மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றப்படும் மாநில உரிமை கிடைக்கும் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றி எந்தவிதமான கருத்தும் இன்றி புதுச்சேரி கூட்டணி அரசு இந்த பட்ஜெட்டை அறிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் போட போவதாக அதையே ஒரு சாதனை போல பேசி வந்த இந்த ஆட்சியாளர்களை நம்பி புதுச்சேரி மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால் புதுச்சேரியில் நிலவக்கூடிய கடும் வேலையின்மை பற்றியோ மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் ,சர்க்கரை ஆலைகளை திறப்பது பற்றியோ, ஊதியம் இன்றி தவிக்கும் தவிக்கும் அரசு சார்பு நிறுவனங்கள் ஊழியர்களின் நலன்களைப் பற்றியோ, மின்துறை தனியார்மயம் ஆவது தடுப்பது பற்றியோ, எந்தவித உரிமைகளும் இன்றி தவித்து வரும் புதுச்சேரி தொழிலாளர்கள் நலன் பற்றியோ பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது பற்றியோ சமூகத்தை சீரழிக்கும் போதை கலாச்சாரத்தை பற்றியோ , எப்போதும் இல்லாத அளவிற்கு 4 சதவீதம் புதுச்சேரியின் வளர்ச்சி குறைந்திருப்பது பற்றியோ இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் புதுச்சேரி மக்களை ஆளும் பாஜக. என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு ஏமாற்றியுள்ளது.
2022 ஆகஸ்ட் மாதம் சுமார் 10,000 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் சுமார் 50 முக்கிய திட்டங்களை அமுல்படுத்த போவதாக கவர்ச்சிகரமாக இதேபோன்று அறிவித்தார்.
ஆனால் அதில் ஒன்று கூட கடந்த காலத்தில் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த இரண்டு பட்ஜெட்டுகளில் என்னென்ன அறிவிப்புகளை கொடுத்தாரோ அதில் ஒன்று கூட புதுச்சேரி மக்களுக்கு சென்றடையவில்லை
அதனை மறைத்து விட்டு மீண்டும் அதே சாகசத்தை அரங்கேற்றிருக்கிறார்.
. ரேஷன் கடைகளை திறக்கப் போவதாகவும், 14 அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கப் போவதாகவும், சாத்தியக்கூறுகளை ஆராய கமிட்டி அமைக்கப் போவதாகவும் கடந்த பட்ஜெட்டில்அறிவித்த முதல்வர் ரங்கசாமி தற்போது அதைப் பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட பேசாமல் மக்களை ஏமாற்றியுள்ளார் .அதன் ஊழியர்கள் 50 மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். புதுச்சேரி மக்கள் வறுமையால் வாழ்வாதாரம் இருந்து தவித்து வரும் நிலையில் ரேஷன் கடைகளை மூடி வைத்திருப்பது பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களின் பட்ஜெட்டாக இது இருக்கிறது.
புதுச்சேரியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதற்காக ,முடக்கி போட்டுவிட்டு, மேலும் பள்ளியில் தமிழ் கற்க வழியில்லை, அரசு துறைகளில் தமிழ் இல்லை இந்த நிலையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வெக்கக்கேடானது .
மோடி அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும்சமையல் கேஸ் விலை வெறும் ரூபாய் 410 ஆக இருந்தது. ஆனால் தற்போது 1200 ரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வை கண்டிக்காமல், குறைக்க சொல்லி கோரிக்கை வைக்காமல் சிலிண்டருக்கு ரூபாய் 300 மானியம் வழங்கப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான நிதி ஆதாரங்கள் பற்றி, செயல்படுத்தப்படும் முறை குறித்தும் அறிவிக்கவில்லை. அதேபோல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 50,000 வைப்பு நிதி செலுத்த போவதாக அறிவித்துள்ளார் .இவைகள் அவரின் வழக்கமான வெற்று அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த பட்ஜெட்டில் தொழிலாளர் நலன் என்று தலைப்பில் முதல்வர் பேசியுள்ளார். ஆனால் தொழிலாளர்களைப் பற்றி ஒரு வார்த்தை குறிப்பிடப்படவில்லை இந்த அரசு எவ்வளவு மோசமாக தொழிலாளர்களை வஞ்சிக்கிறது என்பதற்கு இதுசிறந்த உதாரணமாகும்.
