இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினம் இன்று.
1977 ஜீன் 21 அன்று முதன்முதலில் இடதுசாரி ஆட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 34 ஆண்டுகள் இடதுசாரிய முன்னணி அணி தான் ஆட்சியில் இருந்தது. இந்தியாவிலே கூட்டணி ஆட்சியை நடைமுறைப்படுத்தி, கூட்டாட்சி தத்துவத்தை செயல்படுத்திய ஒரு அரசாங்கம் இடதுசாரிய முன்னணி அரசாங்கம் தான். இந்தியாவிலே ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாக இருந்ததும் இடதுசாரிய முன்னணி அரசு தான். 1946 முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிபாசு 24 ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் முதல்வராய் ஜொலித்தார். தம் ஆட்சிக்காலத்திலேயே புத்ததேவ் பட்டாச் சார்யாவை முதல்வராக்கி தான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து, வேறு எங்கும் நிகழாத அற்புதம் நிகழ்ந்தது.
கிராமப்புற வளர்ச்சி, நிலச்சீர்திருத்தம் 1977 முதல் இடது முன்னணியின் முதன்மை இலக்காக இருந்தது .
நிலச்சீர்திருத்தம், உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் என்கிற இரண்டும் கிராமப்புற வளர்ச்சி என்கிற கோபுரத்தின் அடித்தளம் எனில் மிகையல்ல. 73. 66 லட்சம் ஹெக்டேர். இதில் 18 விழுக்காடு அதாவது 13.81 லட்சம் ஹெக்டேர் நிலம் மேற்குவங்கத்தில் மட்டும் கையகப்படுத்தப்பட்டது. இதில் 10. 63 லட்சம் ஹெக்டேர் நிலம் ஏழை விவசாயிகளுக்கு தரப்பட்டது. 26 லட்சத்து 46 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்தனர். இதில் 9.72 லட்சம் பேர் தலித்துகள். 5.11 லட்சம் பேர் பழங்குடியினர் என்பது ஜோதிபாசு ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனையாகும்.
உள்ளாட்சி அமைப்பு களுக்கான 73 மற்றும் 74-வது அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் 17 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாயத்துகளுக்கு உரிய இடத்தை அளித்து முன்னோடியாக முன்மாதிரியாக ஜோதிபாசு தலைமை யிலான மேற்கு வங்க அரசு 1978 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஐந்து முறை தேர்தலை நடத்திய பெருமை உண்டு. 18 வயதில் வாக்குரிமை என்பதை முதன்முதலில் பஞ்சாயத்து தேர்தலில் அமலாக்கி வரலாற்றில் முத்திரை பதித்தது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்கிற மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை மேற்குவங்கத்தில் 1978 முதல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. நாடெங்கும் தலித் மற்றும் பழங்குடிகள் மீது கொடும் தாக்குதல்கள் நிகழும்போது, ஜோதிபாசுவின் ஆட்சி யில் மேற்குவங்கம் விதிவிலக்காக அவர்களின் பாதுகாப்பு அரணாக வளர்ச்சிக்கு ஏணியாக இருந்தது என மண்டல் கமிஷன் அறிக்கை பாராட்டியுள்ளது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நாடெங்கும் சீக்கியர்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். மேற்குவங்க இடதுமுன்னணி அரசு தொழிலாளர்களும் விவசாயிகளும் கட்சி ஊழியர்களும் சீக்கியர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து பாதுகாத்தனர். அயோத்தி ரத யாத்திரையால் நாடு ரணகளம் ஆனது. சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கம் சிறுபான்மையினரை பாதுகாத்து என மேற்குவங்க இடதுசாரி அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM), அகில இந்திய ஃபார்வர்டுபிளாக்(AIFB), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி(RSP) ஆகிய இடதுசாரிய இயக்கங்கள் ஒன்றிணைந்தது தான் இடதுசாரிய முன்னணி அணி (LEFT FRONT).
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > மேற்குவங்க இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த தினம்.
மேற்குவங்க இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த தினம்.
posted on
You Might Also Like
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
October 4, 2024