உணவு, பழச்சாறு படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்டில் 2015-16 கல்வி ஆண்டு உணவு மற்றும் பழச்சாறு வடிவமைப்பு படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் பயிற்சி காலம் 6 மாதங்கள் ஆகும். கல்வித்தகுதியாக 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையாக படித்திருக்க இருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்ட (எஸ்சி/எஸ்டி – 28 வயது) ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இந்நிறுவனத்தில் ரூ.100 (எஸ்சி/எஸ்டி – ரூ.50) செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் http://pihmct.puducherry.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற டிச.23ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தொர்ந்து 2016ம் ஆண்டு ஜன.4ம் தேதி வகுப்புகள் துவங்கும். இப்பாடப்பிரிவு பயின்று முடிப்பவர்களுக்கு இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதியும் உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply