சபரிநாதனின் மரணத்திற்கு நீதி வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி

பத்திரிக்கைச்செய்தி

எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது.

 

பெறுநர்                                                                                                                                                                    26.08.2017

உயர்திரு உதவி ஆய்வாளர் அவர்கள்,

இலாசுப்பேட்டை காவல் நிலையம்,

புதுச்சேரி

வணக்கம்,

புதுச்சேரி, சாமிப்பிள்ளைத்தோட்டை சேர்ந்த சபரிநாதன் என்ற தலித் சமூகத்தை சார்ந்த வாலிபரை முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் காவல் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில் மனம் உடைந்த அந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 22.08.2017 அன்று காலை 10.00மணியளவில் சபரிநாதனை முத்தியால்பேட்டை காவல்நிலைய இரண்டு காவலர்கள்  விசாரனை என்று கூறி அழைத்து சென்றார்கள். எதற்காக விசாரனை என்பதை சபரிநாதனின் பெற்றோருக்கு தரமறுத்த காவல்துறை காலை  10.00 மணி முதல் இரவு 10.00 வரை சித்தரவதை செய்து, நாள் முழுவதும் அடித்து  உள்ளனர். குறிப்பாக கை, கால், முகம், முதுகு, சூத்தாப்பட்டை உள்ளிட்ட இடங்களில் இரத்தக்கட்டுக்கள் இறந்து போன சபரிநாதனின் உடலில் காணப்படுகிறது. முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள் கோவிந்தராஜ் மற்றும் முத்துகுமார், காவலர்கள் தேவ மற்றும் லூர்து ஆகியோர் தான் கடுமையாக தாக்கினார்கள் என்று சபரிநாதம் தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

இரவு 10.00 மணியளவில் சபரிநாதனின் தந்தையை அழைத்த காவலர்கள், எழுந்து நிற்க முடியாத தன் மகனை தூக்கி செல்லுமாறு கூறியுள்ளார்கள். பிறகு சபரிநாதனின் தந்தையிடம் இரண்டு வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு மகனை ஒப்படைத்தார்கள். பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சபரிநாதனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.  சபரிநாதன் தான் தந்தையிடம் வலிதாங்க முடியவில்லை என்று அழுதுள்ளான்.

அன்று  இரவு தூக்கிட்டு சபரிநாதன் தற்கொலை செய்து கொண்டான். பிறகு சபரிநாதனின் தந்தை இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் தன் மகனின் தற்கொலைக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். ஆனால் இது வரை தற்கொலைக்கு தூண்டிய சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள் கோவிந்தராஜ் மற்றும் முத்துகுமார், காவலர்கள் தேவ மற்றும் லூர்து ஆகியோர் மீது வன்கொடுமை தடிப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும், இறந்து போன சபரிநாதனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

(இரா. ராஜாங்கம்)

செயலாளர்

நகல்:

 

1.உயர்திரு. தலைவர். அவர்கள்,

NATIONAL COMMISSION FOR SCHEDULED CASTES, CHENNAI

  1. உயர்திரு. முதுநிலை கண்காணிப்பாளர். அவர்கள்,

காவல்துறை ( சட்டம் மற்றும் ஒழுங்கு),  புதுச்சேரி

3.உயர்திரு. தலைவர். அவர்கள்,

மனித உரிமை ஆணையம், புதுச்சேரி

 

Leave a Reply