புதுச்சேரி முதலமைச்சருக்கு விவசாயிகளின் கோரிக்கைகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்                       
புதுச்சேரி அரசு,                         
புதுச்சேரி.

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி; வெற்றி பெற்று தங்கள் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு புதுச்சேரிக்கான நிதியை பெறுவதில் எடுத்த முயற்சிகளை வரவேற்கிறோம். அதன் பிரதிபலனாக கடந்த காலத்தை விட கூடுதலாக 1200 கோடியை கூடுதலாக பெறுவோம் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியதாகும். மேலும் எதிர் வரும் பட்ஜெட்டில் விவசாயத்தை பாதுகாக்க கூடுதலான நிதியை ஒதுக்கி விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தவும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவிடுவதற்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளடக்கிய குழுவை நியமித்து கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். அதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் பின்வரும் கோரிக்கைளை தங்கள் கவனத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கிறோம்.

1. புதுச்சேரி பசுமைத்திட்டம்
விவசாயம் நட்டத் தொழிலாக மாறியதாலும் பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களாலும் விளைநிலங்கள் விவசாயம் சாராதவற்றிற்கு திருப்பிவிடுவதும், விவசாயத்திற்கு பயனற்ற நிலப்பரப்பு அதிகரிப்பதும் தொடர்கிறது. கடந்த இரண்டாண்டு மத்திய பாஜக ஆட்சியில் 5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் குறைந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 31 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளைநிலங்கள் 2015 ஆம் ஆண்டு விபரப்படி 25247 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதில் ஆண்டுக்கு 3 முறை விவசாயம் பயிர் செய்யும் நிலங்கள் 9832 ஹெக்டேராகும். உண்மை நிலமை இதைவிட மிகமோசமான அளவிலேயே விளைநிலங்கள் உள்ளன. உணவு பாதுகாப்பு, நீர்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விவசாயத்தொழிலை பாதுகாக்கவும், விளைநிலங்களை பாதுகாக்கவும் பசுமை புதுச்சேரி திட்டத்;தை செயல்படுத்த வேண்டுகிறோம் . நடப்பு 2016 -2017 பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு செய்வீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

2. அரசே நேரடி நெல்; கொள்முதல் செய்வது

   புதுச்சேரி மாநிலத்தில் விவசாய நிலங்கள் படிப்படியாக குறைந்துவரும் சூழ்நிலையில் விவசாயிகள் பல நெருக்கடிகளை தாங்கிக்கொண்டு விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் புதுச்சேரி அரசு ஒழுங்குமுறை விறபனைக்கூடத்தில் விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்யும் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் தானியத்துக்கான பணத்தை உடனுக்குடன் தருவது இல்லை. 10 நாள் 15 நாள் வரை விவசாயிகளை அலைக்கழித்து பணம் கொடுக்க்pறார்கள். எனவே விவசாயிகளின் நலனையும், அரசு இலவச அரிசித் திட்டத்திற்கு உதவும் வகையிலும் அரசே நேரடி நெல் கொள்முதலை செய்ய வேண்டும். அரசு அறிவிக்கின்ற விலை கிடைக்க உத்தரவாதப்படுத்த வேண்டும். தானியத்துக்கான தொகையும் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. கரும்பு விவசாயிகளை பாதுகாப்பது

 புதுச்சேரி மாநிலத்தில் ஓரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ஒரு தனியார் சர்க்கரை ஆலையும் உள்ளது. ஆனால் இரண்டு ஆலையும் தற்போது இயங்காமல் உள்ளன. மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு சுமார் ரூ 20 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்து வங்கிக்கு செலுத்தாததால் புதுச்சேரி மற்றும் தமிழக விவசாயிகள் அபராதவட்டி மற்றும் மறுலோன் வாங்க  இயலாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் நல்ல நிலையில் இயங்கி லாபத்தை ஈட்டிய இந்த ஆலை மூவர் குழு நியமனத்திற்கு பிறகு நிர்வாகசீர்கேடு, ஊழல் காரணமாக தற்போது நட்டத்தில் இயங்கிவருகிறது. மேலும் அந்த காலத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் சம்மந்தமாக விசாரணைக்கு உட்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு சேரவேண்டிய பாக்கித்தொகையை வட்டியோடு வழங்கி ஆலையை திறம்பட இயக்க் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் அரியூர் இஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலை புதுச்சேரி அரசு அறிவ்pக்கும் கரும்பு விலையை (டன் ஒன்றுக்கு ரூ2750) தரமறுப்பதோடு விவசாயிகள் அனுப்பிய கரும்பு டன் ஒன்றுக்கு  ரூ 2400 தான் தருவேன் என்று கொடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அரியூரில் உள்ள ஆலையை இயக்காமல் இந்த ஆலைக்கு பதிந்த கரும்புகளை நெல்லிக்குப்பம் ஆலைக்கு அனுப்பி அரவை செய்கின்றனர். இதனால் மாநில அரசுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளும் கூடுதல் செலவை சந்திக்க நேரிடுகிறது. எனவே புதுச்சேரியில் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளை பாதுகாக்க அரியூர் ஆலையை துவக்கவும், அரசு அறிவித்த விலையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் கேட்டுக்கொள்கிறது.

4. விவசாய கடன் தள்ளுபடி

புதுச்சேரி மாநில விவசாயிகள் கடந்த ஆண்டுகளில் இயற்கை சீற்றங்களால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி நட்டத்திற்கு ஆட்பட்டுள்ளனர். எனவே தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் மற்றும் கறவை மாட்டுக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

5. பால் உற்பத்தியாளர் கடன் தள்ளுபடி

புதுச்சேரி மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால் 18000 லிட்டர் பால்தான் உற்பத்தியாகிறது. தேவையை ஈடுகட்ட அண்டை மாநிலத்தில் இருந்து அதிகவிலை கொடுத்து பால் கொள்முதல் செய்து வருகிறார்கள். 2007-2008 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில முதலமைச்சர் அவர்கள் முதல்வரின் விவசாயிகள் வருமான உத்திரவாதத் திட்டம் என்ற பேரில் சிறுபால் பண்ணை (10 கறவை மாடுகள் மட்டுமே) வாங்குவதற்கு சிறு குறு விவசாயிகளிடம் உள்ள துண்டு நிலங்களையும் அல்லது வீட்டு மனைகளையும் வங்கியில் காட்டி  50மூ மாநியத்தில் ரூ 2.13 லட்சம் முதல் 2.50 லட்சம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இது புதுச்சேரி மாநில பாண்லே மூலம் நடைமுறைப்படுத்தபடும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் பாண்லே கூறும் வங்கியில் பெற்று குறைந்தது 10 பசு மாடுகள் வாங்கி கொடுத்தார்கள். 2008 முதல் 2009 ஆண்டுகளில் இந்த கறவை மாடுகள் தமிழ்நாடு கோவை, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு எங்களை அழைத்துக்கொண்டு போய் கறவை பசுக்களை பாண்லே நிர்வாகம் வாங்கித்தந்து பால் உற்பத்தியை சமாளித்தார்கள்;;.
புதுச்சேரி அரசும், பாண்லே நிர்வாகமும் திட்டத்தில் கூறிய எதையும் அமுலாக்கவில்லை. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு மாட்டை இழந்த விவசாயிகளுக்கு எதையும் பாராமுகமுமாக அரசும் வங்கியும் உள்ளது. எனவே தாங்கள் தயவு செய்து புதுச்சேரி சிறு குறு விவசாயிகளின் பரிதாப நிலையும் , அவர்கள் அடைந்த பாதிப்பையும் எண்ணிப்பார்த்து , விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் விவசாயிகளின் துணை தொழிலான பால்உற்பத்தியை பெருக்கவும் மீண்டும் கடன் வழங்கவும் ஆவண செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

6. காவிரி நீரை பெறுவது

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்கால், விவசாயத்திற்கு காவிரி நீரை நம்பியே உள்ளது. கடந்த அரசு புதுச்சேரிக்கு சேரவேண்டிய 6 டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கு எந்தவிதத்திலும் முயற்சி மேற்கொள்ளவில்லை .புதிதாக பொருப்பேற்றுள்ள தங்களின் அரசு புதுச்சேரிக்கு சேரவேண்டிய 6 டிஎம்சி தண்ணீரை பெற்று தேவையான இடங்களில் தடுப்பணை கட்டி, திட்டமிட்டபடி ஏரிகளை வெட்டியும், தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாத்து காரைக்கால் மக்களின் குடிநீரையும் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

7. விதை , இடுபொருள் காலத்தோடு வழங்குவது
விவசாயிகள் பட்டத்தோடு பயிர் செய்வதற்கு உழவர் உதவியகங்களில் விதை மற்றும் இடுபொருள் காலத்தோடு கிடைப்பது இலலை. அப்படி உழவர் உதவியத்திற்கு வந்தாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே அரசு மூடியே கிடக்கும் அனைத்து உழவர் உதவியகங்களை திறந்து அனைத்து விவசாயிகளுக்கும் இடு பொருள் , விதை மாநியத்தோடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்துவது
புதுச்சேரி விவசாயிகளின் குறைகளை அவ்வப்போது களைவதற்கு அண்டை மாநிலத்தில் நடைபெறுவது போன்று விசாயிகள் குறைகேட்புக்கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க6
வேண்டும்.

7. புதிய பட்டா புத்தகம் வழங்குவது

புதுச்சேரி மாநிலத்தில் நில பரிவர்த்தனை செய்யும் போது பட்டாமாறுவதற்கு அளிக்கப்படுகின்ற சான்று நடைமுறைப்படுத்துவது இல்லை. எனவே நிலம் கூட்டுப்பட்டாவாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு அளிக்கப்பட்ட மனு பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாதா மாதம் நடைபெறும் சமாபந்தியில் தீர்வு காண்பது போன்று தாங்கள் தலையிட்டு கூட்டு பட்டாவை தனிப்பட்டா புத்தகம் மாற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

( சீ.பத்மநாபன்  )                    (வே.சங்கர்)
தலைவர்                         செயலாளர்

Leave a Reply