விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி…
நாளை காலை புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பேரணி-ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பிஜேபி அரசே! புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பிஜேபி கூட்டணி அரசே!!
இந்தியாவில் வறுமை ஒழிப்பை சாத்தியமாக்க (MGNREGA) 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தற்போது ஒதுக்கி உள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் “கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது “நாடு முழுவதும் வேலை செய்ய ஜாப் கார்டு வைத்துள்ள 15 கோடி குடும்பங்களுக்கு வேலை வழங்க 4 லட்சம் கோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்திடு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (சட்டம்) திட்டத்தில் புதுச்சேரி – காரைக்காலில் உள்ள 108 கிராமப் பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலையை 200 நாட்களாக வழங்கு.
ரூபாய் 294 சம்பளத் தொகையை ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கு. வேலைத்தளத்தில் சட்டத்தில் கூறியுள்ள அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திடு.
நகரப் பகுதிகளுக்கும் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்து. 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 75 ஆயிரத்து 406 பயனாளிகள் குடும்பங்களுக்கு 75 லட்சத்து 40 ஆயிரத்து 600 மனித வேலை நாட்கள் உருவாக்கிட ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கிடு. இந்த நிதியை வேறு செலவினங்களுக்கு மடைமாற்றம் செய்யக்கூடாது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துக் கொடு.
வேலைத் தளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கிடு.
திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 66 வகையான வேலைகளை நடைமுறைப்படுத்து. எக்காரணம் கொண்டும் இயந்திரத்தை வேலையில் பயன்படுத்தக்கூடாது.
வீடற்ற அனைத்துத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, வீடு கட்ட மானியம் வழங்கிடு.
பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நியாய விலைக் கடையை உடனே திறந்து கேரளம், தமிழகம் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மானிய விலையில் வழங்கிடு.
இலாபத்தில் இயங்கும் புதுச்சேரி மின் துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே.!
நாள்: 29.07.2023 சனிக்கிழமை, காலை 10 மணி இடம்: பழைய பேருந்து நிலையம், புதுச்சேரி. அனைவரும் வருக.