பீகார் தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 67 சதவீத வாக்காளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இது முந்தைய தேர்தலை விட 9.6 சதவீதம் அதிகமாகும். குறிப்பிடத்தக்க வகையில், 71.6 சதவீத பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். இது பெண்கள் அரசியல் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது. வாக்குப் பகிர்வு தரவு காட்டுவது போல், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2024 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அதிக வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், இப்போது அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்திருக்கிறது.

ஆளும் கூட்டணி முழு அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தியது, பல்வேறு தில்லுமுல்லுகளை மேற்கொண்டது, அதிக அளவு பணத்தையும், மாநிலத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான ஊழியர்களையும் பயன்படுத்தியது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட அதன் தலைவர்களின் மதவெறி, சாதி வெறிப் பேச்சுகள் மக்கள் மத்தியில் பயன் ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதன் காரணமாக மகா கூட்டணியால் எழுப்பப்பட்ட மக்கள் பிரச்சனைகள் வெளிவராமல் மூழ்கடிக்கப்பட்டது.

பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அதன் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, மேலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் பாகுபாடான அணுகுமுறை, சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) திடீர் துவக்கம் மற்றும் இவற்றுக்குப் பின்னால் உள்ள இதர காரணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆராய்ந்திடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் பிற எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பீகார் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply