அரசு பொது மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்தோறும் ஆயிரக்கனக்கான மக்கள் வருகைதரும் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும்.சிடி ஸ்கேன் உள்ளிடட மருத்துவ கருவிகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும்.செயற்கை சுவாச கருவிகளை உடனே வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவாணன், கமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மது,சிவக்குமார்,மணவாளன்,அழகர்ராஜ் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக காந்திவீதி,நேருவீதி சந்திப்பில் இருந்து ஊர்வளமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply