வேலைநிறுத்த உரிமையை பாதுகாக்க நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்

வேலைநிறுத்த உரிமையை பாதுகாக்க பிப்ரவரி 24-தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை புதுவையில் வெற்றிபெறச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி புதுச்சேரி அனைத்துபகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறது.

தாங்கள் அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகள் அதிமுக அரசால் பறிக்கப்பட்டதை எதிர்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வலுவான போராட்டம் தமிழகத்தில் கடந்த ஜ{லை 2003-ல் வெடித்தது போராடிய ஊழியர்கள் மீது அதிமுக அரசு அடக்குமுறையை ஏவியது 2 லட்சம் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்தது. இந்த கொடுமையான தாக்குதலை எதிர்த்து தொழிற்சங்கங்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றன. பழிவாங்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலையளிக்க வழிகாட்டிய உச்சநீதிமன்றம் வேலை நிறுத்தம் செய்யும் உரிமைக்கு எதிராக கருத்து வெளியிட்டது.

வேலைநிறுத்த உரிமையை மறுப்பது என்பது மக்களின் ஜனநாயக உரிமை மீது தொடுக்கப்பட்ட கொடிய தாக்குதலாகும். உழைப்பாளி மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை மறுக்கும் மனித உரிமை மீரலாகும் போராடிப்பெற்ற வேலைநிறுத்த உரிமையை பாதுகாத்திடும் வகையில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் சார்பிலும் பிப்ரவரி – 24 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது

வேலை நிறுத்த உரிமையை பாதுகாத்திட பிப்ரவரி 24 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி புதுவை மாநிலக்குழுவும், மார்;க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழுவும் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்வதோடு இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற உழைத்திடுமாறு கட்சி அணிகளையும் கேட்டுக்கொள்கிறது.

மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைகொள்கைகளுக்கு எதிராகவும் வேலைநிறுத்த உரிமைக்காகவும் நடைபெறும் இந்தப் பொது வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவு தந்திடவேண்டுமாய் அனைத்து கட்சிகளையும் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், ஆட்டோ, டெம்போ, கடடுமானம், பஸ் உரிமையாளர்களையும் , திரையரங்கு உரிமையளர்களையும்,வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கிறது.

நாரா.கலைநாதன்
செயலாளர், இந்திய கம்யுனிஸ்ட்கட்சி புதுவை மாநிலக்குழு

(தா.முருகன்) செயலாளர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேசக்குழு

Leave a Reply