விளையாட்டு வீரர்களுக்கு அரசு அறிவித்த திட்டங்களை அமல்படுத்த வலியுறுத்துகிறோம்

புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அரசு அறிவித்த திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று மார்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள்  தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்று நமது மாநிலத்திற்கு  பெருமை சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான வைத்தியலிங்கம் அரசு தேசிய அளவில் தங்க பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.5லட்சம், வெள்ளி பதக்கம் ரூ,3லட்சம், வெண்கல பதக்கத்திற்கு ரூ.2லட்சம் என் அறிவிப்பு செய்து 2006ஆம் ஆண்டு அமல்படுத்தியது. அதற்கு பிறகு வந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு இந்த விருதின் தொகையை பாதி அளவில் குறைத்ததே தவிர, எந்த ஒரு வீரர்களுக்கும் இதுநாள்வரை ஊக்கதொகை வழங்கியதில்லை.

மேலும் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் விளையாட்டு வீரர்களுக்கான  இட ஒதுக்கீடு அமல்படுத்தவில்லை. அட்டியா- பட்டியாக என்ற விளையாட்டு, ஜந்து மாநிலங்களுக்கான விளையாட்டே தவிர அது தேசிய விளையாட்டு இல்லை. ஆனால் அதில் வெற்றி பெற்றவர்கள் உண்மைக்கு மாறான சான்றிதழ்களை கொடுத்து  அரசு பணிகளை பெற்றுள்ளனர். இதில் தேசிய அளவில் வெற்றிபெற்ற வளுத்தூக்கும் வீரர்கள்  புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தான் புதுச்சேரி அரசு உடனடியாக விளையாட்டு வீரர்கள் பிரச்சனையில் தலையிட்டு அவர்களுக்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதன்படி அரசு அறிவித்த ரொக்கவிருதுகளை தேசிய அளவில் வெற்றிபெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு உடனே வழங்க வேண்டும். அட்டியா-பட்டியா விளையாட்டை தேசிய விளையாட்டு இல்லை என்பதை தெளிவு படுத்த வேண்டும். அரசு பணிகளில்  விளையாட்டு வீரர்களுக்கான முன்னூரிமை அளிக்க  முன்வர வேண்டும். இதனை நிறைவேற்றாதபட்சத்தில், புதுச்சேரி அரசை எதிர்த்து அனைத்து பகுதி விளையாட்டு வீரர்களையும் இணைத்து விரைவில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்.

இப்படிக்கு,
ஆர்.ராஜாங்கம், செயலாளர்.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்குழு குழு, புதுச்சேரி.

Leave a Reply