பந்தத்தை கைவிடுக.
விலை உயர்வை, பணவீக்கத்தை தடுத்து நிறுத்துக,
மக்கள்விரோத கொள்கைகளை கைவிடு
என வலியுறுத்தி
மாநிலம் முழுமையும் ஜூலை 16 முதல் 19 வரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பிரச்சார இயக்கம்.
மதவெறி பா.ஜக மத்தியில் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் உயரிய நோக்கத்தில் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு இடது சாரிகள் ஆதரவு அளித்தன. குறைந்த பட்ச பொதுசெயல் திட்டத்தின் அடிப்படையில் அரசு செயல்பட வலியுறுத்தி வந்தன.
இடதுசாரிகளின் பங்களிப்பு
கடந்த நான்காண்டு காலத்தில் இடதுசாரிகள் நிர்பந்தத்தின்பேரில் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், பழங்குடியினருக்கு வனஉரிமைச்சட்டம் அகிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான பெல், நெய்வேலி மின்துறை, காப்பீட்டுத்துறை, வங்கித்துறை, ஆகிய நிறுவனங்களில் பங்குகள் தனியாருக்கு விற்பதை தடுத்து நிறுத்தப்பட்டது. சில்லரை வணிகத்தில் அந்நிய மூலதன நுழைவும் தடைசெய்யப்பட்டது. மதவெறி நடவடிக்கைகளும் பின்னுக்கு தள்ளப்பட்டன. எனினும் எப்போதுமில்லாத அளவிற்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்களை அழுத்தும் நிலையில் பணவீக்கம் முன் எப்போதுமில்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உடனான அணுஉடன்பாட்டை நிறைவேற்ற மன்மோகன் சிங் அரசு தீவிரம்; காட்டுகிறது. இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதியைவிட புஷ்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது.
வின்னைமுட்டும் விலை உயர்வு குறைக்க மறுக்கும் மத்திய அரசு
குறிப்பாக 2004 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரிசி விலை 46 சதவீதமும் கோதுமை விலை 62 சதமும் எண்ணெய் விலைகள் 42 சதவீதமும் , பெட்ரோல் விலை 50 சதமும் டீசல் விலை 60 சதமும் , சமையல் எரிவாயு விலை 52 சதமானமும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் நெருக்கடி ,விவசாயிகள் தற்கொலை, பெரும்பகுதி மக்களின் வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவையெல்லாம் இந்த காங்கிரஸ் அரசின் கொள்கைகளால் விளைந்த விளைவு.
மறுபுறத்தில் கோடீஸ்வரர்களின் சொத்து பெருமளவு உயர்ந்துள்ளது. கடந்த 2006 ல் பெரு முதலாளிகளுக்கு 2 1ஃ4 லட்சம் கோடி ரூhபாய் சொத்து என்பது 2007 ல் 4 1ஃ4 லட்சம் கோடிரூபாயாக உயர்ந்துள்ளது. உலக ட்ரில்லியன் பணக்காரர்கள் வரிசையில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்திய முதலாளிகள் அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளார்கள். ஆனால் உழைப்பாளி மக்களின் 70 சதவீதத்தினர் நாளொன்றுக்கு ரூபாய் 20 தான் வருமானம் ஈட்டுகிறார்கள் என்று அரச அமைத்த அர்சின்சென் குப்தா அறிக்கை தெரிவிக்கிறது. இது தான் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை.
இந்நிலையில் ஏறிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரிகள் முன்வைத்த மாற்று திட்டம் , அத்தியாவசிய உணவு பண்டங்களில் முன்பேரவர்த்தகத்தை தடைசெய்வது, பதுக்களை தடுப்பது, பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பு முறைகளை மாற்றி விலைகளை குறைப்பது, தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் கெர்ள்ளை லாபத்தில் வரிவிதிப்பது , பொதுவினியோக திட்டத்தில் 15 அத்தியாவாசிய பொருட்களை மாநிய விலையில மத்திய விலையில் அனைவருக்கும் வழங்கவது. ஆகிய அம்சங்களை மத்திய அரசு பரிசீலிக்க மறுக்கிறது.
இந்திய நாட்டின் பாதுகாப்பு ராணுவம், அயலுறவுக்கொள்கை , பொருளாதாரம் உள்ளிட்ட சகல அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்கா நலனுக்கு ஆதரவான அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. ஏறிவரும் விலைவாசியை குறைக்க, பணவீக்கத்தை கட்டுப்படுத்த , மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை மீறி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா உடனான அணுஉடன்பாட்டை நிறைவேற்ற மன்மோகன் சிங் அரசு தீவிரம்; காட்டுகிறது. இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதியைவிட புஷ்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது.
வேறு வழியின்றி மத்தியஅரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற்றன. தேச நலன் ,மக்கள நலன் இவற்றுக்கான போராட்டத்தில் அனைத்து உழைப்பாளி மக்களும் இணைந்து போராட முன்வரவேண்டுமென வேண்டுகிறோம்.