புதுச்சேரி தொழிலாளர்கள் எந்தவித பணி பாதுகாப்பு ,குறைந்தபட்ச ஊதியம் ,சட்ட பாதுகாப்பு, நிவாரணம் ,மருத்துவ உதவி, போன்றவைகள் ஏதுமில்லாமல் துயரங்களுக்கு ஆட்பட்டு வரும் நிலையில் முதல்வர் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் ஒட்டுமொத்த புதுச்சேரி தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.
வணிகர்களுக்கு நலவாரியம் அமைக்க 2 கோடி நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் முறைசாரா தொழிலாளர்களின் நல வாரியத்திற்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் துரோகம் செய்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது சட்டவிரோதமானது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் விவாதிக்காமல், பொதுமக்களிடம் மாணவர்களிடம் , ஆசிரியர்களிடம் கருத்து கேட்காமல் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கான இதுவரை எல்லா அரசுகளும் வழங்கி வந்த அடிப்படையான தரமான மதிய உணவு ,சீருடை , மிதிவண்டி, பேருந்து வசதி, ஆசிரியர்கள் தேவையான உட்கட்டமைப்பு போன்ற எந்த வசதிகளையும் ஏற்படுத்தி தராமல் மாணவர்களுக்கு பெரும் துரோகத்தை இந்த அரசு செய்துள்ளது.
தங்களை இரட்டை எஞ்சின் ஆட்சி என்று பீற்றிக்கொள்ளும் இந்த அரசின் பட்ஜெட்டில் கடும் நெருக்கடியில் வாழக்கூடிய கிராமப்புற தொழிலாளர்களின் நலன்கள் பற்றி முதல்வரின் அறிக்கையில் எதுவும்இல்லை குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு 15 நாட்களுக்கு கூட வேலை வழங்கவில்லை. தற்போதும் இதற்கான எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட் இல்லை.
பிற்படுத்தப்பட்ட மக்கள்மற்றும் சிறுபான்மை மக்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பட்ஜெட்டாக இது இருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி அவர்கள் தன்னை பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலன் என்று அறிவித்துக் அறிவித்துக் கொண்டு அவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் அரசு பணியில் இதுவரை கிடைத்து வந்த இட ஒதுக்கீட்டைப் பறித்துள்ளார் எந்த விதமான ஆய்வுகள் இன்றி ஈடபுல்யூஎஸ் திட்டத்தை அமுல்படுத்தி துரோகம் செய்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சாதனையை படைக்கப் போவதாக கூறிய பாஜக . என் ஆர் காங்கிரஸ் அரசின் பட்ஜெட் தேர்ந்தெடுக்கப்பட்டஆட்சியாளர்கள் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் நடைமுறைக்கு வரக்கூடிய திட்டங்களையே புதுச்சேரி முதல்வர் ஒரு பட்ஜெட்டாக அறிவித்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளதோடு, மத்திய மோடி அரசின் பொய் வாக்குறுதிகளை நம்பி புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை அழிக்க பார்க்கிறார்.
எனவே வெற்று அறிவிப்பாக உள்ள பட்ஜெட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து புதுச்சேரி முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > வெற்று அறிவிப்புகளை கொண்ட மக்களைப் பற்றி கவலைப்படாத ஏமாற்று பட்ஜெட் 2023-24
வெற்று அறிவிப்புகளை கொண்ட மக்களைப் பற்றி கவலைப்படாத ஏமாற்று பட்ஜெட் 2023-24
posted on
You Might Also Like
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்திய புதுச்சேரி
September 14, 2024
பாகூர் பகுதி சிபிஐ(எம்) கட்சி வரலாறு
September 9, 2024